வங்கி லாக்கர் சாவிகளைத் தொலைத்துவிட்டீர்களா??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தற்போதைய காலகட்டத்தில் வங்கியில் லாக்கர்களை வைத்துக்கொள்வது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. ஒரு வங்கி லாக்கர் வசதியைத் அளிக்கவிட்டால் அவ்வங்கியில் சேமிப்புக் கணக்கினைக் கூட தொடங்க விரும்பாத மக்கள உள்ளனர்.

 

பெரும்பாலான வங்கிகள் லாக்கர் வசதியைத் தருகின்றன என்றாலும், அனைத்து வங்கிக்கிளைகளிலும் லாக்கர் வசதி இருப்பதில்லை.

வங்கி லாக்கர் கட்டணம்

வங்கி லாக்கர் கட்டணம்

வங்கிகள் அளிக்கும் லாக்கர் சேவைக்கு கட்டணம், வங்கிக்கு வங்கி மாறுபடும். லாக்கர்களின் அளவினைப் பொறுத்தும் மாறுபடும். குறைந்தபட்சம் ரூ. 2500 லிருந்து லாக்கர் கட்டணம் உள்ளது. பெரும்பாலான வங்கிகள் லாக்கருக்கான வாடகையினை முன்னதாகவே செலுத்துமாறு நிர்ப்பந்திக்கின்றன. செலுத்தப்பட்ட வாடகை எக்காரணத்தினைக் கொண்டும் திருப்பித்தரப்படமாட்டாது. பெரும்பாலான வங்கிகள் ஒரு நிதியாணடுக்கு முன்னதாகவே கட்டணத்தினை வசூலிக்கின்றன.

லாக்கர்

லாக்கர்

லாக்கருக்கு இரண்டு சாவிகள் இருக்கும். ஒரு சாவியினை குறிப்பிட்ட எண் கொண்ட லாக்கரின் உரிமையாளரிடம், வங்கி அளிக்கும். மற்றொரு சாவியினை வங்கி தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்ளும். நீங்கள் வங்கிக்கு சென்று லாக்கரைத்திறக்க விரும்பினால், வங்கிக்கிளையிலிருந்து ஒரு அலுவலர் தமது சாவியினைக் கொண்டு லாக்கரைத்திறக்க உதவுவார். அதே நேரத்தில், வாடிக்கையாளர் தனது சாவியினையும் பயன்படுத்தி இரண்டு சாவிகளும் ஒரே நேரத்தில் நுழைக்கப்பட்டால்தான் லாக்கர் திறக்கப்படும்.

லாக்கர் சாவி தொலைந்துவிட்டதா??
 

லாக்கர் சாவி தொலைந்துவிட்டதா??

உங்களிடம் உள்ள சாவியினை வைத்த இடத்தினை மறந்துவிட்டாலோ, அல்லது சாவியினைத் தொலைத்துவிட்டாலோ, முதல் காரியமாக இத்தகவலை உங்கள் வங்கி மேலாளருக்கு தெரியப்படுத்தவேண்டும். எழுத்து மூலமாகத் தெரியப்படுத்துவது சிறந்தது.

லாக்கர் திறக்கப்படுவது எப்படி

லாக்கர் திறக்கப்படுவது எப்படி

வங்கியிடம் வேறு டூப்ளிகேட் சாவி இருந்தால், அதைக்கொண்டு திறப்பதா அல்லது, லாக்கரை உடைத்து திறப்பதா என்று வங்கி முடிவு செய்யும். பூட்டு திறப்பவரை அழைத்து இப்பணி தொடரப்படும். இச்செயல் வாடிக்கையாளர் முன்னிலையில் நடைபெறும்.

லாக்கர் மாற்று சாவி தயாரிக்கும் செலவு

லாக்கர் மாற்று சாவி தயாரிக்கும் செலவு

லாக்கருக்கு மாற்று சாவி தயாரிப்பதற்கு அல்லது புதிய லாக்கர் பெறுவதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்பதை உறுதியிட்டுக் கூறமுடியாது. லாக்கர் தயாரித்த நிறுவனம் மூலம் டூப்ளிகேட் சாவி செய்வதற்கு ரூ. 5000 வரை செலவாகக் கூடும்.

அனைத்து செலவுகளும் உங்கள் தலையில் தான்..

அனைத்து செலவுகளும் உங்கள் தலையில் தான்..

சாவி தொலைந்ததனால், லாக்கருக்கு மாற்று சாவி தயாரிப்பதற்கு அல்லது லாக்கரை உடைத்துத் திறப்பதற்கு மற்றும் இதனுடன் சார்ந்த நடவடிக்கைகளுக்கான செலவுகள் அனைத்தும் உங்களிடமிருந்தே வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இணைதள தகவல்

இணைதள தகவல்

வங்கிகளின் இணையதளப் பக்கத்திலேயே, சாவி தொலைந்துபோனால், லாக்கருக்கு மாற்று சாவி தயாரிப்பதற்கு அல்லது லாக்கரை உடைத்துத் திறப்பதற்கு மற்றும் இதனுடன் சார்ந்த நடவடிக்கைகளுக்கான செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளரிடமிருந்தே/ லாக்கர் உரிமையாளரிடமிருந்தே வசூலிக்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

முடிவுரை

முடிவுரை

சாவிகளைத் தொலைத்துவிட்டு, லாக்கருக்கு மாற்று சாவி தயாரிப்பதற்கு அல்லது லாக்கரை உடைத்துத் திறப்பதற்கு மற்றும் இதனுடன் சார்ந்த நடவடிக்கைகளுக்காக பெரும் செலவு செய்வதைவிட, லாக்கர் சாவிகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுவது மிகவும் சிறந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lost Your Bank Locker Keys? Here is What You Should Do

It's almost inevitable these days to have a bank locker. In fact, individuals these days do not even bother opening an account if a bank is not able to offer them a bank locker.
Story first published: Saturday, February 7, 2015, 16:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X