சிட் பண்ட் திட்டங்களில் என்ஆர்ஐ-களின் முதலீடு சாத்தியமா?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தற்பொழுது கிடைக்கப் பெரும் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் சிட்பண்ட் எனப்படும் சீட்டு நிதி திட்டமும் ஒன்று. சமீபத்தில் நடந்த சாரதா சீட்டு நிதித் திட்டத்தின் ஊழலுக்குப் பிறகு, சீட்டு நிதித் திட்டம் அபாயகரமான முதலீட்டுத் திட்டமாகவே கருதப் படுகிறது.

 

சுவாரஸ்யமாக, உள்நாட்டுக் குடிமக்களைப் போல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் சீட்டு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ ஒப்புதல்

ஆர்பிஐ ஒப்புதல்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் சீட்டு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யச் சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. எனினும், இதற்கென்று சில வழிமுறைகள் உண்டு.

செக் பாயின்ட்

செக் பாயின்ட்

உதாரணமாக, இந்த முதலீடு நாடு திரும்பியோர் அடிப்படையில் செயல்படும். இதன் பொருள், வெளிநாடு வாழ் இந்தியர் சீட்டு நிதி திட்டத்தில் முதலீடு செய்யும்பொழுது, அந்தப் பணத்தை வேறு நாட்டிற்கு எடுத்துச் செல்ல இயலாது. எனவே, அவசர காலத் தேவைக்குக் கூட இந்தப் பணத்தைத் தாம் வாழும் நாட்டிற்கு எடுத்துச் செல்ல இயலாது.

அளவுகோல் எதுமில்லை..
 

அளவுகோல் எதுமில்லை..

வெளிநாடு வாழ் இந்தியர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு தகவல், இந்தத் திட்டத்தில் வரம்பு கிடையாது. எனவே, ஒருவர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

இத்திட்டத்திற்கான நிதி, வெளிநாடு வாழ் இந்தியர் பராமரிக்கும் வங்கி கணக்கில் இருந்து உரிய வங்கி வழிமுறைகளின் படி செலுத்துதல் அவசியம். ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவித்த இந்த நடவடிக்கை நாட்டில் அந்நிய செலாவணி அதிகரிக்க உதவுகிறது.

சாரதா சிட் பண்ட்

சாரதா சிட் பண்ட்

இந்தியாவில் சீட்டு நிதித் திட்டம் சற்று கடினமான திட்டமாகவே கருதப்படுகிறது. ஏனெனில் வங்காளத்தில் சாரதா சீட்டு நிதியின் ஊழலுக்குப் பிறகு இது ஆபத்தான முதலீடாகவே நம்பப் படுகிறது. மேற்கூறிய சீட்டுத் திட்டத்தில் 17லட்சம் முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தை இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசு

மாநில அரசு

எனினும், இந்தியாவில் சீட்டு நிதிகள் மாநில அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் சீட்டு நிதித் திட்டங்கள் ரூ.10,000 கோடிகளில் செயல்படுகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது.

10,000 சீட்டு நிறுவனங்கள்

10,000 சீட்டு நிறுவனங்கள்

நாட்டில் 10,000 பதிவு செய்யப்பட்ட சீட்டு நிதி நிறுவனங்கள் உள்ளன என்றும் மதிப்பிட்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can NRIs Invest In Chit Funds In India?

Reserve Bank of India granted permission for NRIs to invest in chit funds. However, this comes with some guidelines.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X