இத நீங்க சொல்லியே ஆகனும்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நமக்குக் கிடைக்கும் வருமானத்தில், வரியில்லா வருமானம் என்ற பிரிவில் வரும் வருமானத்திற்கு, உண்மையிலேயே எந்த விதமான வரிகளும் இல்லை என்பது உண்மை.

ஆனால் வரியைத் தாக்கல் செய்யும் போது இது குறித்த விபரங்களை நீங்கள் கண்டிப்பாக அளிக்க வேண்டும். வரியில்லா வருமானங்கள் குறித்த தகவல்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தவறு..

தவறு..

நம்மில் பலரும் இந்த வருமானத்திற்கு வரி இல்லை என்பதால், இதை நாம் வருமான வரி தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று.

என்ன அவசியம்..

என்ன அவசியம்..

வரியில்லா வருமானம் பற்றிய தெளிவான தகவல் இல்லையா? கவலை வேண்டாம் சில எடுத்துக்காட்டுகள் உடன் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்கவும்.

சேமிப்பு கணக்கின் வட்டி

சேமிப்பு கணக்கின் வட்டி

வங்கிகளில் உள்ள சேமிப்பு கணக்குகளின் மூலம் கிடைக்கும் வட்டியில் ரூ.10,000 வரையிலும் வரி கிடையாது.

எடுத்துக்காட்டாக நீங்கள் வங்கி சேமிப்பு கணக்கின் மூலமாக ரூ.8000/-ஐ வட்டியாகப் பெற்றால் உங்களுக்கு வரி விலக்கு உண்டு. இதற்காக நீங்கள் இந்த வட்டி பணத்தைக் குறிப்பிட வேண்டியதில்லை என்று பொருள் கிடையாது. இதனை வரியைத் தாக்கல் செய்யும் நேரங்களில் காட்ட வேண்டியது அவசியமாகும்.

 

வரி இல்லா பத்திரங்களின் வட்டி

வரி இல்லா பத்திரங்களின் வட்டி

சில ஆண்டுகளுக்கு முன்னர்ச் சில வரி இல்லா பத்திரங்கள் தொடங்கப்பட்டன. இந்திய இரயில்வே நிதி கழகம், ஹட்கோ, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் போன்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட இந்தப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரிகள் கிடையாது.

எனவே, இந்த வகைப் பத்திரங்களை நீங்கள் வைத்திருந்து, அதன் மூலம் வட்டியைப் பெற்றால், அந்தத் தொகையை வருமான வரி தாக்கல் செய்யும் போது காட்டி விட்டு, பின்னர் விலக்கு கேட்க வேண்டும்.

 

தனிநபர் சேமநல நிதியின் வட்டி (PPF)

தனிநபர் சேமநல நிதியின் வட்டி (PPF)

PPF என்றழைக்கப்படும் தனிநபர் சேமநல நிதியில் முதலீடு செய்யும் தொகையின் வட்டிக்கு வரி கிடையாது.

எனினும், இந்தத் தொகையை வருமான வரி தாக்கல் செய்யும் போது காட்ட வேண்டியது அவசியமாகும்.

 

பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த வருமானம்

பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த வருமானம்

இது பெரும்பான்மையாக முதலீட்டு லாபத்திற்குப் பொருந்த கூடிய பிரிவாகும். நீங்கள் பங்குகளை வாங்கி, ஒரு ஆண்டுக்கும் மேலாக வைத்திருந்து பின் அவற்றை விற்றால், இதற்கான மூலதன இலாபத்தை நீங்கள் செலுத்த தேவையில்லை.

ஏனெனில், ஒரு ஆண்டுக்கும் மேலாக வைத்திருக்கும் பங்குகளுக்கு முதலீடும் இலாபம் பொருந்துவதில்லை. ஆனால், இவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் இலாப தொகையை வருமான வரி செலுத்தும் போது காட் வேண்டும்.

 

டிவிடன்ட் வருமானம்

டிவிடன்ட் வருமானம்

முதலீட்டாளர்கள் பெரும் டிவிடென்ட் வருமானத்திற்கும் கூட வரி இல்லை. நீங்கள் வைத்துள்ள பங்குகளுக்கு இது பொருந்தும். எனினும், இந்த டிவிடன்ட் தொகையை வருமான வரி செலுத்தும் போது குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.

நிறைவாக

நிறைவாக

நீங்கள் அனைத்து வகையான வருமானங்களையும் வருமான வரி தாக்கல் செய்யும் போது காட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதில் நிரந்த வைப்பு நிதிகள், தொடர் வைப்பு நிதிகள் மற்றும் அஞ்சலக வைப்பு நிதிகள் போன்றவற்றின் வட்டிகளும் அடங்கும்.

 

அறிவுரை..

அறிவுரை..

பெரும்பாலானவர்கள் தங்களுடைய சேமிப்பு கணக்கின் வட்டியை வருமான வரி தாக்கல் செய்யும் போது குறிப்பிடுவதில்லை. இது முழுவதும் தவறான செயலாகும் மற்றும் உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆகஸ்ட் 31

ஆகஸ்ட் 31

வருமான வரியைத் தாக்கல் செய்ய இறுதி நாளாக இருப்பது ஆகஸ்ட் 31 என்பதை நினைவில் கொள்ளுங்கள் மற்றும் இது வழக்கமான ஜுலை 31-ல் இருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Tax Free Incomes That You must Disclose When Filing Your Tax Returns

Tax free income is no doubt tax free, but, it must be declared when filing your tax returns. Many individuals consider this as tax free and hence decide not to mention in ITR.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X