யூலிப் திட்டத்தைப் பற்றி முழுமையாகத் தெரியுமா..?

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சேமிப்பு என்பது இந்தியர்களின் உணர்வுகளுடன் கலந்ததது. ஒவ்வொரு குடும்பமும் தங்களுடைய வருங்காலத்திற்காக வெவ்வேறு வழிகளில் சேமிக்கின்றன. தற்பொழுது இந்தியாவில் உள்ள பல்வேறு சேமிக்கும் முறைகளில் யூனிட் லிங்க்ட் காப்பீட்டுத் திட்டங்கள் (யூலிப்கள்) மிகவும் பிரபலமாக உள்ளது.

யூலிப்கள் பிற வரிச் சேமிப்பு திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி, வங்கிகளின் நிலையான வரிச் சேமிப்பு வைப்பு நிதிகள், தேசிய சேமிப்புப் பத்திரம், மற்றும் ஈக்விட்டி லிங்க்டு சேவிங் திட்டங்கள் போன்றவற்றிற்குக் கடுமையான போட்டியாளராக விளங்குகின்றது.

யூலிப் திட்டத்தைப் பற்றி முழுமையாகத் தெரியுமா..?

வரிச் சேமிப்பு மற்றும் காப்பீடு விருப்பத்தை யூலிப் திட்டங்கள் ஒருசேர வழங்குவதால், இந்தியாவில் யூலிப் திட்டங்கள் மிகப் பிரபலமாக உள்ளது. உண்மையில், இந்தத் திட்டங்களை விட நல்ல வருமானத்தை வழங்கும் பிற பாரம்பரிய காப்பீடு திட்டங்கள் சந்தையில் இருந்தாலும் யூலிப்கள் பிரபலமாகவே உள்ளன. யூலிப்கள் நீங்கள் செலுத்திய பிரீமியத்தைப் போன்று 10 மடங்கு வரை காப்பீடு அளிக்கின்றன.

யூலிப் திட்டங்களின் செயல்பாடு என்பது வங்கி நிரந்தர வைப்பு நிதியை விட மிகச் சிக்கலானதாக இருக்கிறது. எனவே இந்த யூலிப்கள் எப்படிச் செயல்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளவது மிக முக்கியமானது.

நீங்கள் யூலிப்கள் திட்டங்களில் இருந்து பகுதியளவு பணத்ததை எடுக்க முடியுமா?

யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் பிளான்கள் (யூலிப்கள்) வரி சேமிப்புடன் காப்பீட்டின் நன்மையையும் சேர்ந்தே வழங்கும் மிகப் பிரபலமான முதலீட்டு திட்டங்களாக உள்ளன. எனவே இங்கு யூலிப்பை தவிர்த்து பங்கு சந்தையிலும் முதலீடு செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. ஆகவே நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் வருமானம் பெற முடியும்.

யூலிப்கள் எப்படி வேலை செய்கின்றன ?

இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்வதே சிறந்தது. நீங்கள் இந்தத் திட்டத்தைத் தொடங்கும் பொழுது கண்டிப்பாகப் பிரீமியம் செலுத்த வேண்டும். நீங்கள் ரூ .50,000 ஐ பிரீமியமாகச் செலுத்துகின்றிர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்தப் பிரீமியத்தில் இருந்து காப்பீடு நிறுவனம் பிரீமியம் ஒதுக்கீடு கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும்.

பிரீமியம் ஒதுக்கீடு கட்டணமானது கமிஷன்கள் மற்றும் பிற விற்பனை செலவுகள் உட்பட ஆரம்பக் கட்ட செலவுகளை ஈடு கட்ட பயன்படுத்தப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து நிதி மேலாண்மை கட்டணம் மற்றும் இறப்புக் கட்டணம் உட்படப் பிற கட்டணங்கள் யூனிட் லிங்க்ட் காப்பீட்டுத் திட்டங்கள் கீழ் பிடிக்கப் படுகின்றன. இதில் இறப்புக் கட்டணம் மிக அதிக அளவில் இருக்கும். இது நீங்கள் காப்பீடு பிரிமியமாகக் கட்டிய பணத்தைத் தவிர வேறில்லை. ஆக மொத்தத்தில் நீங்கள் கட்டிய பிரீமியத்தில் உங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதைக் கணிப்பது மிகவும் கடினமாகும். ஆனால், இது யூலிப் திட்டத்தில் வசூலிக்கப்படும் அதிகக் கட்டணம் என்பது மட்டும் நிச்சயம்.

எனவே, பல்வேறு கட்டணங்களைக் கழித்த பின்னர்ப் பின்னர் இறுதியில் உங்களுடைய கணக்கில் ரூ 46 முதல் 47,000, வரை வரவு வைக்கப்ப்படும். இப்போது, நீங்கள் மீதியுள்ள ரூ .45,000 எந்த நிதியில் முதலிடு செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

நீங்கள் ஒரு பிரத்யேக ஈக்விட்டி ஃபண்டை தேர்வு செய்தால், உங்களுடைய பணம் அதே நிறுவனத்தின் பங்குகளுக்கு ஒதுக்கப்படும்.

மறுபுறம், நீங்கள் ஒரு கடன் சார்ந்த நிதியை தேர்வு செய்யலாம். அல்லது உங்களுக்குப் பங்கு அல்லது கடன் நிதியின் செயல்திறன் திருப்பதியாக இல்லை எனில் ஒரு நிதியிலிருந்து மற்றொரு நிதிக்கு மாற்றிக் கொள்ளலாம்.

இப்போது, உங்களுடைய நிதியின் நிகரச் சொத்து மதிப்பு (என்ஏவி) ரூ 10 என்றால், உங்களுக்கு 10 ரூபாய் மதிப்புள்ள 4500 அலகுகள் கிடைக்கும். அடுத்த ஆண்டும் நீங்கள் அதே நிதியில் தொடர்ந்து முதலீடு செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாம். அடுத்த வருடம் உங்க்களுடைய நிதியின் NAV ரூ 11 ஆக உயர்ந்துள்ளது எனில் உங்களுக்கு 4091 அலகுகள் கிடைக்கும்.

நீங்கள் 5 வருடம் கழித்து உங்களுடைய முதலீட்டை திரும்பப் பெற விரும்பினால் உங்களுடைய மொத்த அலகும் அப்போதைய என்ஏவி மூலம் பெருக்கப் பட்டு கிடைக்கும் மொத்தத் தொகை உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.

அவ்வாறு இல்லாமல் கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால், அவருடைய அனைத்து அலகுகளின் மொத்த மதிப்பு மற்றும் ஒரு வருடத்தின் பிரீமியத்தைப் போன்று 10 மடங்கு தொகை, கணக்கு தொடங்கியவரின் வாரிசுக்கு கிடைக்கும்.

எனவே, யார் யாரெல்லாம் யூலிப்களைத் தேர்வு செய்ய வேண்டும்?

உங்களுக்குக் காப்பீட்டு தேவை எனில், நீங்கள் யூலிப்பை தேர்வு செய்யலாம். உங்களுடைய காப்பீடானது ஆண்டுப் பிரிமியத்தைப் போன்று 10 மடங்காகும். எனவே நீங்கள் ஆண்டுக்கு ரூ .1 லட்சம் பிரீமியம் செலுத்துகின்றிர்கள் எனில் உங்களுக்கு ரூ .10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.

எனினும், யூலிப்களின் மிகப் பெரிய பாதகமான அம்சம் என்னவெனில் அதன் அதிக ஒதுக்கீடு கட்டணம் ஆகும். உண்மையில், இதில் உங்களுக்குக் காப்பிடு வசதி கிடைத்தாலும் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வருமானம் கிடைக்காது. இதைத் தவிர உங்களுக்கு வருமான வரிச் சட்டம் 80 சியின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Do ULIPs Work?

Unit Linked Insurance Plans (ULIPs) are quiet popular in India. They compete with several other tax saving instruments.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X