பர்சனல் லோன் வாங்கனும்ன இந்தக் கட்டணமெல்லாம் செலுத்த வேண்டியிருக்கும் !

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் பர்சனல் லோன்கள் மிகவும் பிரபலம். அதுவும் நடுத்தர வர்க்கத்தினரிடையே பர்சனல் லோன் ஒரு முறையாவது வாங்காதவரைப் பார்க்கவே முடியாது. மருத்துவச் செலவு, பிள்ளைங்க படிப்பு, தங்கச்சி கல்யாணம்னு எவ்வளவோ காரணங்கள்.

இந்தியாவில் பர்சனல் லோன்கள் தான் மிகவும் விலை அதிகமானவை. அதாவது இவற்றிற்கு வட்டி கொடுத்து மாளாது அதற்கும் மேல் அவற்றிற்கு விதிக்கப்படும் கட்டணங்கள் கடன் வாங்குபவர் மீது கடும் சுமையை ஏற்றக்கூடியவை. தற்போது இந்தியாவில் பல்வேறு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பர்சனல் லோன்களைத் தருகின்றன.

இவற்றின் மீது வித்திக்கப்படும் கட்டணங்கள் என்னென்ன என்பதை இது உங்களுக்காகத் தருகிறோம்.

இன்சூரன்ஸ் பிரிமியக் கட்டணங்கள்

இன்சூரன்ஸ் பிரிமியக் கட்டணங்கள்

பர்சனல் லோன்கள் அல்லது தனி நபர் கடன்கள் எடுக்கப்படும் பொழுது அதனோடு கூடவே இன்சூரன்ஸ் பிரிமியத் தொகையும் கட்டணமாக விதிக்கப்படுகின்றது. இந்தத் தொகை ஒவ்வொரு வங்கி அல்லது நிறுவனத்தைப் பொறுத்து வேறுபடும். வங்கிகள் குறைந்த பிரிமியத் தொகையை வசூலிக்கின்றன. உதாரணமாக 4 லட்சம் பெறுமானமுள்ள ஒரு கடனுக்கு ஒரு பிரபல தனியார் வங்கி இன்சூரன்ஸ் பிரிமியத் தொகையாக 4000 ரூபாய்க்கு சற்று அதிகமான தொகையை மூன்று வருட காலத்திற்கு வசூலிக்கிறது. இந்தத் தொகை எடுக்கப்படும் லோன் தொகையில் உள்ளடங்கியதாக இருக்கும்.

கடன் வாங்குபவர் இறந்து விட நேர்ந்தால் வங்கி அல்லது அந்த நிதி நிறுவனம் கடன் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து வசூலித்துக்கொள்ளும்.

 

 

முன்கூட்டிய கடன் அடைப்புக் கட்டணம் (ப்ரி பேமென்ட் சார்ஜ்)

முன்கூட்டிய கடன் அடைப்புக் கட்டணம் (ப்ரி பேமென்ட் சார்ஜ்)

பர்சனல் லோன்கள் மேற்குறிப்பிட்ட கட்டண விதிமுறையைக் கொண்டதாக இருக்கும். எனினும் பஜாஜ் பின்சர்வ் போன்ற சில நிறுவனங்கள் முன்கூட்டிய கடனைச் செலுத்த எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. பல வங்கிகளில் கடனை முன்கூட்டியே முடிக்க இந்தக் கட்டணம் 4 சதவிகிதம் வரை கூட இருக்கும்.

எனினும் இந்தக் கடன்கள் எவ்வளவு நாளை கடந்துள்ளன என்பதைப் பருத்து இந்தக் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாகத் திருப்பிச் செலுத்தும் காலம் இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில் வங்கி மீதமுள்ள கடன் பாக்கியில் 2 சதவிகிதம் மட்டுமே வசூலிக்கலாம்.

 

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

பர்சனல் லோங்களுக்கான வட்டி விகிதங்கள் உண்மையில் மாறுபட்டு இருக்கும். சில வங்கிகள் அதிகபட்சமாக 24 சதவிகிதம் வரைகூட வட்டியை வசூலிக்கின்றன என்றாலும் இது 12 சதவிகித அளவிற்குக் குறைந்த அளவிலும் சில நேரங்களில் இருக்கும். ஏன் இந்த வட்டி விகிதங்கள் மாறுபடுகின்றன? நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு ஒரு வங்கியில் கணக்கு இருந்து உங்கள் சம்பளமும் அதே வங்கியில் உள்ள உங்கள் கணக்கில் செலுத்தப்பட்டால் இது கார்பொரேட் அக்கவுண்ட் எனப்படும் நிறுவனக் கணக்கின் கீழ் வருவதால் உங்களுக்குக் குறைந்த வட்டி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

 

 

ஆவணக் கட்டணங்கள் (ப்ராசசிங் சார்ஜஸ்)

ஆவணக் கட்டணங்கள் (ப்ராசசிங் சார்ஜஸ்)

இந்தக் கட்டணமும் வங்கிக்கு வங்கி வேறுபாடும். சில வங்கிகள் இந்தக் கட்டணத்திற்குச் சலுகை அளிப்பதும் உண்டு. உதாரணமாகத் தற்போது ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி பர்சனல் லோங்களுக்கு இதுபோன்ற எந்தக் கட்டணமும் விதிப்பதில்லை. அதேநேரம் முன்கூட்டியே கடனை நீங்கள் முடிக்க விரும்பினால் இந்த வங்கி அதிகக் கட்டணம் வசூலிக்கிறது.

முடிவாக...

முடிவாக...

எனவே நெருக்கடியான சூழ்நிலைகளில் கடனுக்குப் பர்சனல் லோன்கள் சரிப்பட்டுவராது. இவை மிக அதிகமான வட்டி விகிதங்கலோடும் கட்டணத்துடனும் வருகின்றன. எனவே இவற்றைத் தவிர்த்து பிற கடன்களைப் பரிசீலிப்பது நல்லது. பங்குகளை அடகு வைத்தோ, நகைகளை அடகு வைத்தோ கடன் பெறுவது மலிவானதாகவும் குறைந்த கால அவகாசத்தில் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Are The Various Charges On Personal Loans In India?

Personal loans are the most expensive set of loans in India. They come with various charges, which only increases the cost to the borrower. At the moment various banks and financial institutions provide personal loans in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X