வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இருக்கும் பிபிஎப் கணக்கை மாற்றுவது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வூதியம் பெறுவோருக்கு மிகவும் பிரபலமான மற்றும் வரி சேமிக்க கூடிய சேமிப்பு திட்டம் என்றால் அது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான்.

 
வங்கி மற்றும் தபால் நிலையங்களில் இருக்கும் பிபிஎப் கணக்கை மாற்றுவது எப்படி..?

அஞ்சல் துறை மற்றும் அங்கீகாரம் பெற்ற வங்கிகள் பொது வருங்கால வைப்பு நிதி கணக்குகள் தொடங்க வசதி அளிக்கின்றன.

 

ஆனால் பெரும்பாலான நிதி நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணத்தைச் செலுத்த இணைய வழி சேவையை வழங்குவதில்லை. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

தனிநபர் ஒருவரால் ஒரே ஒரு பிபிஎஃப் கணக்கை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். பல முதலீட்டாளர்கள் வங்கியில் நேரில் சென்று பணம் செலுத்த வேண்டியுள்ளதால் அவர்கள் முதலீட்டைப் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர்.

அதுபோன்ற முதலீட்டாளர்கள் எந்த வங்கியில் இணையம் மூலமாக முதலீடு செய்ய முடியுமோ அந்த வங்கிகளுக்கு மாற்றம் செய்து கொண்டு எந்த இடையூறும் இல்லாமல் முதலீட்டைத் தொடரலாம். அதே போன்று இடையில் விடப்பட்ட கணக்கையும் ரூ.500-க்கு ரூ.50 விடுபட்ட தொகையாக செலுத்தி கணக்கை மீண்டும் தொடரலாம்.

வருங்கால வைப்பு நிதி கணக்கை ஒரு வங்கியில் இருந்து பிற வங்கிக்கு அல்லது அஞ்சல் துறைக்கு மாற்றுவதற்கு முதலில் நீங்கள் கணக்கு வைத்துள்ள நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.

பின்னர் உங்கள் கணக்கு சம்மதமான விவரங்கள், மானினேஷன், மாதிரி விண்ணப்ப கையொப்பம் போன்றவை நிலுவை தொகை செக்/டிடி உடன் நீங்கள் குறிப்பிட்டுள்ள வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

புதிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் உங்கள் ஆவணங்களை ஏற்கும் போது புதிய பிபிஎஃப் கணக்கு திறக்கும் படிவம், பரிந்துரையைப் படிவத்துடன் அசல் பிபிஎஃப் பாஸ்புக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி, அடையாள சான்று போன்றவற்றையும் சமர்ப்பித்தல் வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to transfer a PPF account to other bank/post office?

How to transfer a PPF account to other bank/post office?
Story first published: Monday, August 1, 2016, 18:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X