தபால் அலுவலகத்தின் மொபைல் பேங்கிங் செயலி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கி கணக்குகளில் கணக்கு வைத்துள்ளோர் பலர் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கைத் துவங்குவது, முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று நினைத்தாலும் இணையதள வசதிகள் போன்று பல வசதிகள் இல்லை என்று தவிர்த்து வந்தனர்.

 
தபால் அலுவலகத்தின் மொபைல் பேங்கிங் செயலி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

ஆனால் இப்போது தபால் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு கணக்குகளுக்கும் இணையதள வங்கி சேவை உள்ளது அது மட்டும் இல்லாமல் 'இந்தியா போஸ்ட் மொபைல் பேங்கிங்' என்ற செயலியும் உள்ளது தெரியுமா உங்களுக்கு.

இது எல்லாம் தபால் அலுவலகத்தின் வங்கி சேவை முழுவதுமாக துவங்குவதற்கு முன்பே அதில் ஏற்கனவே உள்ள சேமிப்பு திட்டங்களின் கீழ் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே நாம் இப்போது இந்தியா போஸ்ட் மொபைல் பேங்கிங் செயலி பற்றித் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில விவரங்களைப் பார்ப்போம்.

பாதுகாப்பு அறிவுரை

பாதுகாப்பு அறிவுரை

தபால் துறை உங்கள் எம்-பின், பரிவர்த்தனை கடவுச்சொல், பயனர் ஐடி மற்றும் ஓடிபி போன்றவற்றை ஒரு போதும் கேட்காது என்பதை நினைவில் கொள்க.

செயலியில் உள்ள தெரிவுகள்

செயலியில் உள்ள தெரிவுகள்

கணக்கு விவரங்கள், பணம் அனுப்புதல், கட்டணம் செலுத்துதல், செக்குகள், கோரிக்கைகள் போன்ற தெரிவுகள் உள்ளன.

தெரிவுகளின் விளக்கங்கள்

தெரிவுகளின் விளக்கங்கள்

கணக்குகள் தெரிவில் சென்று சேமிப்பு கணக்கு, பிபிஎஃப் கணக்கு, தொடர் சேமிப்பு கணக்குகள், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற அனைத்து சேமிப்பு கணக்கு விவரங்களையும் இங்குப் பார்க்கலாம்.

பண பரிமாற்றும் செய்தல், கட்டணம் செலுத்துதல், செக்குகள் போன்றவை வங்கி கணக்கில் உள்ளதைப் போன்று அனைத்துச் சேவைகளையும் உங்களுக்கு அளிக்கிறது.

 

பதிவிறக்குவது மற்றும் செயல்படுத்துவது
 

பதிவிறக்குவது மற்றும் செயல்படுத்துவது

தபால் அலுவலகத்தின் மொபைல் பேங்கிங் செயலியை இந்த இணைப்பில் சென்று பதிவிறக்கலாம்.

பதிவிறக்கிய பிறகு செயலியை திறக்கவும், அதில் உள்ள துவக்கவும் என்ற பொத்தானை அழுத்தி உங்களுக்கு அளிக்கப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைக.

ஒரு முறை கடவுச்சொல் போன்ற எவற்றிற்கும் எந்தக் கட்டணங்களும் செலுத்தத் தேவை இல்லை. வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு உங்கள் 4 இலக்க எம்-பின் எண்ணை உருவாக்குக.

 

உதவி மையம்

உதவி மையம்

தபால் அலுவலகத்தின் மொபைல் பேங்கிங் செயலியில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் உள்ள நிலையில் 18004252440 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Post Office App: How to Activate Post Office Mobile Banking Application?

Post Office App: How to Activate Post Office Mobile Banking Application?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X