மன அழுத்தமா? பணிச்சுமையை கையாள ஐந்து பயனுள்ள வழிகள் ..!

By Srinivasan P M
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணியிடங்களில் போட்டி பெரும்பாலும் பணிச்சுமைக்கு வழிவகுக்கும். இதை மனிதவள மேலாளர்கள் எவ்வாறு கையாளவேண்டும் என்று இங்குப் பார்ப்போம்.

 

செயல்திட்டத்தை வரையுங்கள்

செயல்திட்டத்தை வரையுங்கள்

பல பணிகள் குவியும்போது அதைச் செய்ய திட்டமிடாமல் பலர் செயலில் குதித்துவிடுகிறார்கள்.

'பணிச்சுமையைக் கையாள உங்கள் தினசரி வேலைகளைத் திட்டமிடல் அவசியம்' என ஒஸ்வல் மோதிலால் நிதிச் சேவைகள் நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநர் சுதிர் தர் குறிப்பிடுகிறார்.

நேர அவகாசத்திற்குள் முடிக்க வேண்டிய பணிகள், முக்கிய மேலதிகாரிகளின் பணிகள், உங்கள் உறுதுணை தேவைப்படும் பணிகள் மற்றும் நீங்களே செய்துகொள்ளக் கூடிய பணிகள் எனப்பிரித்துக் கையாளுங்கள் என அவர் கூறுகிறார்.

 

பணிச்சுமையை பங்கிட்டுக் கொள்ளுங்கள்

பணிச்சுமையை பங்கிட்டுக் கொள்ளுங்கள்

செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் முடிவில்லாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதில் மற்றவர்கள் பங்களிப்பு தேவைப்படும் பணிகளை இனம் காணுதல் அவசியம்.

ஒரு வேலையை யாருடன் சேர்ந்து சுமுகமாகச் செய்யமுடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார் திரு தர்.வொர்க் பெட்டர் டிரெய்னிங் நிறுவனர் தலைவர் ஸ்வப்நில் காமத் கூறுகையில் 'எல்லாரும் எல்லாவற்றையும் செய்து விட இயலாது என்பது நாமறிந்ததே.

முக்கியத்துவம் குறைவான அல்லது அவசரமற்ற வேலைகளை அதனை நன்றாகச் செய்யக் கூடிய பிறரிடமும் ஒப்படைக்கலாமல்லவா?

 

சீர் செய்து கொள்ளுங்கள்
 

சீர் செய்து கொள்ளுங்கள்

வேலைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளவும் சீராக இயங்கவும் பல வழிகள் இன்று உள்ளன. முக்கியத்துவம் வாரியாக வேலையை வரிசைப்படுத்துதல், நினைவூட்டுதல் மற்றும் மற்றொவர்ரோடு இணைந்து செய்தல் ஆகியவை சில.

"பலர் இன்றும் கூட எளிய வழிமுறைகளான நாட்காட்டிக் குறிப்புகள், செய்யவேண்டிய வேலைகளின் பட்டியல், படிவங்கள், ஆய்வுகள், குழுக்கள், மாதிரிப் படிவங்கள், நூலகங்கள், வழிகாட்டிகள் மற்றும் கலப்புச் செயலிகள் (sharing applications ) போன்றவற்றைப் பயன்படுத்துவதே இல்லை.

ஒருவர் இதில் தேவையானவற்றை ஆராய்ந்து சிறப்பானதை பின்பற்றுவது அவசியம்" என்கிறார் சிஎல் ஹெச் ஆர் சர்விசஸ் நிறுவன அதிகாரி ஆதித்ய நாராயண் மிஸ்ரா.

 

திறம்பட செயல்படுங்கள்

திறம்பட செயல்படுங்கள்

கடின உழைப்பிற்கு மாற்று இல்லாத பொழுது திறமை கை கொடுக்கும்.

"சில பணிகளுக்கு உங்கள் கவனமும் அறிவுக் கூர்மையும் தேவைப்படும் அதே வேளையில் சிறிது முன்பு செய்த வேலைகளைப் போலவே இருக்கும். இது போன்ற வேலைகளை அறிந்து உங்கள் நேரத்தை முக்கிய வேலைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு மதிப்பை உருவாக்க முடிவதோடு உங்கள் குறிக்கோளையும் அடைய இயலும்" என்கிறார் தர்.

 

ஒய்வு மற்றும் இடைவேளை அவசியம்

ஒய்வு மற்றும் இடைவேளை அவசியம்

வேளைகளில் மூழ்கிப் போவது ஒரு நமக்கு இயற்கையான விஷயம். "ஒருவர் கடின உணர்வுகளையும் நினைவுகளையும் விடுத்து சற்று இளைப்பாற வேண்டியது அவசியம்" என்று மிஸ்ரா கூறுகிறார்.

சிலர் பணியிடத்தை விட்டு வெளியில் சென்று ஒரு நடை நடந்து விட்டு வரவும் அல்லது சிறு தூக்கமோ அல்லது ஒரு நல்ல இரவுத் தூக்கமோ எடுப்பது, நண்பர்களுடன் நேரம் செலவிடுவது அல்லது உங்களை இளைப்பாற செய்யும் ஏதாவது ஒன்றையோ செய்யலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Are you stressed? Here are five ways to deal with overwhelming workload

Are you stressed? Here are five ways to deal with overwhelming workload
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X