‘ஹோம் லோன்’ பெறும் முன்பு இதை படிங்க முதலில்..!

வீட்டு கடன் பெறும் போது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் என்னவெல்லாம் சரி பார்க்கின்றன என்று தெரிந்து கொண்டு விண்ணப்பத்தால் இது போன்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பையைச் சேர்ந்த சரிதாவிற்கு வீடு வாங்க வேண்டும் என்பது கனவு. இதற்க இணையத்தில் அவர் பதிவு செய்தவுடன் பல நிதி நிறுவனங்கள் கடன் அளிக்க முன்வந்தன.

 

பின்னர் ஒரு வங்கியில் இவர் கடனுக்காக விண்ணப்பத்தை அளித்தார். ஆனால், சரிதாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

எனவே வீட்டு கடன் பெறும் போது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் என்னவெல்லாம் சரி பார்க்கின்றன என்று தெரிந்து கொண்டு விண்ணப்பத்தால் இது போன்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.

கடன் வரலாறு

கடன் வரலாறு

வங்கிகள் உங்களை நம்புவதற்காக கிரெடிட் ஸ்கோரினை சரிபார்க்கும். உங்கள் கடன் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதில் இது தான் முக்கிய செயல்பாடு ஆகும். கிரெடிட் ஸ்கோரினை வைத்துக் கொண்டு உங்கள் பணப்பரிவர்த்தனை விவரங்களைச் சரிபார்ப்பர்.

கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்களான சிபில் பொன்ற நிறுவனங்கள் நீங்கள் செலுத்த வேண்டிய பில்கள், கடன் தவணைகள் போன்றவற்றை கண்காணிக்கும்.

ஒரு வேலை நீங்கள் உங்களது பழைய கடன், கிரெடிட் கார்டு பில்கள் போன்றவற்றை சரியான நேரத்தில் செலுத்தாமலோ, செலுத்தாமல் விட்டிருந்தாலோ உங்களது கிரெடிட் ஸ்கோர்களை குறைத்துக் காண்பிக்கும். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும் போது வங்கிகள் கடனை திரும்பப் பெற ரிஸ்க் அதிகம் என்ற விதிகளின் படி உங்களது கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கும்.

அதுவே அதிக கிரெடிட் ஸ்கோர் இருக்கும் ஆனால் எளிதாகக் கடன் பெற இயலும்.

 

வருமானம்

வருமானம்

வங்கிகள் நீங்கள் கடன் பெறும் போது அதை நீங்கள் எவ்வாறு திருப்பி அளிப்பீர்கள் அதற்காக உங்கள் கையில் என்ன சம்பளம், சொத்து போன்ற வருமான மூலாதாரங்களை சரிபார்க்கும். இதைப் பொறுத்தே உங்களுக்கு எவ்வளவு கடன் அளிப்பது போன்றவற்றை வங்கிகள் முடிவு எடுக்கும்.

எனவே உங்களது வருமான அவர்கள் வைத்துள்ள அளவை விடக் குறைவாக இருந்தால் கடன் பெற இயலாது.

 

தொழில் மற்றும் அனுபவம்
 

தொழில் மற்றும் அனுபவம்

வங்கிகள் கடன் பெறும் போது நிலையான வேலை உங்களுக்கு இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கும். அது நீங்கள் பொதுத் துறை நிறுவன ஊழியராக இருந்தாலும் சரி, மருத்துவர், இஞ்சினியர், வக்கில் என யாராக இருந்தாலும் சரி.

சொந்தமாக வணிகம் செய்து வருபவர்களை நிலையான வருமானம் இல்லாத காரணத்தினால் கடைசியாகவே வைத்துள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் விண்ணப்பிக்கும் போது எத்தனை வருடம் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள், நிரந்தர பணியா, வருமான சான்றிதழ் போன்றவற்றைச் சரிபார்த்த பிறகே கடனிற்கான விண்ணப்பத்தை வங்கிகள் செயல்படுத்து.

இதுவே உங்கள் மனைவியுடன் இணைந்து கடன் பெறுகிறீர்கள் என்றால் இருவருடைய வருமானமும் சரிபார்க்கப்படும்.

 

முந்திய கடன்கள்

முந்திய கடன்கள்

ஒரு வேலை நீங்கள் ஏற்கனவே ஒரு கடன் பெற்று இருந்து அதற்கான தவணையை நீங்கள் செலுத்தி வரும் போது திருப்பி செலுத்தக் கூடிய அளவு குறைவதினால் தடைப்படலாம். அந்த சமயத்தில் உங்களது கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருப்பின் கடன் அளிப்பதற்கான வாய்ப்பும் உண்டு.

வயது

வயது

உங்கள் வயதைப் பொருத்தும் கடன் விரைவாகப் பெற வாய்ப்பு உள்ளது. கடன் பெறுபவரின் வயது 25 முதல் 40 வயது வரை இருந்தால் எளிதாகக் கடன் திருப்பிப் பெற முடியும் என்றும் அதுவே 60 வயதிற்கு மேற்பட்டோராக இருந்தால் அதிக ரிஸ்க் என வங்கிகள் கருதுகின்றன.

இருப்பிடம்

இருப்பிடம்

நீங்கள் கடன் பெறுவதற்கான இடம் ஏதேனும் சிக்கலில் இருந்தாலும் கடன் பெற இயலாது. அதே போன்று நகரத்தை விட்டு வெளியே உள்ள இடங்களுக்குக் கடன் வழங்கப்படமாட்டாது.

தயார் நிலை

தயார் நிலை

சில வங்கிகள் ஏற்கனவே கட்டி தயாராக உள்ள வீடுகள் அல்லது கட்டிட நிறுவனத்துடன் இனைந்து கடன் அளிக்க வாய்ப்புகள் உண்டு. வ்வாறு கடன் பெறும் போது சில நேரங்களில் வீட்டைப் பெற தாமதம் ஆகலாம் அல்லது பதியிலேயே வீட்டைக் கட்டி முடிக்காமல் போகலாம்.

குறிப்பு

குறிப்பு

வீடு வாங்கும் போது மேலே கூறியவற்றை ஆராய்ந்து கடன் பெறவும். கடந்த சில வருடங்களாகக் கடன் பெறும் வழிமுறைகள் மிகவும் எளிமை ஆக்கப்பட்டுள்ளது. இது பல ரியல் எஸ்டேட் துறையைப் பிரபலப்படுத்தவே அது போன்ற திட்டங்களில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருக்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What banks consider while reviewing your home loan application

What banks consider while reviewing your home loan application
Story first published: Thursday, October 20, 2016, 19:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X