சொந்த வீடு வாங்க விரும்பும் பெண்களா நீங்கள்..? அப்படினா இதை படிங்க..!

ஒரு தவறான கருத்து நமது வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததாக அமையும், ஆனால் அதேசமயம் அந்த முடிவு சரியான தேர்வாக இருந்தால் ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற பெருமையைத் தரும்.

By Siva Lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொந்த வீடு வாங்குவது என்பது அனைவரது வாழ்விலும் மிகப் பெரிய கனவு. இன்றைய பொருளாதார சூழலில் சொந்த வீடு என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு தவறான கருத்து நமது வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததாக அமையும், ஆனால் அதேசமயம் அந்த முடிவு சரியான தேர்வாக இருந்தால் ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற பெருமையைத் தரும்.

சொந்த வீடு என்பது ஒரு கடினமான சவாலாக உள்ளது. வீடு வாங்கும் போது தங்களுடைய நிதி நிலைமை, உடனடியாக செலுத்த வேண்டிய தொகை, EMI மற்றும் வீட்டின் பராமரிப்புக்கு ஆகும் செலவு ஆகியவற்றை நன்கு ஆராய்ந்த பின் முடிவு எடுக்க வேண்டும்.

வீடு வாங்குவது பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இது இன்னும் கொஞ்சம் சவாலான பணி. அதிலும் திருமணமாகாத மற்றும் விவாகரத்தான நடுத்தர வயது பெண்ணாக இருக்கும் பட்சத்தில் ரியல் எஸ்டேட் முதலீடு என்பது பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.

தனியாக இருக்கும் பெண்கள் வீடு வாங்குவது பொருளாதார ரீதியில் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படும். மேலும் அவர்களின் வாழ்க்கை நிலையை ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு சக்தி வாய்ந்த முறையில் எடுத்துச் செல்லும். இது, பெரும்பாலும் பெண்கள் யாரேனும் ஒருவரைச் சார்ந்திருப்பார்கள் என்று நினைப்பதை மாற்றும் ஒரு தெளிவான அடையாளம் ஆகும்.

சொத்தின் மேல் உள்ள முதலீடு பொய்யாகாது, அவர்களுக்கு மேலும் தைரியத்தை கூட்டும். இது ஒரு பயனுள்ள முதலீடாகவும் சுதந்திரமாக செய்படுவதற்கான சின்னமாகவும் விளங்கும்.

திருமணமாகாத மற்றும் விவாகரத்தாகி தனியே இருக்கும் பெண்கள் வீடு வாங்கும் முன் பின்வரும் மூன்று முக்கிய குறிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:

என்ன வாங்கப்போகிறோம் மற்றும் எவ்வளவிற்கு வாங்கப்போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்துதல்

என்ன வாங்கப்போகிறோம் மற்றும் எவ்வளவிற்கு வாங்கப்போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்துதல்

நல்ல நிர்வாகத்திறனோடு வாங்குவது மிகவும் முக்கியம்.ஏனெனில் நிர்வாகத்திறனானது கடனை கட்டுப்படுத்த மட்டுமில்லாமல், வீட்டின் பராமரிப்பு, வரி, காப்பீடு மற்றும் அவசரத் தேவைக்கான சரிய அளவிலான சேமிப்பு ஆகியவற்றைக் கையாள உதவும்.

சொத்துக்களைப் பாதுகாத்தல்

சொத்துக்களைப் பாதுகாத்தல்

தனியாக சொத்து வாங்கும் போது, புதிதாக வாங்கிய சொத்து மீது காப்பீடு செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில் இந்தக் காப்பீடு ஏதேனும் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆதரவாக இருக்கும்.

நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுதல்

நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுதல்

தனியே வீடு வாங்கும் போது எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இருந்தாலும் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையை ஏற்றுச் செயல்படுதல் மிகவும் அவசியமாக உள்ளது.

தனியே வசிக்கும் பெண்கள் தங்களின் பாதுகாப்பு நிலை, தொந்தரவு இல்லாத, ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில் உள்ளதையே விரும்புவார்கள். மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள், அதிக அளவிலான முதலீடு இல்லாத சொந்த வீட்டினைக் கண்டறிய உங்களுக்கு உதவும். மேலும் எந்த மாதிரியான சொத்து உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும், பாதுகாப்புடன் நீங்கள் முதலீடு செய்யும் வகையில் பயனளிக்கும் என்பதையும் உணர்த்தும்.

 

எந்த பிளாட் தேர்வு செய்வது நல்லது

எந்த பிளாட் தேர்வு செய்வது நல்லது

ஒரு படுக்கையறை கொண்ட பிளாட் (அ) அபார்ட்மெண்ட் அவர்களுக்குச் சரியானதாக இருக்கும்.

இரண்டு படுக்கையறை கொண்ட பிளாட்டானது மேலும் செலவை ஏற்படுத்தும், இதனால் உங்கள் பட்ஜெட் அதிகமாகும்.

 

இரண்டு படுக்கையறை கொண்ட பிளாட்

இரண்டு படுக்கையறை கொண்ட பிளாட்

இரண்டு படுக்கையறை கொண்ட பிளாட் வாங்க நினைத்தால், அதனை மேலும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். இன்றைய கலாச்சாரத்தில் வீட்டில் வைத்து அலுவலக வேலையைச் செய்ய வேண்டியுள்ளது. அந்நிலையில் ஒரு படுக்கை அறையை அலுவலக அறையாகப் பயன்படுத்தலாம். வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் நேரத்தைச் செலவழிக்கவும், யோகா செய்யும் அறையாகவும் பயன்படுத்தலாம்.

அறையைப் பகிர்ந்து கொள்ளலாம்

அறையைப் பகிர்ந்து கொள்ளலாம்

ஒரு அறையை உங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ளவதும் நல்ல யோசனை தான். ஆனால் உங்களால் அவர்களுடன் ஒத்துப் போக முடியுமா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இதனால் உங்களுக்கு சில நன்மைகள் ஏற்படும். நண்பரிடம் பெற்றுக் கொள்ளப்படும் வாடகையானது உங்களது கடனை விரைவில் செலுத்த உதவும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

வீடு வாங்குமுன் அக்கம் பக்கத்தில் உள்ள பாதுகாப்பினை ஆராய வேண்டும்.

அக்கம் பக்கத்தில் சுற்றி நடக்கும் நடவடிக்கையைப் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் கண்காணிக்க வேண்டும். இதனால் உங்களுக்கான பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு சரியான முடிவை எடுக்க உதவும்.

 

எந்தத் தளத்தை தேர்வு செய்வது நல்லது

எந்தத் தளத்தை தேர்வு செய்வது நல்லது

ஒரு அப்பர்ட்மெண்ட்டில் தரை தளம் உங்களுக்கு வசதியாக இல்லை என்றால் பாதுகாப்பை கருதி முதல் தளம் (1) அதற்கு மேல் உள்ள குடியிருப்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A Single Woman’s Guide To Buying A House

A Single Woman’s Guide To Buying A House
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X