பேடிஎம் மூலம் ரயில் டிக்கெட்களை எப்படி புக் செய்வது என்று தெரியுமா..?

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து பேடிஎம் பயனர்கள் அதிகரித்துள்ளனர். இப்போது தேசிய நெடுஞ்சாலைகளின் டோல் கட்டணங்களையும் பேடிஎம் மூலம் செலுத்த இயலும்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பேடிஎம் செயலியினை பயன்படுத்தி இணையதளம் மூலமாக பணத்தை சேமிப்பது, இணையதள வங்கியாகப் பயன்படுத்துவது போன்ற பயன்களைப் பெற இயலும்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து பேடிஎம் பயனர்கள் அதிகரித்துள்ளனர். இப்போது தேசிய நெடுஞ்சாலைகளின் டோல் கட்டணங்களையும் பேடிஎம் மூலம் செலுத்த இயலும்.

பேடிஎம் மூலமாக மொபைல் ரீசார்ஜ், டிடிஎச், டேட்டா கார்டு மற்றும் மெட்ரோ கார்டுகள் ரீசார்ஜ், மைபைல் பில் கட்டணங்கள், மின்சார கட்டணங்கள் போன்றவற்றை செலுத்தலாம்.

இவை மட்டும் இல்லாமல் இணையதள ஷாப்பிங், பேருந்து டிக்கெட்கள் மற்றும் ரயில் டிக்கெட்களையும் புக் செய்ய இயலும்.

எனவே பேடிஎம் இணையதளம் மற்றும் செயலியை பயன்படுத்தி ஐஆர்சிடிசி டிக்கெட்களை எப்படி புக் செய்வது என்று இங்குப் பார்ப்போம்.

பேடிஎம் பயன்படுத்தி ரயில் டிக்கெட்களை எப்படி புக் செய்வது?

பேடிஎம் பயன்படுத்தி ரயில் டிக்கெட்களை எப்படி புக் செய்வது?

1. பேடிஎம் செயலி அல்லது www.paytm.com என்ற இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
2. ரயில் என்ற தெரிவை தேர்வு செய்யவும்.
3. பிறகு எங்கிருந்து எங்குச் செல்ல வேண்டும் என்ற விவரங்களை உள்ளிடவும்.
4. பின்னர் பயணம் செய்ய உள்ள தேதியை தேர்வுசெய்துவிட்டு, தேடுதல் பொத்தானை அழுத்தவும்.
5. உங்களுக்கான ரயில்களின் பட்டியல் கிடைக்கும், அதில் இருந்து நீங்கள் செல்ல வேண்டிய ரயிலினை தேர்வு செய்ய வேண்டும்.
6. பிறகு டிக்கெட் புக் செய்யவும் என்பதை கிளிக் செய்க.
7. இப்போது உங்களது ஐஆர்சிடிசி ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும் அல்லது புதியதாக ஒரு ஐஆர்சிடிசி கணக்கை உருவாக்க வேண்டும்.
8. பிறகு பயணிக்க வேண்டிய இடத்தைத் தேர்வு செய்துவிட்டு, பயணிகள் விவரங்களை உள்ளிட வேண்டு.
9. இதனை அடுத்து டிக்கெட் புக் செய்யவும் என்பதை கிளிக் செய்க.
10. கூப்பன் குறியீடுகள் இருந்தால் அதற்கான தெரிவை தேர்வு செய்ய வேண்டும் அல்லது பணத்தை செலுத்துவதற்கான பொத்தானை அழுத்தி பரிவர்த்தனி செய்த பிறகு டிக்கெட்களை புக் செய்துகொள்ளலாம்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் பேடிஎம் மூலம் எப்படிப் பணத்தை செலுத்துவது?

ஐஆர்சிடிசி இணையதளத்தில் பேடிஎம் மூலம் எப்படிப் பணத்தை செலுத்துவது?

ஐஆர்சிடிசி இணையதளத்தில் நீங்கள் பண பரிவர்த்தனையின் போது பேடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்கான தெரிவு இருக்கும். அதனைத் தேர்வு செய்வதன் மூலம் பேட்எம் பயன்படுத்தி ரயில் டிக்கெட்களை புக் செய்ய இயலும்.

பேடிஎம் பயன்படுத்தி எத்தனை டிக்கெட் வரை புக் செய்ய இயலும்?

பேடிஎம் பயன்படுத்தி எத்தனை டிக்கெட் வரை புக் செய்ய இயலும்?

பேடிஎம் மூலம் டிக்கெட் புக் செய்யும் போது ஒரே நேரத்தில் 6 நபர்கள் வரை டிக்கெட் புக் செய்ய இயலும். இதுவே தட்கள் டிக்கெட் என்றால் 4 டிக்கெட்கள் புக் செய்ய இயலும். இது பெரியவர், குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஆகும். இதுவே 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தால் கூடுதலாக இரண்டு டிக்கெட்கள் புக் செய்ய இயலும்.

புக் செய்யப்பட்ட டிக்கெட்களை எப்படி ரத்து செய்வது?

புக் செய்யப்பட்ட டிக்கெட்களை எப்படி ரத்து செய்வது?

இணையதள முலம் புக் செய்யப்படும் டிக்கெட்கள் சார்ட் தயார் செய்த பிறகு ரத்து செய்ய இயலாது.

அதற்கு முன்பே ரத்து செய்யும் போது பேடிஎம் கணக்கில் உள்நுழைந்து உங்களுடைய ‘ஆர்டர்கள்' என்ற தெரிவில் சென்று ரத்து செய்ய வேண்டிய பயணியை தேர்வு செய்து "ரத்து" என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் எளிதாக ரத்து செய்யலாம்.

ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் உங்கள் வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும்.

 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

வாலெட், ஐஆர்சிடிசி கார்டு போன்றவற்றை பயன்படுத்தி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டிக்கெட்களை புக் செய்ய இயலாது. எனவே பேடிஎம் வாலெட்டினை பயன்படுத்தி 12 மணிக்கு மேல் மட்டும் தான் ரயில் டிக்கெட்களை பதிவு செய்ய இயலும்.

வலெட்டில் பணம் இல்லை என்றால்?

வலெட்டில் பணம் இல்லை என்றால்?

ஒருவேலை உங்கள் வாலெட்டில் பணம் இல்லை என்றால் முதலில் வாலெட்டில் பணத்தை ஏற்றிவிட்டு டிக்கெட் பதிவை தொடத வேண்டும்.

பயணம் செய்ய வேண்டிய ரயிலினை தவறவிட்டால் என்ன செய்வது?

பயணம் செய்ய வேண்டிய ரயிலினை தவறவிட்டால் என்ன செய்வது?

இணையதள டிக்கெட்களை சார்ட் தயார் செய்த பிறகு ரத்து செய்ய இயலாது. எனவே டிடிஆர் கோரிக்கையை அளித்து ரத்து செய்யப்பட்ட தொகையைப் பெறலாம்.

மேலும் இதற்கு [email protected] என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் பிஎன்ஆர் எண், ரயில் எண் மற்றும் பெயரை அனுப்புவதன் மூலமும் டிடிஆர் கோரிக்கையை வைக்க இயலும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Book Train Tickets Using Paytm

IRCTC tickets are now available from Paytm's app and website. Know how to book train ticket by Paytm.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X