மின்னணு பரிவர்த்தனைக்குச் சரியான பண பரிமாற்ற முறையை தேர்ந்தெடுப்பது எப்படி..?

இப்போதுள்ள பணமற்ற பரிவர்த்தனை அமைப்புகள் பின்வருமாறு. கிரெடிட்/டெபிட் அட்டைகள், மின் பணப்பைகளான பேடிஎம், ஒருங்கிணைந்த பரிவர்த்தனை அமைப்பு(யுபிஎம்), ஐஎம்பிஎஸ், யுஎஸ்எஸ்டி, ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் முத

By Jeevan Raj
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவம்பர் 8 ம் தேதியில் இருந்து, ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இருந்து வருகிற சங்கடம், எவ்வாறு பாதுகாப்பான, நம்பகமான, வசதியான மற்றும் பணமற்ற பரிவர்த்தனையை தெரிந்தெடுப்பது என்பதுதான்!

இப்போதுள்ள பணமற்ற பரிவர்த்தனை அமைப்புகள் பின்வருமாறு. கிரெடிட்/டெபிட் அட்டைகள், மின் பணப்பைகளான பேடிஎம், ஒருங்கிணைந்த பரிவர்த்தனை அமைப்பு(யுபிஎம்), ஐஎம்பிஎஸ், யுஎஸ்எஸ்டி, ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் முதலியன.

எந்த வகையான பரிவர்த்தனைகளுக்கு எந்த வகையான மேற்கண்ட சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்ற உங்களுடைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தக் கட்டுரை.

ஒவ்வொருவருக்கும் அல்லது அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் எந்த ஒரு தனிச்சிறப்பான பரிவர்த்தனை அமைப்பு என்பது இல்லை.

இருப்பினும் உங்களது தேவைக்கிணங்க ஒரு பரிவர்தனை முறையை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இது எவ்வாறு என்பதனை பின்வருமாறு விளக்குகிறோம்.

இரண்டு பயன்பாடுள் போதும்

இரண்டு பயன்பாடுள் போதும்

எல்லாப் பரிவர்த்தனைகளுக்கும் பயனர் கணக்குகளை ஆரம்பிப்பது, கடவுச் சொல்லை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தாலும், இந்த பரிவர்த்தனைகளில் இரண்டு பயன்பாடுகளை தெரிந்தெடுப்பது என்பது நடைமுறை சேவைக்கு பயன்படும், அதாவது அதிக பண பயன்பாட்டுக்கு ஒன்றையும் குறைந்த பண பரிவர்த்தனைக்கு ஒன்றையும் தேர்ந்தெடுப்பது.

கட்டண தீர்வுகள்

கட்டண தீர்வுகள்

கட்டண தீர்வுகளுக்கு இரண்டு வகைகளாகப் பிரித்து கொள்வது நலம். அதாவது ரூபாய் பத்தாயிரத்துக்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு ஆர்டிஜிஎஸ்/நெப்ட்/கடன் மற்றும் பற்று அட்டைகள் போன்ற சேவைகளைப் பயன்படுத்துதல், ரூபாய் பத்தாயிரத்துக்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு ஐஎம்பிஎஸ்/யுபிஐ/யுஎஸ் எஸ்டி/மற்றும் மின்-பணப்பைகள்.

அங்கீகாரம்

அங்கீகாரம்

இந்த வகையான மின் பரிவர்த்தனைகளை அங்கீகாரம் செய்வதற்கு பொதுவாக இரு காரணி அங்கீகாரம் என்ற ஒரு நிலையான பாதுகாப்பு நடைமுறையானது பின்பற்றப்படுகிறது. இது ஏற்கனவே உங்களால் உருவாக்கப்பட்ட பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லின் வழியாகச் சென்று நீங்கள் மட்டுமே அளிக்கக்கூடிய பின் அல்லது ஓடிபி அதாவது ஒருமுறை அனுப்பப்படும் கடவுச் சொல்( பொதுவாக உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பட்டும்).

பையோமெட்ரிக் அங்கீகாரம்

பையோமெட்ரிக் அங்கீகாரம்

யூபியையின் மேம்படுத்தப்பட்ட பயன்பாட்டில் மேலும் ஒரு கூடுதல் நிலையான பையோமெட்ரிக் அங்கீகாரம்(தங்களது ஸ்மார்ட் போன் ஸ்கேனர்கள் வழியாக) அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நெட்வொர்க் பாதுகாப்பு

நெட்வொர்க் பாதுகாப்பு

பண பரிவர்த்தனை பாதுகாப்பு என்பது. நீங்கள் எந்த நெட்வொர்க் (பொது / தனியார் Wi-Fi) பயன்படுத்துகிறீர்கள் என்பதைச் சார்ந்தது. கிட்டத்தட்ட அனைத்துப் பயன்பாடுகளும் உங்கள் தொலைப்பேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு தகவல்களை அணுக வேண்டியுள்ளது.

மேலும், இத்தகைய சந்தர்ப்பங்களில், ஸ்மார்ட்போன்கள் மீது நிறுவப்பட்ட ஃபயர்வால் வகையை பொறுத்து ஹேக்கிங் / இணைய வைரஸ் / மால்வேர் போன்றவை தாக்க கூடிய வாய்ப்புகள் அதிகம்.

இதன் விளைவாக, சிறிய அளவில் பணம் பரிவர்த்தனை செய்ய உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே இ-பணப்பைகள் மற்றும் யுஎஸ்எஸ்டி வழியாக முறையே அதிக பட்ச மாக மாதம் ரூ 20,000 மற்றும் பரிவர்த்தனை ஒன்றுக்குச் சிறிய மதிப்பாக ரூ .5,000.00 பரிவர்த்தனை செய்யலாம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

 

தொழில்நுட்ப தேவைகள்

தொழில்நுட்ப தேவைகள்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து டிஜிட்டல் மற்றும் பணமில்லா கட்டணம் பரிவர்த்தனைகளுக்கு யுஎஸ்எஸ்டி தவிர இணைய இணைப்பு தேவைப்படும். யுஎஸ்எஸ்டி இணைய இணைப்பு இல்லாமல் ஸ்மார்ட்போன்கள் அல்லது எதிர் கால போன்களுக்கு பொருந்தக்கூடியனவாக உள்ளது.

தேசிய ஒருங்கிணைந்த யுஎஸ்எஸ்டி அமைப்பு (அல்லது NUUP) என்பது ஒரு கைப்பேசி தொழில்நுட்பம் இது NPCI யால் தொடங்கப்பட்டது. * 99 #, அடிப்படையில் ஒரு மொபைல் வங்கி சேவையை இது வழங்குகிறது.

வரையறுக்கப்பட்ட மக்கள்தொகை அல்லது குறைந்த கட்டணங்கள் சேவையுடன் இணைய இணைப்பு தேவையற்ற சேவையாகும். பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ 0.50 என்று டிராய் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

 

மூன்றாம் தரப்பு முன்னிலையில்

மூன்றாம் தரப்பு முன்னிலையில்

ஒரு மின் பணப்பை மூலம் பரிவர்த்தனை என்பது, பணத்தைச் செலுத்துபவர் மற்றும் பெறுநர் இடையே ஒரு மூன்றாம் தரப்பு முன்னிலையில் பரிமாற்றம் செய்வது என்று அர்த்தமாகும். ஒன்று, மனதில் கொள்ள வேண்டும் மின் பணப்பை வழங்குநர்களின் நெறிமுறைகள் வங்கிகளின் நெறிமுறைகளில் இருந்து வேறு படும்.

எனினும், இ-வாலெட்டுகளின் நன்மைகள் என்னவென்றால் அவர்கள் அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற இணையத்தில் பொருட்கள் வாங்குதல் மற்றும் விற்பது போன்ற சேவைகளை அளிப்பது தான்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to pick the right payment method for digital transactions

How to pick the right payment method for digital transactions
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X