பட்ஜெட்டின் வரலாறு பற்றி உங்களுக்கு எந்தளவு தெரியும் !

தனிப்பட்ட முறையில் பட்ஜெட் உருவான விதம், பெயர் உருவாக்கம், பட்ஜெட்டின் வரலாறு என நீங்கள் அரிந்திராத சுவாரஸ்யமான விக்ஷயங்கள் நிறைய உள்ளன.

By Siva Lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017 - ம் ஆண்டிற்கான பட்ஜெட் வருவதற்கு நம்மிடையே இன்னும் 10 நாட்களே உள்ளது. தனிப்பட்ட முறையில் பட்ஜெட் உருவான விதம், பெயர் உருவாக்கம், பட்ஜெட்டின் வரலாறு என நீங்கள் அரிந்திராத சுவாரஸ்யமான விக்ஷயங்கள் நிறைய உள்ளன.

 

இங்கே பட்ஜெட்டின் வரலாறு குறித்த சுமார் ஐந்து சுவாரஸ்யமான உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

1. பட்ஜெட் பெயர் எப்படி வந்தது?

1. பட்ஜெட் பெயர் எப்படி வந்தது?

'bougette' எனும் பிரஞ்சு வார்த்தையிலிருந்தும், மத்திய ஆங்கில வார்த்தையான 'bowgette' லிருந்தும் பெறப்பட்ட வார்த்தையே 'budget' ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 112ன் படி, ஒரு ஆண்டின் பட்ஜெட்டில், அரசாங்கத்தின் அந்த ஆண்டிற்கான வரவு மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டிற்கான அறிக்கையை அளிப்பது.

 

2. இந்திய பட்ஜெட்டுக்கு பின்னணியாக இருந்தவர்

2. இந்திய பட்ஜெட்டுக்கு பின்னணியாக இருந்தவர்

இந்தியாவின் முதல் பட்ஜெட் ஏப்ரல் 7, 1860 ல் கிழக்கிந்திய கம்பெனியரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய கவுன்சிலின் நிதி உறுப்பினராக இருந்த ஜேம்ஸ் வில்சனின் அறிவுறுத்தலின்படி பட்ஜெட்டானது முதன்முறையாக ஆங்கில கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லோராலும் நன்கு அறியப்பட்ட 'பொருளாதார மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி' எனும் வங்கி பத்திரிக்கை ஜேம்ஸ் வில்சனால் நிறுவப்பட்டது.

 

3. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்
 

3. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்

சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரான ஆர்.கே. சண்முகம் செட்டி என்பவரால் நவம்பர் 26, 1947 ல் முதன் முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மொத்தம் ஏழரை மாதங்களுக்கான (ஆகஸ்டு 15, 1947 முதல் மார்ச் 31, 1948 வரை) வரவு - செலவு திட்டங்களை வகுத்திருந்தனர்.

இந்திய பிரிவினைக்குப் பின் புதிய பட்ஜெட்டை முன்வைக்க வேண்டியது இரு நாடுகளுக்கும் மிகவும் அவசியமானதாக ஏற்பட்டது.

 

4. 'பட்ஜெட் அல்வா' சம்பிரதாய முறை

4. 'பட்ஜெட் அல்வா' சம்பிரதாய முறை

பட்ஜெட் சம்பந்தமான ஆவணங்களை அச்சிடும் செயலகத்தில் பட்ஜெட் அல்வா விழா தொடங்குவது ஒரு சடங்கு ஆகும். இது நார்த் பிளாக் அலுவலகத்தில் தொடங்குகிறது. நிதி அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த விழாவின் போது கலந்து கொள்கிறார்கள்.

'அல்வா' - ஒரு இனிப்பு பண்டம். பட்ஜெட்டை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் ஒன்றாகக் கூடி இந்த இனிப்பைத் தயார் செய்கிறார்கள். மேலும் பட்ஜெட் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்படுகிறது.

 

5. மேலிடத்து ரகசியம்

5. மேலிடத்து ரகசியம்

பட்ஜெட் ஆவணத்தின் முழு உரையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தட்டச்சரால் தயார் செய்யப்படுகிறது. அவர்கள் வேலை செய்யும் கணினிக்கும் மற்ற கணினிக்கும் இடையேயான தொடர்புகள் முற்றிலும் நீக்கப்பட்டு மிகவும் நெருக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது.

பட்ஜெட் ஆவணங்கள் தயார் செய்யும் நார்த் பிளாக்கில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தங்கி இருந்து வேலை செய்கின்றனர். இந்தக் கால கட்டத்தில் அவர்கள் தங்கள் குடும்பங்கள் உள்பட வெளி உலக தொடர்புகளிலிருந்து ஒதுங்கி இருந்து பணி ஆற்றுகிறார்கள். மேலும் அவர்களுக்கு ஒரே ஒரு தொலைபேசி மட்டுமே வழங்கப்படுகிறது, அதிலிருந்து வெளியிலிருந்து வரும் அழைப்புகளை மட்டுமே பெற முடியுமே தவிர அவர்களால் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள முடியாது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How well do you know your Budget?

How well do you know your Budget?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X