சவால் நிறைந்த செயல் திட்டத்தினை சமாளிக்க உதவும் வழிகள்..!

சவால் நிறைந்த செயல் திட்டத்தினை சமாளிக்க உதவும் வழிகளைப் பற்றிய கருத்துக்களை நிபுணர்கள் வாயிலாக நாம் இங்கே பார்ப்போம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செயல் திட்டம் என்பது குறிப்பிட்ட இலக்குகளை அடையும் முகமாக முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டு, வரையறுக்கப்பட்ட கால நேரத்துக்குள்ளும், வரையறுக்கப்பட்ட வளங்களுக்குள்ளும் திட்டமிட்டு செயல் படுத்தப்படுகின்ற செயல்பாடுகள் அல்லது முயற்சி ஆகும்.

 

சவால் நிறைந்த செயல் திட்டத்தினை சமாளிக்க உதவும் வழிகளைப் பற்றிய கருத்துக்களை நிபுணர்கள் வாயிலாக நாம் இங்கே பார்ப்போம்.

திட்டத்திற்குத் துணை நில்

திட்டத்திற்குத் துணை நில்

ஒரு சவாலான செயல் திட்டத்தை கையாளுதல் பெரும்பாலும் அனுபவமுள்ளவர்களால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பது நிருபனமான விக்ஷயம். ஆனால், பொருளாதார வளங்கள், உங்களின் அணி, காலம் தவறாமை ஆகியவற்றை நீங்களும் கையில் எடுத்தால் எத்தகையான செயல் திட்டங்களையும் உங்களாலும் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்ட முடியும் என நிபுணர்களின் பரிந்துரைகளின் மத்தியிலிருந்து பிருந்தா தாஸ் குறிப்பிடுகிறார்.

திட்டத்தினை வரையறு

திட்டத்தினை வரையறு

திட்டத்தைத் துவங்குவதற்கு முன் அத்திட்டத்திற்கு சில மணி நேரங்களை ஒதுக்கி, அத்திட்டத்தைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

செயல் திட்டத்தில் உள்ள பிரச்சனைகளையும் இறுதியில் வரும் விளைவுகள் மற்றும் பின்விளைவுகளைக் கண்டறிந்து தெளிவான ஓர் அறிக்கையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

சரியான திட்டத்தை அடையாளம் கண்டு கொள்ளாவது என்பது, திட்டத்தின் நோக்கம், முக்கிய பங்காளிகள் மற்றும் பங்குதாரர்கள் பற்றி ஆரம்ப கட்டத்தில் இருந்தே அணுகுவது. அதன் பின்னரே சவாலான செயல் திட்டத்தினை கையாள வேண்டும் என டார்கெட் இந்தியாவின் மனித வள மூத்த இயக்குனரான சாலினி நடராஜ கூறுகிறார்.

 

ஒரே அணியாகச் செயல்படுதல்
 

ஒரே அணியாகச் செயல்படுதல்

சவால் செயல் திட்டத்தினை மேற்கொள்ள சில முக்கிய கூறுகள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்று மக்கள். பங்குதாரராக அர்ப்பணிப்பது மட்டுமல்லாமல் சரியான மக்களை (நபர்களை) தேர்ந்தெடுப்பது அவசியம். இந்த ஒன்றை மட்டும் சரியாகச் செய்தால், கடினமான செயல் திட்டத்தை இலகுவாக இயக்க முடியும் என ஆம்வே இந்தியாவின் தலைமை மனித வளங்கள் அதிகாரி சாந்தணு தாஸ் கூறுகிறார்.

நேரத்தை நிர்வகித்தல்

நேரத்தை நிர்வகித்தல்

முறையாக நேரத்தைத் திட்டமிடுதலே எந்த ஒரு செயல் திட்டத்திற்கும் தூண்களாக விளங்குகிறது. நேர மேலாண்மையானது திறமையாக வளங்களை பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.

நாம் வகுத்த கால வரையறைக்குள் ஒவ்வொரு வேலையையும் கொண்டு சென்றால், பின்னடைவு ஏதேனும் இருந்தால் கூட எளிதில் அடையாளம் கொண்டு ஒரு நிலையான விகிதத்தில் பராமரிக்க உதவுகிறது என நோலாரிட்டி கம்யூனிகேஷன்ஸ் தலைமை அதிகாரி அம்பரிஷ் குப்தா விளக்குகிறார்.

 

உதவி கோருங்கள்

உதவி கோருங்கள்

அனுபவமிக்கவர்களிடம் இருந்து உதவிகளைப் பெறுவது நல்லது. குறிப்பிட்ட துறைகளில் அதற்கென தனிப்பட்ட உழைக்கும் பணியைக் கையாள வேண்டி இருக்கும். அதற்கென அனுபவம் உள்ளவர்களைக் கலந்து ஆலோசிப்பது அறிவுடைமை என்கிறார் குப்தா.

இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் சொத்து வளங்கள் முதலியவற்றை உள்நாட்டிலிருந்து மற்றும் வெளிப்புற மூலகங்களிலிருந்து கொள் முதல் செய்ய வேண்டும் என்கிறார் ஆம்வே இந்தியா தாஸ்.

 

எதிர்காலத்தைச் சற்று எண்ணிப் பாருங்கள்

எதிர்காலத்தைச் சற்று எண்ணிப் பாருங்கள்

ஒன்றை நிறைவேற்றுவதற்கான செயல் அணுகு முறையின் மூலம் நாம் எவ்வாறு செயல் திட்டத்தினை கையாளப் போகிறோம் என கவனித்துக் கொள்ளலாம்.

சில மணி நேரங்கள் ஒதுக்கி, செயல் திட்டத்தின் விளைவுகளை அளவிடக் கூடிய வகையில் ஆராய வேண்டும் என நட்ராஜ் கூறுகிறார். தேவையற்ற இடர் நேர்வுகளைத் தவிர்ப்பதற்காக எப்போதும் 'பிளான் பி' திட்டமிட்டு வைத்துக் கொள்வது நம்முடைய திட்டத்தினை சரியான பாதையில் கொண்டு செல்லும் எனவும் நட்ராஜ் கூறுகிறார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 ways to tackle a challenging project

5 ways to tackle a challenging project
Story first published: Saturday, February 18, 2017, 19:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X