அனைவருக்குமான ஒரு அடிப்படை வருமானம்: இது சாத்தியமா..?

சுவிர்ச்சர்லாந்து ஏற்கனவே இதற்கான ஓட்டெடுப்பை நடத்தி விட்டது. பின்லாந்து தற்போது இதற்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறது, மேலும் இந்தியா இதைப் பற்றி பேசி வருகிறது.

By Jeevan Raj
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகைச் சுற்றியுள்ள சில பொருளாதார நாடுகள் தங்களின் குடிமக்களுக்கு அவர்கள் ஏதோ ஒரு வேலையில் இருந்தாலும் கூட ஒரு அடிப்படை வருமானம் அளிப்பதைப் பற்றி ஆலோசித்து வருகின்றன.

சுவிர்ச்சர்லாந்து ஏற்கனவே இதற்கான ஓட்டெடுப்பை நடத்தி விட்டது. பின்லாந்து தற்போது இதற்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறது, மேலும் இந்தியா இதைப் பற்றி பேசி வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை வெளியிடப்பட்ட 2016 - 2017 ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் இதற்கென்றே ஒரு தனி அத்தியாமே எழுதப்பட்டிருக்கிறது. அதனுடைய தலைப்பு இது தான்.

அனைவருக்குமான ஒரு அடிப்படை வருமானம்: இது சாத்தியமா..?

"உலகளாவிய அடிப்படை வருமானம் : மகாத்மாவோடு ஒரு உரையாடல் மற்றும் அவரின் எண்ணங்கள்"

சமூக நலம் மற்றும் தொழிலாளிகளின் போராட்டத்தின் பலன் சார்ந்த மகாத்மா காந்தியின் யோசனைகளை முன்னுரையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த அத்தியாயம் உலகளாவிய அடிப்படை வருமானம் இந்தியாவிலும் சாத்தியமாக ஒரு வடிவம் கொடுக்க முடியும் என ஆய்வு செய்கிறது. கணக்கெடுப்பு ஒரு குறிப்பிட்ட அடிப்படை வருமானத்தை வரையறை செய்ய முடியவில்லை என்றாலும், அது ஒரு வருடத்திற்கு ரூபாய் மூவாயிறத்திற்கும் சற்று அதிகமாக ரூ 12,000 வரை இருக்கலாம்.

எனவே இதற்கு எதிரான மற்றும் ஆதரவான வாதங்கள் என்னென்ன? என்று பார்க்கலாம்.

ஆதரவு : ரோபோக்களின் ஆதிக்கம்
ஆதரவாளர்களின் கருத்து என்னவென்றால், பொருளாதாரத்தில் தானியங்கி சாதனங்கள் அதிகரிப்பதின் மூலம், பலர் தங்கள் திறமைகள் காலாவதியானதினால் வேலையிழக்கிறார்கள். உண்மையில், சமீபத்தில் டாவோஸ் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஒரு மனித ஆற்றல் அறிக்கையின் படி, இந்திய தொழிலாளர்கள் தானியங்கி வளர்ச்சியின் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக எதிர்காலத்தில் அனைவருக்கும் அடிப்படை வருமான திட்டம் உதவக் கூடும்.

எதிர்ப்பு : ஆனால் இது வேலை செய்வதை மட்டுப்படுத்தும்.

எதிர்ப்பாளர்களைப் பொறுத்த வரை, இது போன்ற ஒரு பங்களிப்பு மக்களை சோம்பேறியாக்கி விடும் என்று கவலைப்படுகின்றனர், மற்றும் அடிப்படை வருமானத்தைக் கொண்டு தங்களை ஆதரிப்பதற்குப் பதிலாக அவர்கள் வேலை செய்வதை விட்டு விடக் கூடும்.

ஆதரிப்பு: ஏனெனில் அது அனைவருக்கும் வழங்கப்படுவதால் உலகளாவிய நலன் சார்ந்த ஒன்றாக இருக்கும்.

சமீபத்திய பொருளாதார கணக்கெடுப்பின் படி இலக்கு மக்கள்தொகை யில் 40% மற்றும் 65% சதவீத மக்கள் ஒருபோதும் முறையே உணவு மானியம் மற்றும் வேலைவாய்ப்பு உத்தரவாதம், MGNREGA நன்மைகள் போன்றவற்றை பெறவில்லை தெரிவித்துள்ளது. சரியாகப் பகிர்ந்து அளிக்காமல் இருப்பதின் காரணமாக அரசு சலுகைகள் பணக்கார பகுதிகளை ஒப்பிடும் போது ஒரு குறைந்த அளவே நாட்டின் வறிய பகுதிகளில் சென்றடைகிறது. எனினும், அனைவருக்கும் வழங்கப்படும் அடிப்படை வருமானமானது ( அல்லது இந்திய மக்கள் தொகையில் குறைந்த பட்சம் 75%) இந்தப் பிரச்சனையை ஓரளவும் குறைக்கும். ஏனெனில் அது நேரடியாக அவர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு சென்றடைகிறது.

எதிர்ப்பு : ஆனால், அரசாங்கம் தேர்ந்தெடுத்த சில பிரிவினருக்கு மட்டும் அளிக்க முடிவு செய்தால் என்ன செய்வது?

அதே நேரத்தில், இந்த ஆய்வு கூட முதலில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா மூலம் இந்தத் திட்டத்தை முதலில் செயல்படுத்த முன்மொழிகிறது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா கர்ப்பிணி பெண்கள், விதவைகள், மூத்த குடிமக்கள் மற்றும் உடல் அல்லது மன பலவீனமானவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களைத் தேர்ந்தெடுக்கும் என்ற தகவல் பரவியது. ஆனால் இந்தச் செயல் உலகளாவிய நலன் என்பதற்கு ஆதரவாக உள்ளம்வலுவான வாதங்களைச் செயலிழக்க வைக்கின்றது. அது அனைவருக்கும் வழங்கப்படுவதினால் வேலை செய்கிறது. ஆனால் தேர்ந்தெடுத்து செயல் படுட்த்துவது மற்றும் பல கட்டங்களாகச் செயல் படுத்துவது என்பது பல மற்ற பிரச்சனைகளை உருவாக்கும். அது மட்டுமல்ல யூனியன் பேங்க் மூலம் அரசாங்கம் முன்நோக்கி கொண்டு செல்லும் இந்த முயற்சிக்கு ஒரு பின்னடைவாக இருக்கும்.

ஆதரிப்பு: நடுத்தர மனிதனின் சுரண்டப்படுவதில் இருந்து நிவாரணம்

செயல்படுத்துதல் ஜாம் (ஜன் தன் கணக்குகள்-ஆதார் அட்டைகள் மொபைல்)அமைப்பின் மூலம் செய்யப்படுவதால், அது மக்களுக்கு ஒரு நேரடி மற்றும் நன்மை பயக்கும் தொந்தரவு அற்ற இலவச பரிமாற்றத்தை உறுதி செய்யும்.

கான்: ஆனால் அடிப்படை வருமானம் அளிப்பதை மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செயல்படுட்த்த தேவையான உள்கட்டமைப்பு உள்ளதா?
கணக்கெடுப்பு அறிக்கையின் படி இந்தியரியல் ஐந்தில் ஒருவர் மட்டுமே ஜன் தண் கணக்கு வைத்திருக்கின்றனர். மேலும்,இவர்களில் 60% சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தங்கள் வங்கி கணக்கோடு ஆதாரை இணைந்துள்ளனர். இதனால் இந்தியா முழுவதிலும் "உலகளாவிய அடிப்படை வருமான" யோசனை ஒரு கணிசமான சவால் விடுப்பதாக உள்ளது.

ஆதரவு: நீங்கள் விரும்பிய படி உங்கள் பணத்தை பயன்படுத்தலாம்.

ஒரு நேரடி பண பரிமாற்றமாக வழங்கப்படுகிறதினால், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, அவர்கள் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று அவர்களே முடிவு செய்யும் அதிகாரத்தை மக்களுக்கு அனுமதிக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், சிலரின் கூற்றுப்படி இந்த பணம் சலன செலவு என அழைக்கப்படும், மது மற்றும் புகையிலை மீது பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது . இருந்தாலும் மத்திய பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒரு சோதனையானது இந்தக் கூற்று தவறு என்று நிரூபித்தது. இந்தத் திட்டத்தின் படி பணத்தை பெற்ற கிராம மக்கள் இந்த பணத்தினை உடல் நலன் சார்ந்த விசயங்களுக்கும், புதிய தொழில் திட்டங்களுக்கும், பிள்ளைகளுக்கும் செலவிட்டனர்.

எதிர்ப்பு: ஆனால் மக்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?

மறுபுறம், பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை கூறியதைப் போல, சண்டிகர் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து கிடைக்கப்பெற்ற சான்றுகள் கேள்விகளை எழுப்புகிறது. கடந்த ஆண்டு, உணவு, பொது விநியோக முறைக்குப் பதிலாக, மக்களுக்கு பணம் அல்லது நேரடி நன்மை திட்டங்கள் வழங்கப்பட்டது. இன்னும் கிட்டத்தட்ட அரைவாசி மக்கள் தங்கள் கணக்கில் பணம் வந்து சேரவில்லை என்று முறையிட்டனர். இது அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஆய்வகத்தினால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்தது.

ஆதரவு: மற்றொரு உதவி திட்டம் அல்லது ஒரு உதவி திட்டம் அனைத்திற்கும் பதிலாக?

நிதி அமைச்சர், அருண் ஜேட்லி, டிடி நியூசில் அளித்த ஒரு பேட்டியில், பிப்ரவரி 1 ம் தேதி பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் ஒன்றாக அனைத்து மானியங்களையும் ஒன்றிணைத்து ஏழைக்கு அடிப்படை வருமானமாக ஒரே காசோலையை கொடுப்பது என்பது சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

எதிர்ப்பு: ஆனால் நமது அரசியல்வாதிகள் இதை உடனடியாக விரைவில் நடக்க அனுமதிக்கத் தயாராக உள்ளனரா?

அதே பேட்டியில், ஜேட்லி இந்தியாவின் அரசியலில் இந்த எல்லா உதவித் தொகைகளையும் சேர்த்து ஒரு புதிய உதவித் தொகை உருவாக்குவது என்பதற்குத் தேவையான முதிர்ச்சி இல்லை என்று குறிப்பிட்டார். என்றாலும், பொருளாதார ஆய்வு அறிக்கை கூட, அதைக் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியமற்றது என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A basic income for all: will it work or will it not?

A basic income for all: will it work or will it not?
Story first published: Monday, February 6, 2017, 19:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X