இணையத்தில் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதால் இவ்வளவு நன்மைகளா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காப்பீட்டு முகவர்கள் உங்கள் வீட்டுக் கதவை தட்டியது உங்களுக்கு நினைவில்லாமலிருக்கலாம். ஆனால் உங்கள் பெற்றோரை கேட்டால் இப்போது பார்ப்பது போலல்லாமல் ஒரு மாறுபட்ட கதையை நமக்குச் சொல்வார்கள்.

 

நீங்கள் அந்தக் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ ஆனால் அதுதான் பொதுவாகக் காப்பீட்டு முகவர்கள் காப்பீட்டு பாலிசி களை நமக்கு விற்க அவ்வாறுதான் செய்தார்கள். அதற்கு மற்றொரு வழி ஒரு வாடிக்கையாளர் ஏதாவதொரு காப்பீட்டு நிறுவன கிளை அலுவலகத்துக்குச் சென்று உரியப் படிவங்களைக் கேட்டு வாங்கிப் பூர்த்திச் செய்து பாலிசியைப் பெறுவதாகத் தான் இருந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை.

தற்போதைய காட்சி

தற்போதைய காட்சி

நமது மின்னணு சாதனங்கள் மற்றும் நவநாகரிக பொருள்களை எல்லாம் ஆன்லைனில் வாங்குவது போலவே நமது காப்பீட்டு பாலிசி யையும் இப்போது ஆன்லைனில் வாங்கலாம். ஆன்லைனில் வாங்குவது பரவலாக நடைமுறையில் இருந்தாலும் எதை வாங்குவது, எதைத் தவிர்ப்பது, என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று நேரடியாகக் கேட்டு தெளிவடைவது போல் இல்லாமலிருப்பதை நாம் இழக்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சுதந்திரம்

சுதந்திரம்

காப்பீட்டு பாலிசி யை நீங்கள் ஆன்லைனில் எடுக்கும்போது நீங்கள் மற்றொருவரின் வேலை நேரத்தைச் சார்ந்திருப்பவராக இருப்பதில்லை. நீங்கள் உங்கள் சொந்த நேரத்திலேயே ஆராய்ந்து, விசாரித்துப் பரிமாற்றங்களைச் செய்கிறீர்கள். பாரம்பரியமான முறையில் இது சாத்தியமில்லை.

சுலபமாக அணுக முடியும்.
 

சுலபமாக அணுக முடியும்.

இப்பொழுது நீங்கள் ஒரு கிளை அலுவலகத்துக்குச் சென்று உங்கள் முறைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வசதியாக உங்கள் படுக்கை அறையில் படுத்தபடியே உங்கள் வாழ்க்கை, உங்கள் சொத்துக்கள் மற்றும் உங்கள் பணம் ஆகியவற்றைக் காப்பீடு செய்து கொள்ளலாம்.

தானியங்கி சேவைகள்

தானியங்கி சேவைகள்

எச் டி எப் சி லைப் போன்ற காப்பீட்டு நிறுவனங்கள் முழுமையான வாடிக்கையாளர் சேவை, பணப் பரிமாற்றங்கள், முதிர்வு தொகையைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை இணையதளம் மற்றும் மொபைல் செயலிகளைக் கொண்டே வழங்குகிறார்கள். வாடிக்கையாளர் சேவை மையம் உங்களை ஒரு கிளை அலுவலகத்துக்குள் செல்லாமல் உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் விடை அளித்து அனைத்தையும் புரிந்து செய்ய வைக்கும்.

சிக்கனமானது.

சிக்கனமானது.

ஒரு வாடிக்கையாளர் ஒரு பாலிசி யை இணையத்தில் வாங்கும்போது இடைத்தரகர்கள் யாருமின்றிச் செயல்படுவதால் செலவு மிச்சமாகிறது. இதன் பொருள் பாலிசி எடுப்பவருக்குக் காப்பீட்டு நிறுவனம் உண்மையான விலைக்கே அந்தப் பாலிசி யை வழங்குவதால் நிருவனத்திற்கு மிச்சமாவதால் பிரிமியம் தொகை மற்றும் அவற்றைச் செலுத்துதலில் வாடிக்கையாளருக்குத் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.

எளிமையான நடைமுறைகள்

எளிமையான நடைமுறைகள்

ஆன்லைன் நடைமுறையின்போது நீங்கள் உங்கள் பாலிசி செயலாக்கத்தை உங்கள் கணினி அல்லது உங்கள் மொபைல் ஆகியவற்றிலிருந்து எந்த நேரத்திலும் முடித்துக் கொள்ளலாம். எச் டி எப் சி லைப் போன்ற நிறுவனங்கள் உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஒன்று விடாமல் இணையத்தில் தரவேற்றும். நீங்கள் உங்கள் பாலிசி யின் அவ்வப்போதைய நிலைமைகளைத் தெரிந்து கொள்ளப் பாலிசி யை பின்தொடரும் ட்ரேக்கிங் வசதியும் உண்டு.

அறிவிக்கப்பட்ட தேர்வுகள்

அறிவிக்கப்பட்ட தேர்வுகள்

ஆன்லைனில் பார்க்கும்போது வெவ்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் வெவ்வேறு விதமான பாலிசி தேர்வுகள் குறித்து விவரமாக அறிந்து கொள்ள இயலும். பாலிசி யின் நிபந்தனைகள், அம்சங்கள் மற்றும் மதிப்பு ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வதோடு அவற்றின் சாதகப் பாதக அம்சங்களையும் பற்றி விரிவாக அறிந்து கொள்ள இயலும்.

முடிவுரை

முடிவுரை

இவற்றிலிருந்து நாம் அறிவது என்னவெனில், ஆன்லைன் பாலிசி எடுப்பது சுலபமானது, பாதுகாப்பானது சிக்கனமானது மற்றும் நேரம், பணம் ஆகியவற்றைச் சேமிக்க உதவுகிறது. இதனால் வழக்கமான முகவர்கள் கொண்டு எடுக்கும் பாலிசி களில் உள்ளது போலவே அனைத்துப் பயன்களும் விடுபடாமல் மேலும் அதிகச் சலுகைகளுடன் பாதுகாப்பாகவும் உங்களுக்குக் கிடைக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the Benefits of buying insurance online?

What are the Benefits of buying insurance online?
Story first published: Monday, May 29, 2017, 18:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X