இந்த வருடம் மோசமான சம்பள உயர்வா..? இதுவும் காரணமாக இருக்கலாம்..!

By Muneeshwaran
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருடம் முழுவதும் மாங்மாங்ன்னு உழைத்து விட்டு, நாம் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கவில்லை என்று புலம்பும் பல பேரை பார்க்கலாம்.

 

அப்படி இந்த வருடம் மோசமான அப்ரைசல் வாங்கியதற்கு இந்த 8 காரணங்களில் ஒன்றாகத் தான் இருக்கும்.

முதலில் நம்பிக்கையை இழக்காதீர்கள். அடுத்த அப்ரைசலின் போது இந்த 8 வழிகள் உங்களுக்கு அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இவைதான்.

இன்றே.... இப்பொழுதே.....

இன்றே.... இப்பொழுதே.....

உங்களைப் பற்றிய மதிப்பீடுகளில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துபவை அண்மை நிகழ்வுகள்தான். உங்கள் மேலதிகாரி உங்களின் கடந்த காலத்தை விட உங்களின் அண்மை செயல்பாடுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

கடந்த மாதத்தில் நீங்கள் குழப்பி வைத்திருக்கும்போது, நீங்கள் சென்ற காலாண்டில் முறியடித்த விற்பனை இலக்கினைப் பற்றி உங்கள் மேலதிகாரிக்கு நினைவு படுத்துங்கள். அண்மை நிகழ்வுகளின் விளைவானது நீங்கள் எப்போதும் ஒரு புதிய தொடக்கத்தோடு உங்கள் நாளை ஆரம்பிக்க வேண்டும் என்று கோடிட்டுக் காட்டுவதாகும். மற்றவர்கள் உங்களைக் கவனித்து, நினைத்துப் பார்ப்பதனால் உங்களுக்கான ஒரு புதிய தோற்றத்தை நீங்கள் கட்டமைக்கலாம். முதன்மைச் சிறப்பு விளைவு என்பது இதற்கு நேர் எதிரானது - ஏற்கனவே செய்த காரியங்கள் பிரதானமாகக் கொள்ளப்படும். நீங்கள் முதன்முதலில் பணியிடத்தில் மற்றவர்களைச் சந்திக்கும்போது அல்லது ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கும்போது - முறையாகத் தொழிலினை செய்து எதிர்பார்ப்பினை நிறைவேற்றுங்கள்.

 

அமைதியாக நடந்து வரவேற்பினைப் பெறுங்கள்.
 

அமைதியாக நடந்து வரவேற்பினைப் பெறுங்கள்.

உங்கள் மேலதிகாரி உங்கள் நடத்தையில் ஒரு எதிர்மறைப் பண்பை பார்த்துவிட்டு மற்ற எதிர்மறை குணாதிசயங்களைக் கற்பனை செய்து கொள்ளும்போது நீங்கள் தூற்றுதலுக்குள்ளாகக்கூடும். நீங்கள் வேலை நேரம் முடியுமுன்பே அலுவலகத்தை விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால் நீங்கள் வேலையின் மீது அக்கறை இல்லாதவர் என்று தீர்மானிக்கப்படக்கூடும்.

உங்கள் வருத்தமுண்டாக்கும் நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்தி உங்கள் பணியின் காரணமாக ஒரு வாடிக்கையாளரிடமிருந்து ஒரு மொத்தமான கொள்முதல் ஆணை கிடைக்கப்பெற்ற விஷயத்தை உங்கள் மேலதிகாரிக்கு நினைவூட்டுங்கள். வரவேற்பு விளைவானது இதற்கு எதிரானது. ஒரு திட்டத்தின் நாயகனாக நீங்கள் இருந்து ஒரு முக்கியமான வாடிக்கையாளரைத் தக்க வைத்துக் கொண்டால் மற்றவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்வதுடன் எதிர்காலத் திட்டங்களுக்கு உங்களைத் தலைமை ஏற்கவும் வைப்பார்கள். பல்வேறு திட்டங்களுக்கு உங்கள் கையை உயர்த்தி உங்களுக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குங்கள்.

 

விலகியே இருங்கள்

விலகியே இருங்கள்

உங்களுடன் ஒட்டிக்கொண்ட ஒன்று மற்றவற்றைக் காட்டிலும் அதிகமாக நினைவுபடுத்தத் தக்கதாக இருப்பது சில நேரங்களில் வலியுடன் கூடிய கட்டை விரல் பெற்றிருப்பது போன்றதாகும். உங்கள் அலுவலக மது விருந்தில் நீங்கள் ஒரு முறை மது எடுத்துக் கொண்டால் நீங்கள் அதற்காக வருத்தப்பட வேண்டியிருக்கும். அடுத்து வருங்காலங்களில் நடக்கும் விருந்துகளிலும் நீங்கள் மதுப்பிரியராகவே பார்க்கப் படுவீர்கள்.

இதேபோல, எதிர்மறை நிகழ்வுகளும், முடிக்கப்படாத பணிகளும், நேர்மறை நிகழ்வுகள் மற்றும் முடிக்கப்பட்ட பணிகள் ஆகியவற்றைக் காட்டிலும் மிக அதிகமாக நினைவில் கொள்ளப்படும். வாடிக்கையாளருக்கு ஒரு பொருளை குறிப்பிட்ட நாளுக்குள் வழங்காமல் தவறு செய்திருந்தால், அது உங்கள் குழுவிற்கு ஒரு முக்கியமான ஒரு விஷயமாகும். கூடுதல் கவனத்தைச் செலுத்தி அந்தப் பணியினை முடிப்பதுடன், அடுத்தவர்களுக்கும் அவர்கள் பணிகளில் சில காலத்திற்கு உதவுவது நல்லது.

 

எல்லோரும் உங்களைப் போலவே இருக்க மாட்டார்கள்

எல்லோரும் உங்களைப் போலவே இருக்க மாட்டார்கள்

வெளிப்படுத்த திட்டமிடுதல் என்பது எல்லோரும் அவரவர் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் மதிப்பீடுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுதலில் உள்ளது.

சரியாகப் பரிசீலிக்க மறந்து, உங்கள் மேலதிகாரிக்கு ஒரு தவறான தகவலைக் கொடுத்து விட்டு, தவறுவது எல்லோருக்கும் சகஜம் என்று பிழையாக நீங்களே எண்ணிக்கொள்வது. அல்லது, உங்கள் மேலதிகாரி தவறாக உங்கள் அணுகுமுறைகள் மேலோட்டமானது என்றும், நீங்கள் பணியிலும், விளைவுகளிலும் அக்கறையின்மையோடு நடந்து கொள்வதாகவும் நினைத்தால், நீங்கள் அவரால் பதவி உயர்த்தப்படப் போவதில்லை என்று நினைத்துக் கொள்வது. ஆகியவற்றைக் கவனமாகத் தவிர்த்துப் பணியில் அக்கறையோடு செயல்பட்டால் நீங்கள்தான் வெற்றியாளர்.

மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், எதை நம்புகிறார்கள் மற்றும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். தைரியத்தையும், ஆர்வத்தையும் வரவழைத்துக் கொள்வதோடு உங்கள் குழு உறுப்பினர்களின் மனதில் உங்களின் உருவம் எப்படிப் பதிந்திருக்கிறது என்பது பற்றி அறிந்து மாற்றம் தேவையெனில் உங்கள் நடத்தையை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்துச் சிந்தியுங்கள்.

 

எனக்கு இதெல்லாம் தெரியாது

எனக்கு இதெல்லாம் தெரியாது

பயன்படுத்த தயாராக உள்ள நிலை என்பது நினைவில் உள்ள ஒரு சிறு தகவல் நம்பிக்கைக்குரியதாகவும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருப்பதாகும். இவை அண்மைக் காலத்திய, வழக்கமல்லாத, உணர்வுகளுக்கு இடமளிக்கிற அல்லது மீண்டும் நினைக்கத்தக்க தகவல்கள் உங்கள் சக பணியாளரின் மனதில் ஒட்டிக்கொண்டு உங்களைப் பாதிக்கக் கூடியவையாக இருக்கலாம்.

எனவே, நீங்கள் ஒரு பெரிய வேலையை முடித்தீர்கள் என்றால், உங்கள் குழுவினர் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளச் செய்யுங்கள். மற்றவர்கள் அதைப்பற்றிப் பொது இடங்களில் பேசி, அங்கீகாரம் அளிக்கும்போது அதன் விளைவுகள் மிகப் பெரியதாக இருக்கும். முரண்பாடாக, உங்கள் மேலதிகாரி உங்கள் சேவையைப் பற்றித் தெரியாதவராக இருந்தால் உங்களைப் பற்றித் தவறாக மதிப்பிடக் காரணமாக அமையும். எப்போதும் உங்கள் பணி, தகவல்கள் மற்றும் விளைவுகள் குறித்து உங்கள் மேலதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

அனைவருக்கும் உதவி செய்யுங்கள்

அனைவருக்கும் உதவி செய்யுங்கள்

மனிதர்கள் தங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களைப் பற்றியோ, அல்லது தங்களைப் பற்றியோ எப்போதும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட மூத்த நிர்வாகிகளுடன் சேர்ந்து பணியாற்றும்போது, அவர்களுக்கு ஒரு காப்பி விருந்தளித்து அவர்களைச் சுற்றியுள்ள விஷயங்களை விரும்பி அவற்றை உங்களதாக்கிக் கொள்ள முயற்சியுங்கள். மற்றவர்களின் பணிகளில் உங்கள் ஈடுபாட்டினைக் காட்டி தலைமையேற்க முயற்சியுங்கள்.

 

நட்போடு இருங்கள்

நட்போடு இருங்கள்

ஒரு குழுவில் இருக்கும்போது தனிமையில் இருப்பதை விட அனைவராலும் விரும்பத்தக்கவராக இருப்பது மகிழ்ச்சியான தலைமை விளைவு என்பதாகும். பொதுவான திட்டங்களை அவர்களது குழுவினரோடு சேர்ந்து செய்யுங்கள். பெரிய மனிதர்களோடு சமூக அரவணைப்பு ஏற்படுத்த உங்கள் சொந்த நேரத்தை முதலீடு செய்தால், அவர்களிடமிருந்து நிறையப் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதுடன் அவர்களுடன் சரிசமமாகக் கலந்திருக்கவும் உதவும். சரியாகச் செயல்படாதவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடும்போது உங்களைப் பற்றிய மதிப்பீடு உங்களை அவர்களோடு பொருத்திப் பார்க்கும்.

நீங்கள் சொல்வது உண்மையாகிறது

நீங்கள் சொல்வது உண்மையாகிறது

பலமான நேர்மறை அல்லது எதிர்மறை எண்ணங்கள் மற்றவர்களைப் பாதித்து எதிர்பார்ப்புகளை மாற்றி நடத்தையில் மற்றும் செயல்களில் மாற்றங்களைக் கொண்டு வருவது நடத்தை உறுதி விளைவு அல்லது வருவதுரைத்தலை தோற்கடித்தலாகும்.

நீங்கள் செயல்படாதவர் என உங்கள் மேலதிகாரி நினைத்தால் நீங்கள் பிரச்சினையில் இருப்பீர்கள். உங்களை முக்கியமான திட்டங்களிலிருந்து விலக்கி வைத்து செயல்பாடில்லாதவர் என்ற நிலையில் நீங்கள் வைக்கப்படலாம். உங்கள் சொந்த திறமைகளின் மீது நம்பிக்கை வைத்து மற்றும் உங்களின் தொழிலாற்றல்களின் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட்டால் அவை உங்களின் நடத்தை, உடல் மொழிகள் மற்றும் பேச்சுக்களில் பிரதிபலிக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Got a poor appraisal? One of these 8 reasons could be a factor

Got a poor appraisal? One of these 8 reasons could be a factor
Story first published: Friday, June 9, 2017, 17:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X