Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement

விமான பாகங்கள் தயாரிப்பில் களமிறங்குகிறது ரிலையன்ஸ்ட் இண்டஸ்ட்ரீஸ்

Posted by:
     Published: Sunday, July 29, 2012, 16:12 [IST]

Reliance May Invest 1 Bln Aerospace Business
 

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.5,600 கோடி முதலீட்டில் விமான பாகங்கள் தயாரிப்பில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.

ராணுவம் மற்றும் பயணிகள் சேவை, ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றுக்கான இயந்திரங்கள், ராடார் கருவிகள் உள்ளிட்ட உதிரிபாகங்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயார் செய்ய உளது.

வரும்காலத்தில் விமானங்களை தயாரிக்க தேவையான தொழில்நுட்பங்களை சுயமாக உருவாக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ்ஏரோபேஸ் நிறுவனங்கள் இதனை மையமாகக் கொண்டு நாசிக்கில் இருந்து செயல்பட உள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள், மூலப்பொருள்கள், பாகங்கள், கருவிகள் ஆகியவை குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும் பெரும் முதலீடுகளை இறக்கவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டிருக்கிறது. போயிங் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி விவேக் லால்தான் இந்த நிறுவன்ங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார். சுமார் 1500 பேருக்கு இந்நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும்

English summary
India's third-most valuable company, is expected to invest close to $1 billion over the next few years in its aerospace division.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Goodreturns iPad App
Goodreturns iPad App
Download GoodReturns iPad App and enjoy it. Learn more about Oneindia GoodReturns on the App Store.
Download Goodreturns iPad App