பருவமழை பொய்த்துப் போனதால் உள்நாட்டு உற்பத்தி 6 விழுக்காடாக குறையும் : மாண்டேக்சிங் அலுவாலியா

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொய்த்த பருவமழை- உள்நாட்டு உற்பத்தி மேலும் குறையும்
டெல்லி: நாட்டின் பருவமழை பொய்த்துப் போய் வறட்சி உருவாகக் கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6 விழுக்காடாக குறையக் கூடும் என்று திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

நாட்டின் பருவமழை பொய்த்துப் போய்விட்டது. அதனால் வறட்சி உருவாகும் நிலை இருக்கிறது. சில காரணங்களால் வேளாண்துறையின் வளர்ச்சி பாதிக்கப்படும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகும். இதேபோல்தான் தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையில் இருந்தும் நம்பிக்கை தரக்கூடிய பலமான அறிகுறிகள் ஏதும் இல்லை.

இத்தகைய நிலைமையால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6 விழுக்காடாகக் குறைந்து போகும். இது 9 ஆண்டுகளில் மிகக் குறைவானது.

நாட்டில் வறட்சி என்பது இப்போதுதான் முதல்முறையாக ஏற்படுவது கிடையாது. வறட்சியால் பிரச்சனைகள் வரும்போது அதனை நம்மால் சமாளிக்க முடியும். வறட்சி ஏற்பட்டால் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து நிச்சயம் சமாளிக்கும் என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Poor monsoon to pull down GDP growth to 6%, says Montek Singh Ahluwalia | பொய்த்த பருவமழை- உள்நாட்டு உற்பத்தி மேலும் குறையும்

Admitting that drought-like situation could hit economic growth, Planning Commission Deputy Chairman Montek Singh Ahluwalia has said that India's GDP may expand only 6% in the current fiscal, dipping below the nine-year low of 6.5% recorded in 2011-12.
Story first published: Sunday, August 5, 2012, 11:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X