லெதர் ஹேண்ட் பேக் மீது பெண்களுக்கு அலாதியான பிரியம் உண்டு. அவர்களுக்கான பிரத்யேக பொருட்களை அடுக்கி வைத்து எங்கு சென்றாலும் பையும், கையுமாகத்தான் திரிவார்கள். ஹேண்ட் பேக் பிரியர்களை கவருவதற்காக லெதர்பேக் தயாரிப்பில் உள்ள முன்னணியில் உள்ள ‘வீவ்' குளிர்கால ஹேண்ட் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது.
திங்கள்கிழமை சென்னையில் நடந்த லக்மே பேஷன் வாரத்தின்போது அழகான மாடல்கள் கேட்வாக் நடந்து இதனை அறிமுகம் செய்தனர். ஏகப்பட்ட சொகுசுகளுடன் கூடிய நவீன கவர்ச்சிகரமான ஹேண்ட் பேக் இது.
ஹேண்ட் பேக் தயாரிப்பில் தனி முத்திரையுடன் தனித்துவத்துடன் விளங்குவது வீவ். ஸ்ரீவத்சவா இன்டஸ்ட்ரியின் படைப்புதான் வீவ். 80 ஆண்டுகாலமாக இவர்கள் தோல்பைகள், ஹேண்ட் பேக்குள் தயாரிப்பில் உள்ளனர். ஏற்றுமதி தரம் வாய்ந்த பைகளை தயாரித்து வரும் இந்த நிறுவனத்தினர் பல ஐரோப்பிய படைப்புகளுக்குத் தேவையான லெதரையும் அதாவது அனுப்பி வைக்கின்றனர். சென்னையில் இதன் தொழிற்சாலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





