கட்டணத்தை குறைத்து, மல்லையா கூவி கூவி அழைத்தாலும் கிங்பிஷரில் ஏற ஆளில்லை

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கட்டணத்தை குறைத்து, மல்லையா கூவி கூவி அழைத்தாலும் கிங்பிஷரில் ஏற ஆளில்லை
டெல்லி: இந்தியாவில் இன்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகியவை தான் பயணிகளிடம் மிக அதிகமான கட்டணத்தை வசூலித்து வருகின்றன. கிங்பிஷர் விமான நிறுவனம் தான் மிகக் குறைவான கட்டணம் வசூலித்து வருகிறது.

வழக்கமாக மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கும் கிங்பிஷரின் நிலைமை படுமோசமாகியுள்ளது. பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. பல விமானங்கள் திட்டமிட்டபடி கிளம்புவதில்லை. காரணம், சம்பளம் தராததால் பைலட் வர மாட்டார் அல்லது அதில் செல்ல பயணிகளே இருப்பதில்லை. இதனால் வேறு வழியில்லாமல் கட்டணத்தை மிக மிகக் குறைத்துவிட்டது கிங்பிஷர்.

கடந்த ஜூலை மாதத்தில் விமான நிறுவனங்கள் வசூலித்த கட்டண விவரத்தை இந்திய விமானப் போக்குவரத்துத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மிகக் குறைவான கட்டணத்தை வசூலித்தது கிங்பிஷர் தான்.

அதே நேரத்தில் பட்ஜெட் ஏர்லைன் என்ற பெயரில் இயங்கும் இன்டிகோ தான் மிக அதிகமான கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதே போல ஜெட் ஏர்வேசும் மிக அதிக கட்டணம் வசூலித்துள்ளது.

சரியான நேரத்தில் கிளம்புவது, சிறந்த சேவை அளிப்பது ஆகியவற்றில் இன்டிகோ முன்னணியில் உள்ளது. இதனால் அதில் பயணிக்க அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர். தனது விமானத்தில் பயணிக்க போட்டி உள்ளதால் கட்டணத்தை அந்த நிறுவனம் அதிகமாக்கிவிட்டது.

குறிப்பாக கிங்பிஷர் விமானங்கள் பாடாய் படுத்தி வருவதால், அதை பயன்படுத்தி வந்த பயணிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அப்படியே இன்டிகோவுக்கு மாறிவிட்டன. இதனால் அந்த நிறுவனத்தின் காட்டி மழை கொட்டி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IndiGo, Jet Airways charged highest fares in July; Kingfisher is new low-cost | கட்டணத்தை குறைத்து, மல்லையா கூவி கூவி அழைத்தாலும் கிங்பிஷரில் ஏற ஆளில்லை

No-frills carrier IndiGo charged the highest fares on several sectors, while so-called 'first class' airline Kingfisher was the cheapest, latest official data for July shows, showcasing yet again some of strange ironies of India's aviation business.
Story first published: Thursday, August 30, 2012, 15:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X