ட்ரீம்லைனர் விமானம்: சென்னைக்கு அடுத்த வாரம் வருகிறது

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ட்ரீம்லைனர் விமானம்: சென்னைக்கு அடுத்த வாரம் வருகிறது
டெல்லி: ஏர் இந்தியா சேவையில் நேற்று இணைக்கப்பட்ட ட்ரீம்லைனர் போயிங் 787 விமானம், செப்டம்பர் 19-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு தனது முதல் உள்நாட்டு சேவையை தொடங்குகிறது.

இதையடுத்து மேலும் 6 நகரங்களுக்கு ட்ரீம்லைனர் சேவை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக இயக்குநர் ரோகித் நந்தன் கூறியுள்ளார். அடுத்த குளிர்காலத்திலிருந்து இந்த விமானம் தனது சர்வதேச சேவையைத் தொடங்கும்.

பொதுவாக பெரிய ரக விமானங்களுக்கான எரிபொருளை விட 15 முதல் 20 விழுக்காடு எரிபொருள் போயிங் 787 விமானத்தில் மிச்சமாகிறது. இதனால் 40 விழுக்காடு வரை செலவு குறைகிறது என்கின்றனர்.

பெயரில்லா ட்ரீம்லைனர்:

விமான் சேவைகள் பயன்பாட்டுக்கு வந்த காலம் தொட்டே விமானங்களுக்கு பெயரிடு நடைமுறை இருந்து வருகிறது. ரைட் சகோதர்ர்களிடம் அமெரிக்கா விமானத்தை வாங்கிய போது மிஸ் கொலம்பியா என பெயரிடப்பட்டது.

இதேபோல் 1948-ல் ஏர் இந்தியா நிறுவனமானது மதுரை பிரின்செஸ், காஷ்மீர் பிரின்செஸ், மலபார் பிரின்சென்ஸ் என்ற பெயர்களில் விமானத்தை இயக்கியது.

இப்படி விமானங்களுக்குப் பெயரிடும் நடைமுறையை கடைபிடித்து வந்த நடைமுறையை இப்போது ஏர் இந்தியா கைவிட்டிருக்கிறது. அடுத்த வார இயக்கப்பட உள்ள ட்ரீம்லைனர் விமானத்துக்கு எந்த பெயரும் வைக்கவில்லை. இதுவே சர்ச்சைக்கும் காரணமாகிவிட்டது. ஒரு பெயர் வைப்பதில் என்ன செலாவாகிடப் போகிறது என்பது ஒரு தரப்பு கேள்வி. இன்னொரு தரப்போ, விமானங்கள் என்பவை தூதர்களைப் போன்றவர்கள். இதனால் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பெயர்கள் சூட்டப்பட்டன என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dreamliner to start operations next week, AI’s hopes fly | ட்ரீம்லைனர் விமானம்: சென்னைக்கு அடுத்த வாரம் வருகிறது

Air India's newly inducted Boeing 787 Dreamliner will start flying on domestic routes from next Wednesday and begin international flights from winter to Europe and Australia. AI, which faced an over four-year delay in delivery of this aircraft, is scheduled to get five more Dreamliners by the year-end and then the remaining 22 by 2016.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X