டீசல் விலை உயர்வைக் கண்டித்து 20ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: நாளை முதல் சரக்கு புக்கிங் நிறுத்தம்

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போச்சு, போச்சு..டீசல் விலை உயர்வைக் கண்டித்து 20ம் தேதி லாரிகளும் ஓடாதாம்!
கோவை: டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேசிய அளவில் வரும் 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கே. நல்லத்தம்பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சுங்கவரி உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. ஆனால் கேளிக்கை வரியையும் சேர்த்து தமிழகத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.7 பைசா உயர்ந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த மாசில்லா டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.21 உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

டீசல் விலை உயர்வால் பருப்பு, எண்ணெய், காய்கறிகள், மணல் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கேரள அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.1 குறைத்துள்ளது போல் தமிழக அரசும் செய்ய வேண்டும்.

டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக் கோரி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு இன்று பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் அகில இந்திய அளவில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நாளைய மும்பையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் திட்டமிட்டபடி வரும் 20ம் தேதி முதல் தேசிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சுமார் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கும். நாளை முதல் சரக்கு புக்கிங் நிறுத்தப்படும் என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lorry strike from sep.20 condemning diesel price rise | போச்சு, போச்சு..டீசல் விலை உயர்வைக் கண்டித்து 20ம் தேதி லாரிகளும் ஓடாதாம்!

Lorry owners to go on strike from september 20 condemning hike in diesel price. Nearly 65 lakh lorries from all over the nation will participate in this strike.
Story first published: Monday, September 17, 2012, 11:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X