சேவையைத் துவங்கிய ட்ரீம்லைனர் விமானம்: சென்னை வந்தடைந்தது- பயணிகள் மகிழ்ச்சி

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னைக்கு முதல் முறையாக வந்த ட்ரீம்லைனர்.. பயணிகள் 'திரில்' பயணம்!
சென்னை: ஏர் இந்தியா சேவையில் அண்மையில் இணைக்கப்பட்ட ட்ரீம்லைனர் போயிங் 787 விமானம் இன்று தனது சேவையைத் தொடங்கியது. டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் சென்னை வந்தடைந்தது.

ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ள ட்ரீம்லைனர் போயிங் 787 விமானம் தனது சேவையை இன்று முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் நண்பகல் சென்னை வந்தடைந்தது.

256 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் விமான நிலையத்தில் கூறுகையில்,

ட்ரீம்லைனர் விமானத்தில் பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதில் நல்ல இடவசதி இருந்தது. மற்ற விமானங்களுடன் ஒப்பிடுகையில் சத்தம் குறைவாகவும், பயண நேரம் 25 நிமிடம் குறைவாகவும் உள்ளது.

சொகுசு இருக்கைகள் மிகவும் வசதியாக இருந்தது. பிற விமானங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணமே இதற்கும் வசூலிப்பது சந்தோஷமாக உள்ளது. இதனால் இந்த விமானம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்றனர்.

பல்வேறு சிக்கல்களில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை ட்ரீம்லைனர் விமானம் தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லி-சென்னை, பெங்களூர் வழித்தடங்களில் மட்டுமே இது இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dreamliner kick starts its service, reaches Chennai | சென்னைக்கு முதல் முறையாக வந்த ட்ரீம்லைனர்.. பயணிகள் 'திரில்' பயணம்!

Air India's newly-acquired Boeing 787 Dreamliner has started its service today from Delhi to Chennai. Passengers who reached Chennai in the new flight are very much pleased about their journey. Dreamlliner is expected to give a boost to Air India.
 
Story first published: Wednesday, September 19, 2012, 13:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X