பங்கு விற்பனை விவகாரம்: ப.சி.யுடன் ஜெட் ஏர்வேஸ், எதிஹாட் நிர்வாகிகள் சந்திப்பு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப.சிதம்பரத்துடன் ஜெட் ஏர்வேஸ், எதிஹாட் நிர்வாகிகள் சந்திப்பு
டெல்லி: ஜெட் ஏர்வேஸின் 24% பங்குகளை அபுதாயின் எதிஹாட் ஏர்வேஸ் வாங்க உள்ள நிலையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லியில் இன்று இரு நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.

விமான சேவையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அபுதாபியின் எதிஹாட்ஸ் நிறுவனத்துடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் ரூ1800 கோடிக்கு ஜெட் ஏர்வேஸின் 24% பங்குகளை வாங்க எதிஹாட் நிறுவனம் முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து டெல்லி நார்த் ப்ளாக்கில் நிதி அமைச்சரது அலுவலகத்தில் ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயலு எதிஹாட் நிறுவனத்தின் தலிவர் ஜேம்ஸ் ஹோகனும் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் இருவரும் விரிவாக பேசவில்லை. நிதி அமைச்சருடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது என்று மட்டுமே கருத்து தெரிவித்தனர். இருவரும் நேற்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தனர்.

எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்கினால் இந்திய விமான சேவைத் துறையில் முதலாவது அன்னிய முதலீடாக இது இருக்கும்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet's Naresh Goyal, Etihad CEO meet Finance Minister | ப.சிதம்பரத்துடன் ஜெட் ஏர்வேஸ், எதிஹாட் நிர்வாகிகள் சந்திப்பு

Ahead of finalising Etihad's deal to acquire 24 per cent stake in the Jet Airways, top brass of the two carriers today met Finance Minister P Chidambaram and are understood to have discussed regulatory requirements.
Story first published: Friday, February 1, 2013, 16:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X