குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கிறது அமெரிக்க வர்த்தக குழு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரேந்திர மோடியை நாளை சந்திக்கிறது அமெரிக்க வர்த்தக குழு
வாஷிங்டன்: அமெரிக்க எம்.பி. தலைமையிலான வர்த்தக குழுவினர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க இருக்கிறது.

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பிருப்பதாகக் கூறி அமெரிக்கா அவருக்கு விசா மறுத்து வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றுவதற்கு அவருக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் எம்.பி.யான ஆரோன் ஸ்ஹோக் தலைமையிலான அந்நாட்டு வர்த்தகக் குழு நேற்று முதல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறது. இக்குழுவினர் நாளை மோடியை அகமதாபத்தில் சந்திக்க இருக்கின்றனர். இக்குழு பெங்களூர் மற்றும் டெல்லிக்கு செல்கிறது.

நரேந்திர மோடிக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான விரிசல் முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது என்பது இக்குழுவின் அகமதாபாத் பயணம் சுட்டிக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Congressional, business team to visit Gujarat | நரேந்திர மோடியை நாளை சந்திக்கிறது அமெரிக்க வர்த்தக குழு

US Congressional and business delegation, visiting India this week, will feature a meeting with Gujarat chief minister Narendra Modi.
Story first published: Wednesday, March 27, 2013, 15:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X