சென்னை விமான நிலையத்தின் புதிய உள்நாட்டு முனையம் செயல்படத் தொடங்கியது

By Sutha
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை விமான நிலையத்தின் புதிய  உள்நாட்டு முனையம் செயல்படத் தொடங்கியது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக விரிவுபடுத்திக் கட்டப்பட்டுள்ள உள்நாட்டு முனையம் இன்று முதல் செயல்படத் தொடங்கியது

சென்னை விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு முனையம் மற்றும் காமராஜர் உள்நாட்டு முனையம் இருந்தன. அதை சமீபத்தில் பெரும் பொருட் செலவில் வி்ஸ்தரித்து புதுப்பித்தனர்.

இந்த புதிய முனையங்களை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியைக் கூட முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தது நினைவிருக்கலாம்.

இதையடுத்து மார்ச் 21ம் தேதி முதல் புதிய. உள்நாட்டு முனையத்தில் அரைவல் பகுதி செயல்படத் தொடங்கியது. தற்போது இன்று முதல் டிபார்ச்சர் பகுதி அதாவது புறப்பாடு பகுதி செயல்பட தொடங்கியுள்லது. முழுமையான விமானப் போக்குவரத்து ஏப்ரல் 15ம் தேதி முதல் தொடங்குகிறது.

உள்நாட்டு முனைய புறப்பாடு பகுதியில் உபயோகிப்பாளர் கட்டணம் ரூ.166 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பன்னாட்டு விமான நிலையத்தில் உபயோகிப்பாளர் கட்டணம் ரூ.668 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணம் மே 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai airport's new internal terminal begins to function | சென்னை விமான நிலையத்தின் புதிய உள்நாட்டு முனையம் செயல்படத் தொடங்கியது

Chennai airport's new internal terminal has begun its function from today.
Story first published: Wednesday, April 10, 2013, 13:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X