வீழ்ச்சியில் இரண்டாவது இடத்தில் இந்திய பங்கு வர்த்தகம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2013ம் ஆண்டு தொடங்கி இதுவரை இந்தியாவின் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக செயல்பட்டு வந்திருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக வளர்ந்த நாடுகள் மற்றும் பிரிக் நாடுகளின் பங்கு வர்த்தக செயல்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியாவின் பங்கு வர்த்தக செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது.

 

இந்த ஆண்டில் மற்ற நாடுகளின் பங்கு வர்த்தக செயல்பாட்டோடு இந்திய பங்கு வர்த்தக செயல்பாட்டை ஒப்பிட்டுப் பார்ப்போம்.

இந்தியன் எஸ் அன்ட் பி சிஎன்எக்ஸ் நிப்டி

இந்தியன் எஸ் அன்ட் பி சிஎன்எக்ஸ் நிப்டி

இந்தியாவின் எஸ் அன்ட் பி சிஎன்எக்ஸ் நிப்டி பங்கு வர்த்தகம் 7 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழலாகும். மேலும் பொருளாதார நிதி பற்றாக்குறை மற்றும் பணவீக்க அதிகரிப்பு ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. மேலும் இந்த 10 ஆண்டுகளில் ஜிடிபி வளர்ச்சியும் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

ஜப்பான் நிக்கெய்

ஜப்பான் நிக்கெய்

ஜப்பானின் நிக்கெய் பங்கு வர்த்தகம் இந்த ஆண்டில் சிறந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது. 2013, ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை இந்த பங்கு வர்த்தகத்தின் வளர்ச்சி 27 சதவீதம் ஆகும். ஜப்பானின் சென்ட்ரல் வங்கி மற்றும் ஜப்பானின் பண மதிப்பான யென் ஆகியவை இந்த பங்கு வர்த்தகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்கின்றன.

அமெரிக்க டவ் ஜோன்ஸ்
 

அமெரிக்க டவ் ஜோன்ஸ்

அமெரிக்க பங்கு வர்த்தகமான டவ் ஜோன்ஸ் எதிர்பார்த்ததைவிட 1 புள்ளி அதிகரித்து ஒரு புதிய சாதனையையும் செய்திருக்கிறது. படு பாதாளத்துக்குச் சென்ற அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போது வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பது, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

சீன ஷாங்காய் கம்போசிட்

சீன ஷாங்காய் கம்போசிட்

சீனாவின் ஷாங்காய் கம்போசிட் பங்கு வர்த்தகம் 1.91 சதவீத அளவே குறைந்திருக்கிறது. எனினும் ஏராளமான முதலீட்டாளர்கள் இந்த பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரேசில் ஐபிஓவி

பிரேசில் ஐபிஓவி

பிரேசிலின் ஐபிஓவி பங்கு வர்த்தகம் தான் இந்த ஆண்டு மிகவும் மோசமான வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. அதாவது 9.61 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பிரேசிலுக்கு அடுத்த நிலையில் இந்தியாவின் பங்கு வர்த்தகம் இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's stock markets worst performers after Brazil | பங்கு சந்தை வீழ்ச்சியில் பிரேசில் பர்ஸ்ட், இந்தியா செகன்ட்

India's stock markets indices have been the worst performing amongst developed and BRIC nations in 2013. Take a look at how are Indian stock markets have performed compared to global peers.
Story first published: Thursday, April 11, 2013, 18:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X