நிறைய தங்கம் வைத்திருக்கிறீர்களா? எஸ்பிஐ கோல்டு டெபாசிட் ஸ்கீமில் சேரலாமே

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நீங்கள் தங்க நகைகள் அல்லது தங்க கட்டிகள் போன்றவற்றை வைத்திருந்தால் அவற்றை எஸ்பிஐ கோல்டு டெபாசிட் ஸ்கீமில் முதலீடு செய்யலாம். அதன் மூலம் நல்ல வட்டியையும் மற்றும் வரி சேமிப்பையும் பெறலாம்.

(What are gold funds? Should you invest in them? )

நீங்கள் வைத்திருக்கும் தங்க நகைகளின் தரத்தைப் பொருத்து அந்த நகைகளை உருக்கி அதை தங்கக் கட்டிகளாக மாற்றித் தர எஸ்பிஐ ஏற்பாடு செய்து தருகிறது. அதோடு நீங்கள் தங்க நகைகளை டெபாசிட் செய்த 90 நாள்களுக்கு ஒரு கோல்டு டெபாசிட் சான்றிதழையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறது.

மேலும் தங்கத்தை டெபாசிட் செய்த காலம் முடிந்த பின்பு அதாவது 3, 4 அல்லது 5 ஆண்டுகள் முடிந்த பின்பு நீங்கள் டெபாசிட் செய்த தங்கத்தோடு வட்டியும் சேர்த்து வழங்கப்படும். அதாவது அந்த மதிப்பை தங்கமாகவோ அல்லது அதற்கு சமமான பணமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்பிஐ கோல்டு டெபாசிட் திட்டத்தின் மூலம் கிடைக்கும் 6 நன்மைகள்

தங்கத்தின் மீதான வட்டி

தங்கத்தின் மீதான வட்டி

நீங்கள் எஸ்பிஐயின் லாக்கரில் வைக்கும் உங்களின் தங்கம் எதையும் தரப் போவதில்லை. ஆனால் லாக்கரில் உறங்கிக் கிடக்கும் உங்கள் தங்கத்தின் மூலம் உங்களுக்கு கணிசமான வட்டி கிடைக்கும். எஸ்பிஐ கோல்டு டெபாசிட் திட்டம் வழங்கும் சட்ட திட்டங்களின்கீழ் தங்கத்தின் மதிப்பில் வட்டி கணக்கிடப்பட்டு, அது பணமாக வழங்கப்படும்.

 வரி சேமிப்பு

வரி சேமிப்பு

நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தங்க நகை வைத்திருந்தால் அதற்கான சொத்து வரியை அரசுக்கு நீங்கள் செலுத்த வேண்டும். ஆனால் அந்த தங்கத்தை நீங்கள் எஸ்பிஐ கோல்டு டெபாசிட் ஸ்கீமில் டெபாசிட் செய்திருந்தால், நீங்கள் சொத்து வரியோ அல்லது வருமான வரியோ செலுத்த தேவையில்லை.

தங்க விலை உயர்ந்தால் உங்களுக்கு லாபம்

தங்க விலை உயர்ந்தால் உங்களுக்கு லாபம்

உங்களின் கோல்டு டெபாசிட் ஸ்கீம் முதிர்வு பெறும் போது, டெபாசிட் செய்திருந்த தங்கத்தின் விலை உயர்ந்திருந்தால், நீங்கள் டெபாசிட் செய்திருக்கும் தங்கத்திற்கு அதிகரித்திருக்கும் தொகைக்கு ஏற்ப உங்களுக்கு அதிக வட்டி கிடைக்கும்.

லோன் வசதி

லோன் வசதி

நீங்கள் டெபாசிட் செய்திருக்கும் தங்கத்தின் மதிப்பில் 75 சதவீம் வரை இந்தியாவில் உள்ள எந்த ஒரு எஸ்பிஐ வங்கியிலும் நீங்கள் மிக எளிதாக லோன் பெறலாம்.

திருட்டுப் பயம் இல்லை

திருட்டுப் பயம் இல்லை

நீங்கள் எஸ்பிஐ கோல்டு டெபாசிட் ஸ்கீமில் வைத்திருக்கும் உங்கள் தங்கத்திற்கு லாக்கர் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் அந்த நகைகள் திருட்டுப் பயமில்லாமல் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

டெபாசிட் அளவு

டெபாசிட் அளவு

நீங்கள் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் எஸ்பிஐ கோல்டு டெபாசிட் ஸ்கீமில் வைக்கலாம். அதற்கு குறிப்பிட்ட அதிகபட்ச அளவு என்று எதுவும் இல்லை. ஆனால் குறைந்தபட்சமாக 500 கிராம் தங்கமாவது இருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI Gold deposit scheme: 6 reasons to invest | தங்கத்தை லாக்கரில் வைக்காமல் எஸ்பிஐ கோல்டு டெபாசிட் ஸ்கீமில் போடலாமே

If you have gold in the form of jewellery or bars you can surrender it under the SBI Gold Deposit Scheme and earn interest and tax breaks. SBI will arrange to melt your jewellery or gold and convert into bars and depending on the purity of the gold you deposited and will send you a gold deposit certificate within 90 days. You will get a temporary provisional certificate though. When the deposit period is over, after three, four or five years you can get the principal along with the interest, either in the form of gold gold (0.999 purity) or cash equivalent of gold as on that day. Above are 6 benefits of the SBI Gold Deposit scheme.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X