கிராமங்களில் வங்கிக் கிளையைத் திறங்க - ரிசர்வ் வங்கி உத்தரவு!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிராமங்களில் வங்கிக் கிளையைத் திறங்க  - ரிசர்வ் வங்கி உத்தரவு!
வங்கிகளின் சேவைகளைப் பெற முடியாத கிராமங்களில் வங்கிக்கிளைகளை விரிவுபடுத்த வேண்டும். இது தொடர்பான, 2013-2016 ஆம் ஆண்டிற்கான வரைவு திட்டத்தை தயாரிக்குமாறு வங்கிகளிடம், ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

( IPL row: India Cements shareholders are the ultimate losers)

இது தொடர்பார ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை திறம்பட எளிய முறையில் செயல்படுத்த, வங்கிகளே இல்லாத கிராமப்புறங்களில் வங்கிக் கிளைகளை விரிவாக்கம் செய்வது அவசியம். வங்கிகளின் விரிவாக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, 2013-2016 அடங்கிய மூன்றாண்டிற்கான வரைவு திட்டத்தை தயார் செய்து வைப்பது அவசியம்.

இவ்வாறு, வங்கிச் சேவைகள் இல்லாத கிராமப்புறங்களில் வங்கிகளை விரிவாக்கம் செய்ய சிறப்பு கடன் சலுகைகள் வழங்கப்படும். வருடாந்திர வங்கி விரிவாக்க வரைவுத் திட்டத்திலிருந்து கூடுதலாக 25% நிதி வழங்கப்படும்.

இவ்வாறு கிராமப்புறங்களில் வங்கிகளின் கிளைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

அரசின் நேரடி மானியத் திட்டம் என்பது ஆதார் அட்டையுடன் இணைப்பிலுள்ள வங்கிக் கணக்கில் மானியத்தை நேரடியாக அரசு செலுத்துவதாகும். ஆகையால், நாட்டில் பல்வேறு இடங்களில் இருக்கும் மக்கள், வங்கிச் சேவைப் பெற முடிந்தால் தான், இத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த முடியும். இதன் விளைவாகவே ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையை விடுத்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI advises banks to open branches in unbanked rural centres

Reserve Bank of India (RBI) has asked banks to expand their branches in unbanked rural centres and draw up their next Financial Inclusion Plan (FIP) for the period 2013-16.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X