வரலாறு காணாத வீழ்ச்சி!! சென்செக்ஸ்,ரூபாய்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலாறு காணாத வீழ்ச்சி!! சென்செக்ஸ்,ரூபாய்...
கடத்த வராம் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஒரு மோசமான வாரமாக அமைந்தது. பங்குச் சந்தை, அந்நிய செலாவணி சந்தை மற்றும் இந்திய பொருளாதார தரவுகள் ஆகிய மூன்றும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த மோசமான நிலைக்கு இந்திய பொருளாதாரத்தை மற்றும் அதனைச் சூழ்ந்திருக்கும் எண்ணற்ற பிரச்சினைகளே முக்கிய காரணம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

(SBI Home Loans: 3 reasons to opt for them)

சென்செக்ஸ் சுமார் 452 புள்ளிகள் குறைந்தது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 56.71 என்கிற அளவில் வர்த்தகமாகியது. எப்பொழுது வேண்டுமானாலும் 57 ரூபாய் தாண்டி விடும் என்கிற நிலையே பெரும்பாலும் காணப்பட்டது. அதோடு இல்லாமல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அனைவரின் எதிபார்ப்புக்கிணங்க சுமார் 5% குறைந்து விட்டது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். மேலும் வட்டி விகிதம் குறைப்பு பற்றிய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு, பங்கு விற்பனை ஒரு ஆட்டம் கண்டது

பங்கு சந்தை படிப்படியாக சரியத் தொடங்கியது. இதில் ஐடிசி, ரிலையன்ஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் பங்குகளும் அடக்கம், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகள் அதிகம் காயம்படாமல் தப்பித்து விட்டன. இரு நிறுவனங்களுக்கும் சமீபத்தில் ஏற்பட்ட சிராய்ப்புகள் மற்றும் பிரச்சனைகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. உயர்ந்து வரும் டாலரின் மதிப்பு மேற்கூறிய இரு நிறுவனங்களுக்கும் நன்மையே செய்யும் என்கிற எதிர்பார்ப்பு இந்த இரு நிறுவனங்களின் பங்குகளை சரிவிலிருந்து காப்பாற்றியது.

டிஎல்எஃப் நிறுவனத்தின் பங்குகள் இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4% கீழ் இறங்கியது. மற்றறொரு குறிப்பிடத்தக்க தோல்வியாளர் சுஸ்லான் நிறுவனம் ஆகும். இதன் பங்குகள் சுமார் 10% வரை கீழ் இறங்கியது. இதற்கு இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு அதிகரித்ததே முக்கிய காரணமாகும்.

உலோகத் துறை பங்குகளான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், சயில் மற்றும் டாடா ஸ்டீல் போன்ற நிறுவங்களும் தோல்வியிலிருந்து தப்பவில்லை. ஆக மொத்தத்தில் உலோகத் துறை பங்குகள் உருகிவிட்டன!!.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு இது ஒரு மகத்தான நாளாக அமைந்தது. அதனுடைய நான்காவது காலாண்டு லாபம் 592.7 கோடியாக அதிகரித்தது. போன நிதியாண்டின் இதே சமயத்தில் இது 333.8 கோடியாக இருந்தது. எனவே இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3% அதிகரித்தது.

நில வணிகம் மற்றும் நிறுவன பங்குகளை பார்தி ஏர்டெல் நிறுவனம் விற்கப் போவதாக வந்த செய்திகளை அடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் சற்றே குறைந்தன.

இதற்கிடையில், ஆசிய சந்தைகளில் ஏற்றத்துடன் முடிவடைந்தன. நிக்கேய் வியாழக்கிழமை ஏற்பட்ட இழப்புகள் சிலவற்றை சரிகட்டியது.

ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய வருவாயை அறிவித்து விட்டதால், பங்கு சந்தை ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்புக்காக காத்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex, rupee, gdp...all sink

It was a bad day for the stocks markets, forex markets and macroeconomic data with all of the three falling due to myriad problems and economic worries.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X