வீடு நிலம் விற்கப்போறீங்களா ? 1% வரி கட்டணுமாம்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீடு நிலம் விற்கப்போறீங்களா ? 1% வரி கட்டணுமாம்!
அசையா சொத்துக்களை விற்பனை செய்தால் அதற்கு 1% வரி பிடித்தம் செய்யப்படும் என்று 2013 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த வரிபிடித்தத்தை அமல்படுத்தப்போவதாக வருமான வரித் துறை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட வீடு, நிலம் போன்ற அசையா சொத்தினை விற்பனை செய்தால் அதற்கு 1 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். ஆகையால், வீட்டையோ, நிலத்தையோ விற்கப் போவதாக இருந்தால், அதன் மதிப்பிலிருந்து 1 சதவிகிதம் குறைவாக பெற்றுக் கொள்ள மனதைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

Idea stock jumps 8 per cent; hits 5-year high)

மேலும், சொத்தினை விற்பவர்களுக்கு வருமான வரி அட்டை அதாவது பேன் கார்டு இல்லையென்றால், 1 சதவிகித வரிக்குப் பதிலாக 20 சதவிகிதம் வரி செலுத்த வேண்டுமாம். ஆக, சொத்தினை விற்பவர்கள் கண்டிப்பாக பேன் கார்டு வைத்திருக்க வேண்டும் என்பதைச் சொல்லுவதாக அமைந்திருக்கிறது இந்த விதிமுறை.

இது போன்ற நடவடிக்கைகள் வரி ஏய்ப்பைத் தடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். பெரும்பாலும், ரியல் எஸ்டேட் துறையில், வங்கிகளுடன் தொடர்பில்லாத நேரடி பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது. அப்படியிருக்க இது வரி ஏய்ப்பை எந்த அளவுக்கு கட்டுபடுத்தும் என்பது கேள்விக்குறியாக கருதப்படுகிறது. எனினும், வணிக நோக்கம் கொண்டு, ஒரே சொத்து இடைத்தரகர்கள் மூலம் பல கைகள் மாறும் நிலை, இந்த வரிவைதிப்புக் கொள்கையினால் மாறக் கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

பில்டரிடம் இருந்து புதிய வீடு வாங்குபவர்கள் இந்த வரி கட்டத் தேவையில்லை.

இப்படி, நாலாப் பக்கமும் அணை கட்டினால் ஒரு மனுஷன் என்னதான் பண்ணுறது...!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TDS of 1% on sale of immovable property notified

A TDS of 1 per cent on sale of immovable property that was announced in the Union Budget of 2013 has been notified by the Income Tax Department.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X