புது வங்கிகளுக்கான லைசென்ஸ்: ஆர்பிஐ விளக்கம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புது வங்கிகளுக்கான லைசென்ஸ்: ஆர்பிஐ விளக்கம்
புது வங்கிகள் அமைப்பதற்கான அனுமதி முன்பு தீர்மானிக்கப்பட்டதைப் போல் 1 வருடம் இல்லாமல், இப்போதிலிருந்து சுமார் 18 மாதம் வரையில், செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புது வங்கிகளுக்கான லைசென்ஸ்கள் தொடர்பான கேள்விகளுக்குரிய விளக்கத்தை அளித்துள்ள ஆர்பிஐ, விண்ணப்பிக்கும் தகுதி படைத்த நிறுவனங்கள் குறைந்த பட்சம் 51 சதவீத பொதுப் பங்குகளை தன் வசம் வைத்திருத்தல் அவசியம் என்று கூறியுள்ளது. மேலும், "ப்ரொமோட்டர் குழுவின் பகுதியாக விளங்கும் நிறுவனங்கள், அதாவது பொதுமக்கள் சுமார் 51 சதவீதத்திற்குக் குறையாத வோட்டிங் ஈக்விட்டி பங்குகளைக் கொண்டிருக்கும் இந்நிறுவனங்கள், என்ஓஎஃப்ஹெச்ஸி -இன் (ஹோல்டிங் நிறுவனம்) மொத்த வோட்டிங் ஈக்விட்டி பங்குகளில் 51 சதவீதத்திற்குக் குறையாத பங்குகளை வைத்திருக்க வேண்டும்." என்றும் அது கூறியுள்ளது.

மேலும், வங்கி ஆரம்பிக்க உத்தேசித்திருக்கும் விண்ணப்பதாரர்கள், பிற ரெகுலேட்டர்களை அணுகி அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வஸ்துக்களை வங்கி ஹோல்டிங் நிறுவனத்தின் கீழ் கொண்ட வர வேண்டும் என்றும் ஆர்பிஐ வலியுறித்தியுள்ளது. மேலும், ப்ரொமோட்டர் குழுவைச் சேர்ந்த நான்-ஃபைனான்ஷியல் சேவை நிறுவனங்கள் மற்றும் நான்-ஆபரேட்டிவ் ஃபைனான்ஷியல் ஹோல்டிங் நிறுவனங்கள் மட்டுமே ஹோல்டிங் நிறுவனத்தின் பங்குகளை கைக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளது.

புதிய வங்கி லைசென்ஸ்களுக்கான சட்டதிட்டங்களை பிப்ரவரி மாதத்தில் கொண்டு வந்த போது, சுமார் 500 கோடி ரூபாய் மூலதனமும், குறைந்த பட்சம் 10 வருட ட்ராக் ரெக்கார்டையும் கொண்டிருக்கும் கார்ப்பரேட்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே வங்கி வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவர் என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது. வங்கி ஒன்றை தொடங்க விழைவோர், அதற்கான விண்ணப்பங்களை ஜூலை 1, 2013 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆர்பிஐ, விண்ணப்பதாரர்களின் பெயர்களை அதன் வலைத்தளத்தில் வெளியிடும். இது வரை சுமார் 34 தனிநபர்கள்/நிறுவனங்களிலிருந்து, இது தொடர்பாக சுமார் 443 வினாக்கள் பெறப்பட்டுள்ளதாக ஆர்பிஐ கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI issues clarification on new banks licence

The Reserve Bank today said in- principle approval for setting up of new banks will now be valid for 18 months, up from earlier proposed one year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X