நாட்டின் மொத்த வரி வருவாய் 21% அதிகரிப்பு!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மொத்த வரி வருவாய் 21% அதிகரிப்பு!!!
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நாட்டின் மொத்த நேரடி வரி வருவாய் ரூ63,252 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சுமார் ரூ52,231 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இது சுமார் 21% அதிகம் என அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கார்பரேட் வரி வருவாய் சுமார் 14.91% உயர்ந்து, ரூ 27,957 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே பருவத்தில் சுமார் ரூ24,329 கோடியாக இருந்தது. நாட்டின் மொத்த தனிநபர் வருமான வரி வருவாய் சுமார் 27.29% அதிகரித்து ரூ34,805 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே பருவத்தில் ரூ 27,343 கோடியாக இருந்தது.

நாட்டின் நேரடி வரி வருவாய் சுமார் 6.44% அதிகரித்து ரூ37,576 கோடியாக உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே பருவத்தில் இது ரூ 35,322 கோடியாக இருந்தது என தரவுகள் தெரிவிக்கின்றன.

நிகர சொத்து வரி சுமார் 86.67% வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ15 கோடியாக இருந்த மொத்த வசூல் இந்த ஆண்டு 28 கோடியாக வளர்ந்துள்ளது.அதேசமயத்தில் பங்கு பரிவர்த்தனை வரி வசூல் இந்த நிதியாண்டில் சுமார் -14.63% வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் சுமார் ரூ 540 கோடியாக இருந்த இந்த வரிவசூல் இந்த நிதியாண்டில் ரூ 461 கோடியாக சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gross direct taxes collections up 21% in April-May

Gross direct tax collections during April-May of the current financial year 2013-14 was up by 21 percent at Rs 63,252 crore as against Rs 52,231 crore in the same period last year, government data showed.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X