மருந்துகளின் விலை பாதியாக குறையும்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருந்துகளின் விலை பாதியாக குறையும்!
புதிய மருந்துக் கொள்கையின் அடிப்படையில், சுமார் 150 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளைக் குறைத்து, அது தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் அறிக்கை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த அறிக்கை வந்தபின், முக்கியமான புற்று நோய் மருந்துகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் போன்றவற்றின் விலை 50% குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.

(India not to ban gold imports or hike gold import duty )

இந்தப் அறிக்கையின் விளைவாக, நோய் எதிர்ப்பு மருந்துகளின் விலைகளில் பெரிய மாற்றம் இருக்கும். மருந்துகளைப் பொருத்து, 15-50% வரை மருந்துகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, நமக்கு நன்கு தெரிந்த வலி நிவாரண மருந்தான பாராசிட்டமால், 25-55 % வரை விலை குறையும். பாராசிட்டமால் ஊசி மருந்தின் விலை 25%, சிரப்புகளின் விலை 35%, மாத்திரைகளின் விலை 55% குறையும் என்கின்றனர்.

சமீபத்தில் அரசு வெளியிட்ட, மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையின் தொடர்ச்சியாக, இந்த மருந்து விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. இதன் மூலம், கிட்ட தட்ட 348 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் கட்டுப்படுத்தப்படும். மருந்துச் சந்தை மதிப்பில் ஒரு சதவிகிதத்துக்கும் மேலாக விற்கும் குறிப்பிட்ட வகையில் இருக்கும், அனைத்து கம்பெனி மருந்துகளின் விலைகளையும் ஒன்றிணைத்து, அதன் சராசரி கணக்கிடப்படும். இந்தப் புதிய விதியின்படி, சராசரி விலையை விட அதிகமாக இருக்கும் மருந்துகளின் விலையை மேலும் உயர்த்த முடியாது.

இந்த அறிவிப்பு வெளியிட்ட 45 நாட்களுக்குள், பழைய மருந்துகளை மாற்றி, புதிய விலைகள் அச்சடிக்கப்பட்ட மருந்துகளை வழங்க வேண்டும் என மருந்து தயாரிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Prices of crucial drugs likely to be slashed by up to half: Report

The National Pharmaceutical Pricing Authority (NPPA) is set to notify revised prices of as many as 150 essential medicines in line with the new pharma pricing policy. Once the notification comes, experts expect prices of key cancer drugs, antibiotics and medicines will become cheaper by up to 50 per cent.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X