நேரடி அன்னிய முதலீடுகளில் மாற்றம்: ப.சிதம்பரம் அறிவிப்பு

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் உள்ள பல துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை அதிகரிக்க இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இந்தியாவில் உள்ள பாதுகாப்புத் துறை, மல்டி ப்ரான்ட் சில்லறை வணிகம் மற்றும் தொலைத் தொடர்பு துறை போன்றவற்றில் அதிகமான அளவில் அன்னிய முதலீட்டைக் கொண்டுவர இந்த அமைப்பு உதவி செய்யும். இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையை சமாளிக்கலாம் என்று நிதியமைச்சர் நம்புகிறார்.

 

இந்திய பொருளாதாரம் சம்பந்தமான செயலர் அரவிந்த் மாயராம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் போது, "நேரடி அன்னிய முதலீடு சம்பந்தமாக நாங்கள் ஒரு அறிக்கையை நிதியமைச்சரிடம் சமர்ப்பித்திருக்கிறோம். அந்த அறிக்கை சம்பந்தமாக அரசு முடிவு எடுக்கும் போது அதன் அடிப்படையில் செயல்பாடுகள் முடுக்கி விடப்படும். நாங்கள் கொடுத்திருக்கும் அறிக்கை பரிந்துரைகள் மட்டுமே. ஆனால் பாலிசியை முடிவு செய்வது டிஐபிபி" என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்திய பாதுகாப்புத் துறையில் 26% அளவிலான நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த முதலீட்டை முதலீட்டின் அளவை 49% அளவிற்கு அதிகரிக்கலாம் என்று நிதியமைச்சர் ஏற்படுத்தி இருக்கும் அமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது.

மல்டி ப்ரான்ட் துறை

மல்டி ப்ரான்ட் துறை

மல்டி ப்ரான்ட் துறையில் அன்னிய முதலீட்டாளர்களை அதிக அளவில் முதலீடு செய்ய வைக்க, நேரடி அன்னிய முதலீட்டின் அளவை ஃபாரின் இன்வெஸ்ட்மன் ப்ரமோசன் போர்ட் (எஃப்ஐபிபி)ன் கீழ் 74% அளவிற்கு அதிகரிக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது. தற்போதுள்ள நேரடி அன்னிய முதலீட்டின் அளவு 51% மட்டுமே.

சிங்கிள் ப்ரான்ட் துறை

சிங்கிள் ப்ரான்ட் துறை

சிங்கிள் ப்ரான்ட் சில்லறை வணிகத் துறையில் இந்திய அரசின் ஒப்புதலின் கீழ் 100% அன்னிய முதலீடு இருக்கிறது. ஆனால் அதற்குப் பதிலாக ஆட்டோமேட்டிக் ரூட்டின் கீழ் சிங்கிள் ப்ரான்ட் சில்லறை வணிகத் துறையில் 49% நேரடி அன்னிய முதலீட்டை நிர்ணயிக்கலாம் என்று அந்த அமைப்புத் தெரிவித்திருக்கிறது.

மருத்துவத் துறை
 

மருத்துவத் துறை

மருத்துவத் துறையிலும் இந்திய அரசின் ஒப்புதலின் கீழ் தற்போது 100% நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக ஆட்டோமேட்டிக் ரூட்டின் கீழ் இந்த துறையில் 49% அன்னிய முதலீட்டை நிர்ணயிக்கலாம் என்று அந்த அமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது.

தொலைத் தொடர்புத் துறை

தொலைத் தொடர்புத் துறை

தொலைத் தொடர்புத் துறையில் எஃப்ஐபிபி ரூட்டின் கீழ் 100% நேரடி அன்னிய முதலீடு அனுமதி்க்கப்படுகிறது. ஆனால் அதற்குப் பதிலாக ஆட்டோமேட்டிக் ரூட்டின் கீழ் 49% நேரடி அன்னிய முதலீட்டை நிர்ணயிக்கலாம் என்று அந்த அமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது.

நடவடிக்கை

நடவடிக்கை

நிதியமைச்சரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, சமர்ப்பித்திருக்கும் நேரடி அன்னிய முதலீடு சம்பந்தமான அறிக்கை மீதான விவாதம் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முக்கிய துறைகளின் மத்தியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt panel proposes hike in FDI limits in defence, retail & telecom

A government panel, which was set up by Finance Minister P Chidambaram to review the sectoral caps, proposed raising FDI limits in sectors like defence, multi-brand retail and telecommunications, to spur investment in the country and tide over the Current Account Deficit woes.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X