நாங்களும் வங்கி தொடங்குவோம் - எல்ஐசி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாங்களும் வங்கி தொடங்குவோம் - எல்ஐசி!!
இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி யின், வீட்டுக் கடன் பிரிவு எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் வங்கித் துறைக்குள் நுழையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகளுக்கான புதிய உரிமம் வாங்குவது தொடர்பாக, எல்ஐசி நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருப்பதாக ஊடககத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிர்வாக இயக்குனரும், பொது மேலாளருமான வி.கே.ஷர்மா கூறுகையில்,

 

புதிய வங்கி உரிமத்திற்காக விண்ணப்பிக்க முடிவு செய்திருக்கிறோம். இதுமட்டுமல்லாமல், நேரடியாக வங்கி செயல்பாடுகளில் இறங்காமல், புதிதாக தொடங்கும் வங்களின் பங்குகளை வாங்குவது தொடர்பாகவும் விவாதித்து வருகிறோம் என்றார்.

 

கடந்த பிப்ரவரி மாதம், வங்கிகளுக்கான புதிய உரிமம் வழங்குவதற்கான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. வரும் மார்ச் 2014 ஆம் ஆண்டுக்குள் சில வங்கி உரிமங்களை வழங்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

வங்கி உரிமம் வழங்குவதற்கான சட்ட திட்டங்கள், எல்ஐசி நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்திருந்தால், வங்கி உரிமத்திற்கு விண்ணப்பம் செய்வது அவசியமான ஒன்று என எல்ஐசி யின் முன்னாள் தலைவர் டி.கே.மல்ஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராம் குழுமம், ரெலிகேர் நிறுவனம் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களும் வங்கி உரிமம் பெற விண்ணப்பம் செய்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC Housing Finance plans banking foray: Reports

The home loan arm of India's largest insurance firm, LIC Housing Finance has decided to foray into the banking space following approval from the board for applying for new banking licences, said a media report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X