இப்போ தங்கம் வாங்குவது கொஞ்சம் ரிஸ்க்தான்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்போ தங்கம் வாங்குவது கொஞ்சம் ரிஸ்க்தான்!
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை 7% குறைந்துள்ளது. அமெரிக்கவில், இதுவரை வழங்கிய ஊக்க சலுகைகளை நிறுத்தப்போவதாக அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது. இதனை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்திருக்கிறது. செப்டம்பர் 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு, ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தங்க விலை சரிவாக இது பார்க்கப்படுகிறது.

(Gold Rates in Major Cities of India)

 

இன்றைய தங்கத்தின் விலை!!

இந்தியாவில் தங்கத்தில் விலை சர்வதேச தங்கம் விலையைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், சர்வதே தங்கம் விலை எதனை நோக்கிச் செல்கிறது என்பதை தெரிந்துவைத்திருப்பது அவசியம்.

 

அமெரிக்காவில் சொத்துக்களை வாங்க சலுகைகள் வழங்கி ஊக்கப்படுத்திவந்தது அந்நாட்டு அரசு. தற்போது அந்த சலுகைகளை நிறுத்திக்கொள்ளப்போவதாகத் தெரிகிறது. இதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் பணப் புழக்கம் குறையும். அமெரிக்க அரசின் இந்த சலுகைகள் மூலமாக, கடந்த இரண்டு வருடங்களாக அதிக அளவிலான பணப்புழக்கம் இருந்தது. இதன் மூலமாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகளிலும், தங்கம் விலையிலும் உயர்வு ஏற்பட்டது.

ஆனால், அமெரிக்க அரசு, இந்தச் சலுகைகளை நிறுத்திவிட்டால், பணப்புழக்கம் குறையும். இதனால் பங்குச் சந்தை மற்றும் தங்கம் விலை நிலவரத்தில் பெரும் சரிவு ஏற்படும்.

உலகளவில், தங்கம் வாங்குவதில் இந்தியா ஒரு முக்கியமான நாடு. தங்க இறக்குமதியைக் குறைத்தால் மட்டுமே நடப்பு கணக்குப் பற்றாக்குறையை குறைக்க முடியும் என்பது இந்திய அரசின் எண்ணம். இதன் காரணமாகத் தான், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தங்கத்தை வாங்க வேண்டாம் என பல முறை கருத்து தெரிவித்திருக்கிறார். உலகில் மிக அதிக அளவில் தங்கம் வாங்கும் இந்தியாவில், இனி தங்கத்திற்கான தேவை குறையும் எனவும், இதனால் மேலும் தங்கம் விலை குறையும் என்றும் கருதப்படுகிறது.

தங்கம் இடிஎஃப்களின் விலையும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இது தங்கம் விலை மேலும் குறைய வழிவகுக்கும். மேலும், அமெரிக்க அரசின் சலுகைகள் குறைக்கப்படுவதின் தொடர்ச்சியாக, தங்கம் சார்ந்த வர்த்தக நிதியத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், தங்கத்தை லாபம் தரும் முதலீடாக கருதிய உலகின் முன்னணி முதலீட்டு நிறுவங்கள், தங்கத்தின் மீதான தம் நிலையை மாற்றிக்கொண்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவிற்கு தங்கம் விலை பெருமளவில் சரியக் கூடும். ஆகையால், இந்த சமயத்தில் தங்கத்தை வாங்குவது என்பது கொஞ்சம் ரிஸ்க்கு தான்.

இதெல்லாம் சரி தான், ஆனால் வீட்டில் ஒரு கல்யாணம், விசேஷம் என்றால் தங்கத்தை வாங்குவது என்பது காலா காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு விஷயம். இந்த வழக்கம் எப்படி மாறும், எப்போது மாறும் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why gold prices could fall further?

Spot gold hit a 3-year low and was down 7 per cent this week in the international market as the Fed hinted at withdrawal of stimulus measures in the US. The week also saw the sharpest fall in gold prices since Sept 2011.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X