3 நாட்களில் ஃபிராவிடன்ட் நிதி மீதான விண்ணப்பங்களுக்கு தீர்வு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வு நிதியை கையாளும் அமைப்பான இபிஎஃப்ஒ(EPFO), மூன்று நாட்களுக்குள் அனைத்து வகையான பரிமாற்றகளையும், அதாவது கணக்கு மாற்றுதல், பணத்தை திரும்பப் பெறுதல் உட்பட அனைத்தையும் மூன்று நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் இபிஎஃப்ஒ(EPFO) இத்தகைய நடவடிக்கைகள் சம்பந்தமாக சுமார் 1 கோடி விண்ணப்பங்களை கையாண்டு வருகிறது.

 

விண்ணப்பங்களின் மீதான துரிதமான தீர்வு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஊழியர் சேமிப்பு நிதி அமைப்பு (EPFO), ஒரு செயல் திட்டத்தை வரைய, ஜூலை 5 ம் தேதி அனைத்து மண்டல தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

 
3 நாட்களில் ஃபிராவிடன்ட் நிதி மீதான விண்ணப்பங்களுக்கு தீர்வு!!

இந்த அமைப்பு இந்த நிதியாண்டில் சுமார் 1.2 கோடி விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. அதில் சுமார் 70 சதவிகித விண்ணப்பங்களுக்கு மூன்று நாட்களில் தீர்வு கிடைத்தால் சுமார் 84 லட்சம் விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள் என நம்பப்படுகிறது.

விண்ணப்பங்களின் மீதான விரைவான தீர்வை பற்றி இபிஎஃப்ஒ(EPFO) அறிவித்துள்ள அறிக்கையில், " இந்த நடவடிக்கை நிறுவனத்தின் பிம்பத்தை மேம்படுத்த தேவையானது " என்று குறிப்பிடபட்டுள்ளது.

EPFO ஏற்கனவே இந்த ஆண்டு ஜூன் 15 முன்னர் பெற்ற அனைத்து விண்ணப்பங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு விரைந்து தீர்வு காணும் இயக்கத்தை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு ஜூன் 11 ம் தேதி நிலவரப்படி சுமார் 5,38,704 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

"2012-13 ஆம் ஆண்டில், இபிஎஃப்ஒ(EPFO) அமைப்பு சுமார் 1.08 கோடி விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களின் தேவையை தீர்த்து வைத்துள்ளது. ஆனால் அதில் 12.62 லட்சம் விண்ணப்பதாரர்கள் இபிஎஃப்ஒ(EPFO) சேவையில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஏனெனில் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க 30க்கும் அதிகமான நாட்கள் தேவைப்பட்டுள்ளது. மேலும் 1.41 லட்சம் விண்ணப்பங்களுக்கு 90 நாட்கள் கடந்தும் தீர்வு காணப்படவில்லை. அது எங்களுடைய உறுப்பினர்களிடையே இபிஎஃப்ஒ(EPFO) அமைப்பை பற்றிய தவறான எண்ணத்தை தோற்றிவித்துள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் "தங்கள் சொந்த பணத்தை திரும்ப பெற இந்த கணினி யுகத்தில் மூன்று நாட்கள் போதுமானது. முப்பது நாட்கள் என்பது மிகவும் அதிகம் என்கிற மனநிலைக்கு எதிர்காலத்தில் மக்கள் தள்ளப்படலாம்", எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு உரிமைகோருபவர்களுக்கு ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை அறிமுகப் படுத்த திட்டமிட்டிருக்கிறது. அவர்கள் கணக்கை மாற்றுதல் மற்றும் பணத்தை திரும்பப் பெறுதல் உட்பட எந்த விதமான நடவடிக்கைகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

மேலும் சந்தாதாரர்கள் அவர்களுடைய விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்த புதிய அமைப்பின் கீழ், முந்தைய நிறுவனங்களின் உள்ள வருங்கால வைப்பு நிதி கணக்கின் விவரங்களை சரிபார்க்கும் பொறுப்பு இபிஎஃப்ஒ(EPFO)​ஐ சார்ந்தது.

தற்போது, ஊழியர்கள் தமது விண்ணப்பங்களை முதலாளிகளிடம் சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும். இபிஎஃப்ஒ(EPFO)தற்பொழுது ஐந்து கோடி சந்தாதாரர்களின் சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் நிதியை நிர்வகித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO for provident fund settlement of claims in 3 days

Retirement fund body EPFO is planning to settle all claims like transfer and withdrawal of provident fund within three days, a move that will benefit over one crore such claimants every year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X