தங்க விற்பனையை நிறுத்திய முதல் நிறுவனம்: ரிலையன்ஸ் கேபிடல்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்க விற்பனையை நிறுத்திய முதல் நிறுவனம்: ரிலையன்ஸ் கேபிடல்!
நாட்டின் பொருளாதாரத்திற்கு இடைஞ்சலாக உள்ள தங்க இறக்குமதி பற்றிய கவலைகள் அதிகரித்து வரும் இந்த வேளையில், இந்தியாவில் நிதிசேவைகளை வழங்கும் வழங்கும் மிக முக்கியமான நிறுவனமான ரிலையன்ஸ் கேபிடல், வெள்ளிக்கிழமை முதல் தங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து வர்த்தகங்களையும் தற்காலிகமாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் தங்கம் சம்பந்தமான வர்த்தகத்தை நிறுத்திய முதல் நிதி நிறுவனம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த முடிவு, தங்க நாணயங்கள் மற்றும் தங்கம் சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான விற்பனைகளுக்கும் பொருந்தும். தங்கத்தின் மீதான அனைத்து விதமான முதலீட்டுப் பொருட்களும் இதன் கீழ் அடங்கும், என ரிலையன்ஸ் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியான ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் இந்த முடிவு அரசாங்கத்தின் பார்வையான "நாட்டின் தங்க இறக்குமதி, நாட்டின் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கிறது" என்பதை யொட்டி எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. தொழில்துறை பார்வையாளர்களின் விமர்சனத்தின் படி, மேலும் அதிக நிதி சேவை நிறுவனங்கள் ரிலையன்ஸ் கேபிடலின் வழி சென்று தங்கம் சம்பந்தமான நிதி சேவைகளை நிறுத்தி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் தங்க இறக்குமதி சுமை நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்திய அரசு, இந்திய குடும்பங்களின் சேமிப்பை, தங்கம் போன்ற முதலீடுகளில் இருந்து பங்குச் சந்தை போன்ற நிதி சந்தையின் சொத்துக்களை நோக்கி திருப்ப தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தங்க விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதைத் தவிர்த்து, ரிலையன்ஸ் கேபிடலின் வணிக நிதி பிரிவு, தங்கப் பொருட்களின் மீதான நிதியுதவியை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது.

மேலும், ரிலையன்ஸ் கேபிடல் சொத்து மேலாண்மை நிறுவனம் (RCAM) ரிலையன்ஸ் தங்க சேமிப்பு நிதிக்கு புதிய சந்தாதாரர்களை சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த நிதியில் உள்ள SIP முதலீட்டாளர்களை இந்த முடிவு பாதிக்காது.

இந்த நிதி சுமார் ரூ 2,200 கோடிக்கும் அதிகமான நிதியை நிர்வாகத்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த , ரிலையன்ஸ் கேபிடல் தலமை நிர்வாக அதிகாரி திரு சாம் கோஷ், "ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் அனைத்து கொள்கை முடிவுகளை ஆதரிக்க உறுதி பூண்டுள்ளது" என்று கூறினார்.

"நாங்கள் உண்மையில் வணிக, வர்த்தக மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் பொருப்பான முறையில் நடந்து கொண்டு நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை(CAD) குறைக்க உதவி புரிவார்கள் என நம்புகிறோம். அதிகரித்து வரும் தங்க இறக்குமதி நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமையாக மாறி நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கிறது", என தெரிவித்தார்.

இந்த தற்காலிக நிறுத்தம் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தால் இந்தியா போஸ்ட் மூலம் சந்தையில் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கும் பொருந்தும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா 2012ம் ஆண்டில் சுமார் 860 டன் தங்கத்தை இறக்குமதி செய்யதுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் இது சுமார் 900 டன்னை தாண்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Capital becomes first company to suspend gold sales

Amid growing concerns over huge gold imports hurting the country's economic strength, financial services major Reliance Capital on Friday became the first company to suspend gold sales across all its businesses.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X