எஸ்பிஐயில் 10,000 பேருக்கு வேலை ரெடி!!! : எஸ்பிஐ சேர்மன் அறிவிப்பு

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஸ்பிஐயில் 10,000 பேருக்கு வேலை ரெடி!!! : எஸ்பிஐ சேர்மன் அறிவிப்பு
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டில் சுமார் 7500 ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதால், சுமார் 10,000 அதிகாரிகள் மற்றும் இதர ஊழியர்களை பணியிலமர்த்த திட்டமிட்டுள்ளது.

மீடியாக்களிடம் பேசிய எஸ்பிஐ சேர்மன் திரு. பிரதீப் சௌதரி அவர்கள், "இவ்வருடத்தில் சுமார் 1,500 ப்ரொபேஷனரி அதிகாரிகள் உட்பட சுமார் 10,000 பேரை நாங்கள் பணியில் அமர்த்தப் போகிறோம். இதற்கான நடவடிக்கை ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பித்து விட்டது. நடப்பு நிதியாண்டில் சுமார் 7,500 பேர் பணி ஓய்வு பெறுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில், நாட்டின் பல்வேறு இடங்களில் சுமார் 1200 கிளைகளையும், சீனா மற்றும் யு.கே. உள்ளிட்ட வெளிநாடுகளில் சுமார் எட்டு கிளைகளையும் திறப்பதற்கு வங்கி தீர்மானித்துள்ளது.

 

மேலும், வங்கி தன் அனைத்து கிளைகளையும் புதுப்பித்திருப்பதாகவும், இவை அனைத்திலும் குளிர் சாதன வசதி பொருத்தப்பட்டுள்ளதாகவும் பிரதீப் சௌதரி கூறியுள்ளார். கடந்த காலாண்டில், வங்கி சுமார் 20,000 உதவி நிலை ஊழியர்களை அலுவலகத்தில் பணியமர்த்தியுள்ளது.

 

மேலும், கடந்த நிதியாண்டில் சுமார் 20,000 க்ளெரிக்கல் ஊழியர்களையும், 1,200 அதிகாரிகளையும் வேலைக்கு எடுத்துள்ளது. இது போக, 2012-2013 நிதியாண்டில் மற்ற பப்ளிக் செக்டார் வங்கிளும் சுமார் 22,000 அதிகாரிகளையும், 20,000 க்ளெரிக்கல் ஊழியர்களையும் பணியிலமர்த்தியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sbi banking jobs வங்கி
English summary

SBI to appoint 10,000 employees in FY14

India's largest lender, State bank of India has planned to appoint 10,000 officers and employees in the current fiscal as around 7500 employees will retire this fiscal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X