இனிமேல் ஆன்லைன் மூலமாகவே ஓய்வூதிய நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிமேல் ஆன்லைன் மூலமாகவே ஓய்வூதிய நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்!!
ஓய்வூதிய பணத்தை நிர்வாகம் செய்யும் அமைப்பான இபிஎஃப்ஒ, ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்திருக்கும் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய செய்தியை அறிவிக்க இருக்கிறது. அதாவது ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இனிமேல் ஆன்லைன் மூலம் பணத்தைப் பெற அல்லது பணத்தைப் பரிமாற்றம் செய்யக்கூடிய வசதியை வழங்க இருக்கிறது. இந்த வசதி ஜூலை முதல் வாரத்தில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் 50 மில்லியன் ஓய்வூதிய வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் என்று இபிஎஃஒ நம்புகிறது.

(How to check Employees' Provident Fund (EPF) balance online?)

இது சம்பந்தமாக இபிஎஃப்ஒவின் சென்ட்ரல் ப்ராவிடன்ட் ஃபண்ட் கமிசனர் கே கே ஜலான் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த செய்தியில் " ஓய்வூதிய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யவும் மற்றும் பணத்தை எடுக்கவும் வரும் ஜூலை 3 அல்லது 4 முதல் புதிய ஆன்லைன் வசதியைக் களிமிறக்கத் திட்டமிட்டிருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

 

ஆனால் இதற்கு முன்பு இந்த வசதியை ஜூலை 1 முதலே அமல்படுத்த இபிஎஃப்ஒ திட்டமிட்டிருந்தது.

 

புதிய தொழிலாளர் அமைச்சர் சிஸ் ராம் ஓலாவை சந்தித்த பின்பு ஜலான் இந்த புதிய திட்டத்தைப் பற்றி அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிதியாண்டில் மட்டும் 1.2 கோடி அளவிற்கு ஓய்வூதிய விண்ணப்பங்கள் வரும் என்று இபிஎஃப்ஒ எதிர்பார்க்கிறது. ஜூன் 11 வரை 5,38,704 ஓய்வூதிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக இபிஎஃப்ஒ தெரிவித்திருக்கிறது. எனினும் தனது பகுதிவாரியான தலைவர்களை வரும் ஜூலை 5ஆம் தேதி சந்தித்து, 3 நாட்களுக்குள் ஓய்வூதிய விண்ணப்பங்களை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ள இருக்கிறது.

இபிஎஃஒ ஒரு புதிய மையத்தை கட்டி வருகிறது. ஆன்லைன் மூலம் வரும் விண்ணப்பங்கள் ஆகியவற்றை இந்த மையத்திலிருந்து இபிஎஃஒ கவனிக்கும் என்று தெரிகிறது.

ஓய்வூதிய சந்தாதாரங்களின் மிக முக்கிய பிரச்சினை என்னவென்றால் அவர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களிலிருந்து புதிய நிறுவனங்களுக்கு மாறும் போது, தங்களின் ஓய்வூதிய வங்கிக் கணக்கை மாற்றுவதில் அதிகச் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த பிரச்சினையை சென்ட்ரல் கிளியரன்ஸ் ஃபெசிலிட்டி தீர்த்து வைக்கும் என்று ஒரு யூனியன் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த ஆன்லைன் மூலம் சந்தாதாரர்கள், தங்களது விண்ணப்பங்கள், பண எடுப்பு பற்றிய விவரங்கள் மற்றும் பணம் பரிமாற்ற விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த புதிய அமைப்பில், சந்தாதாரரின் ஓய்வூதிய கணக்கைப் பற்றிய பின்னனி அறிக்கை அவர்களின் முந்தைய நிறுவனங்களிடமிருந்து இபிஎஃப்ஒவினால் பெறப்படும்.

தற்போது ஓய்வூதிய சந்தாதாரர்கள் பணத்தைப் பெறவதற்கு தற்போது வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து தங்களது விண்ணப்பத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும்.

எனினும், ஓய்வூதிய சந்தாதாரர்கள் தங்களின் வேலை செய்யும் நிறுவனங்களை மாற்றும் போது தங்களது ஓய்வூதிய வங்கிக் கணக்கை மாற்றுவதில் எந்தவித பிரச்சினைகளையும் சந்திக்காமல் இருக்க அவர்களுக்கு நிரந்தர கணக்கு எண்ணை வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டம் அடத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO to launch online PF claim settlement facility in July

Retirement fund body EPFO will launch online PF fund transfer and withdrawal facility in the first week of July, benefiting over 50 million subscribers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X