100% அன்னிய முதலீட்டுக்கு தொலைத்தொடர்பு கமிஷன் ஒப்புதல்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொலைத்தொடர்பு துறையில், ஃபாரீன் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட் (எஃப்டிஐ) வரம்பை சுமார் 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்துவதற்கு, கேபினட் ஒப்புதல் அளித்தது.

இந்த மேம்பாட்டுத் திட்டமானது, கேபினட்டின் ஒப்புதலைப் பெற்றிருப்பின், அயல்நாட்டு நிறுவனங்கள் தங்களின் இந்திய கிளை நிறுவனங்களில் 100 சதவீத பங்குகளை வாங்குவதற்கும், முன்பிருந்த இந்திய பங்குதாரர் விலகியிருப்பின் புதிய பங்குதாரருக்கான தேவையின்றி தொடர்ந்து செயல்படுவதற்கும், இத்திட்டம் வழி வகுக்கும்.

தொலைத்தொடர்பு துறையின் நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் வழிகளின் மூலம் சுமார் 49 சதவீத எஃப்டிஐயை அனுபவித்து வருகின்றன. எனினும், 49 சதவீதத்துக்கும் அதிகமான எஃப்டிஐ வேண்டுமெனில், அதற்கு நிறுவனங்கள் ஃபாரீன் இன்வெஸ்ட்மென்ட் ப்ரொமோஷன் போர்டின் (எஃப்ஐபிபி) அனுமதியைப் பெற வேண்டியிருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

1,85,720 கோடி கடன் தொகை

1,85,720 கோடி கடன் தொகை

அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் போட்டி நிறைந்த சூழல் ஆகியவற்றுக்கு மத்தியில் உழன்று, மிகக் குறைந்த லாபங்களையே அளிக்கும் தொலைத்தொடர்பு துறையின் நலிவே இந்நடவடிக்கை அமலுக்கு வரக் காரணமாகும். 2011-2012 இறுதியில இத்துறையின் கடன் தொகை சுமார் 1,85,720 கோடி ரூபாயைத் தொட்டிருக்கலாம் என்று சிஓஏஐ (COAI) எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

டிஎஃப்சி (TFC)

டிஎஃப்சி (TFC)

இந்நிலையில், டெலிகாம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (டிஎஃப்சி) என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தொலைத்தொடர்பு துறையின் நிதி தொடர்பான சவால்களை எதிர் கொள்ளலாம் என்ற யோசனையையும் பரிசீலித்து வரும் தொலைத்தொடர்பு கமிஷன், அது பற்றிய விரிவான தகவல் அறிக்கையைக் கோரியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telecom Commission approves 100% FDI in telecom sector

The Telecom Commission on Tuesday gave its nod to raise Foreign Direct Investment (FDI) limit in telecom sector from 74 per cent to 100 per cent, subject to approval from the Cabinet, said a media report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X