டாட்டா ஸ்டீல் நிறுவனத்தை முந்திய டிசிஎஸ் நிறுவனம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாட்டா ஸ்டீல் நிறுவனத்தை முந்திய டிசிஎஸ் நிறுவனம்
மென்பெருள் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனம் தனது டாட்டா குழுமத்தைச் சேர்ந்த டாட்டா ஸ்டீல் நிறுவனத்தை வீழ்த்தி தற்போது இந்தியாவிலேயே பலரும் விரும்பும் நிறுவனமாக பெயர் எடுத்திருக்கிறது. இந்த தகவலை ஃபார்ச்சூன் லிஸ்ட் என்ற பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் பலரும் வியக்கத்தக்க நிறுவனமாக டிசிஎஸ் முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2வது இடத்திலும், ஐடிசி மற்றும் இன்ஃபோசிஸ் மூன்றாவது இடத்திலும் எஸ்பிஐ 5வது இடத்திலும் இருக்கின்றன.

கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த டாட்டா ஸ்டீல் நிறுவனம் இந்த ஆண்டு 7 இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஐடிசி மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்தியாவின் வியக்கத்தக்க 50 நிறுவனங்களின் பட்டியலில் டாட்டா குழுமத்தைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதோடு 10 பொதுத் துறை நிறுவனங்களும் இந்த பட்டியிலில் இடம் பெற்றுள்ளன என்று இந்திய ஃபார்ச்சூன் பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.

இந்த பட்டியலில் இந்திய நிறுவனங்களோடு சேர்ந்து பன்னாட்டு நிறுவனங்களான கோகோ கோலா, மைக்ரோசாஃப்ட், சாம்சங், நோக்கியா, டெல் மற்றும் இன்டல் போன்ற நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன.

கார்ப்பரேட் ஆட்சி நிர்வாகம், புதுமை, சிஎஸ்ஆர் மற்றும் தலைமைத்துவம் போன்ற காரியங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றின் அடிப்படையில் இந்தியாவின் வியக்கத்தக்க முதல் 50 நிறுவனங்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த பட்டியலில் எல்&டி 6வது இடத்தையும், மாருதி சுசுகி 9வது இடத்தையும், ஐசிஐசிஐ வங்கி 10வது இடத்தையும் பிடித்து முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கின்றன.

டிசிஎஸ் மற்றும் டாட்டா ஸ்டீல் நிறுவனங்களைத் தவிர்த்து, டாட்டா குழுமத்தைச் சேர்ந்த டாட்டா மோட்டார்ஸ் 12வது இடத்தையும் மற்றும் டாட்டா பவர் 50வது இடத்தையும் பெற்றுள்ளன.

மாநிலங்கள் நடத்தும் நிறுவங்களான எஸ்பிஐ 5வது இடத்தையும், ஒஎன்ஜிசி 8வது இடத்தையும் பிடித்து முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன.

மாநிலங்கள் நடத்தும் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப் 11வது இடத்தையும், எஸ்எஐஎல் 22வது இடத்தையும், பாரத் பெட்ரோலியம் 25வது இடத்தையும் என்டிபிசி 28வது இடத்தையும், எச்பிசிஎல் 31வது இடத்தையும், ஜிஎஐஎல் 34வது இடத்தையும், ஒஎன்ஜிசி விதேஷ் 47வது இடத்தையும் கோல் இந்தியா 48வது இடத்தையும் பிடித்துள்ளன.

மைக்ரோசாஃப்ட் இந்தியா 15வது இடத்தையும், கோல்கெட் பால்மோலிவ் 16வது இடத்தையும், ஐபிஎம் இந்தியா 17வது இடத்தையும், சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் 18வது இடத்தையும், பாரதி ஏர்டெல் 19வது இடத்தையும், காட்பெரி 23வது இடத்தையும், டெல் இந்தியா 32வது இடத்தையும், சீமென்ஸ் 36வது இடத்தையும், இன்டெல் இந்தியா 38வது இடத்தையும், நோக்கியா இந்தியா 42வது இடத்தையும் மற்றும் சோனி இந்தியா 44வது இடத்தையும் பிடித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS replaces Tata Steel as India's most admired company

Software giant TCS has replaced its group firm Tata Steel as the country's most admired company, as per a Fortune list released on Tuesday.
Story first published: Thursday, July 11, 2013, 16:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X