தொலைதொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 89.7 கோடியாக குறைந்தது: ஏப்ரல் மாதம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் தொலை தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை, ஏப்ரல் மாத இறுதியில் சுமார் 10 லட்சம் குறைந்து 89.7 கோடியாக உள்ளதாக இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமையன்று தெரிவித்துள்ளது.

"இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஏப்ரல் 2013 இறுதியில் 897.02 மில்லியனாக குறைந்துவிட்டது. இந்த எண்ணிக்கை மார்ச் 2013 இறுதியில் 898.02 மில்லியனாக இருந்தது. இதன் மூலம் இந்தியாவில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் மாத வளர்ச்சி விகிதம் 0.11 சதவீதமாக அதிகரித்துள்ளது,"என டிராயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில், தொலை தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 60 லட்சம் அதிகரித்துள்ளது.

தொலைதொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 89.7 கோடியாக குறைந்தது: ஏப்ரல் மாதம்

கிராமப்புற சந்தாதாரர்களின் வளர்ச்சி விகிதம் ஏப்ரல் மாதத்தில் 39.29 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய மாதத்தில் இது 38.89 சதவீதமாக இருந்தது. அதே சமயத்தில் நகர்ப்புற சந்தாதாரர்களின் பங்கு ஏப்ரல் மாதத்தில் 60.71 சதவீதமாக சரிந்துள்ளது. அதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் இது 61.11 சதவீதமாக இருந்தது.

ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு அடர்த்தி ஏப்ரல் மாதத்தின் இறுதியில் 73.32 சதவீதத்தில் இருந்து 73.16 ஆக குறைந்தது.

இந்திய அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனம் 22.36 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஸிஸ்டிமா ஷியாம் (எம்டிஎஸ் இந்தியா) 18.96 லட்சம் சந்தாதாரர்களையும், டாட்டா டெலிசர்வீசஸ் 7.84 லட்சம் வாடிக்கையாளர்களையும், எம்டிஎன்எல் 1 லட்சம் வாடிக்கையாளர்களையும், லூப் மொபைல் 83,263 வாடிக்கையாளர்களையும் மற்றும் எச்எஃப்சிஎல் 15,616 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில் செயலில் உள்ள ஒட்டு மொத்த மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 72.45 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை என்பது பிஎஸ்என்எல்லின் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களை தவிர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. ஏனெனில் பிஎஸ்என்எல்லின் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களை பற்றிய தரவுகள் ட்ராய் வசம் இல்லை.

வோடபோன் நிறுவனத்தில் புதிதாக 14.22 லட்சம் வாடிக்கையாளர்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் 12.84 லட்சம் புதிய வாடிக்கையாளர்களும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸில் 7.25 லட்சம் புதிய வாடிக்கையாளர்களும் , பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களும், யூனிநார் நிறுவனத்தில் 1.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களும், வீடியோகான் நிறுவனத்தில் 1.3 லட்சம் புதிய வாடிக்கையாளர்களும், ஏர்செல் நிறுவனத்தில் 8,249 புதிய வாடிக்கையாளர்களும் இணைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

20 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் சந்தாதாரர்கள் தங்களுடைய சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக ட்ராய் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் 18.87 கோடி வாடிக்கையாளர்கள் அல்லது ஒட்டு மொத்த தொலைத்தொடர்பு சந்தை மதிப்பில் சுமார் 21.78 சதவீத பங்கை பிடித்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்த படியாக வோடபோன் நிறுவனம் 15.37 கோடி வாடிக்கையாளர்கள் அல்லது 17.74 சதவீத சந்தை பங்குடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மூன்றாம் இடத்தில் ஆர்காம் (RCom) நிறுவனம் 12,36 கோடி வாடிக்கையாளர்கள் அல்லது 14,27 சதவீத சந்தை பங்குடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

மார்ச் இறுதியில் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 15.05 மில்லியனில் இருந்து 15.09 மில்லியனாக அதிகரித்துள்ளது. பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 8.21 சதவீதமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telecom subscriber base declined marginally to 89.7 crore in April

The telecom subscriber base in the country declined by 10 lakh to 89.7 crore users at the end of April from a month earlier, the Telecom Regulatory Authority of India said on Wednesday.
Story first published: Thursday, July 11, 2013, 16:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X