பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் கலக்கும் 5 இந்தியர்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2013-ஆம் ஆண்டில் இந்தியா, உலக நாடுகளுக்கு மத்தியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பன்நாட்டு நிறுவனங்களுக்கு வேகமாக வளரும் சந்தையை உருவாக்கி கொடுத்து பலரும் வியக்கும் வண்ணம் திகழ்ந்து வருகிறார்கள். இந்த தருணத்தில் பல இந்தியர்கள், பல பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் உயர்மட்ட செயற்குழுவில் பங்கு பெறுகிறார்கள்.

இந்தியாவின் மேல் அதிக நம்பிக்கை வைத்துள்ள சில பன்னாட்டு நிறுவனங்கள், இங்குள்ள அதிகாரிகள் வெளிநாட்டில் தலைமை வகிக்கும் தகுதியை பெறுவதற்கு சில பயிற்சியங்களை தொடங்கியுள்ளது. ஜப்பான் நாட்டின் எலெக்ட்ரானிக் நிறுவனமான பானசோனிக் இந்தியாவிலுள்ள அலுவலகத்தில் இருந்து 10 பேரை தேர்வு செய்து வெளிநாட்டு தலைமை பொறுப்பை அளிக்க உள்ளது.

அமெரிக்காவின் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட புதிய குடியேற்ற சட்டத்தால் அமெரிக்க மென்பொருள் துறையில் இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் பங்கு எப்படி இருக்கும் என்ற பல கேள்விகள் எழுந்தன. ஆனால் நிறுவனத்தை வழி நடத்தும் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் இந்தியர்களும் அமெரிக்கர்களும் இனைந்து செயல்படுகிறார்கள் என்பது தனி கதை.

பன்னாட்டு நிறுவனங்களில் மிக பெரிய பொறுப்பில் வகிக்கும் இந்தியர்களை இப்பொழுது பார்ப்போம்..

அபிஜித் தல்வால்கர், தலைவர் & தலைமை நிர்வாக அலுவலர், எல்.எஸ்.ஐ (LSI):

அபிஜித் தல்வால்கர், தலைவர் & தலைமை நிர்வாக அலுவலர், எல்.எஸ்.ஐ (LSI):

அபிஜித் Y.தல்வால்கர், மே 23, 2005 முதல் எல்.எஸ்.ஐ. கார்பரேஷனின் தலைமை நிர்வாக அலுவலராக பொறுப்பில் இருக்கிறார். எல்.எஸ்.ஐ.-யில் பொறுப்பு வகிக்கும் முன்பு இண்டெல் கார்பரேஷனில் கார்பரேட் துணைத் தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்தார். தல்வால்கர் எல்.எஸ்.ஐ-யில் சேர்ந்தது முதல் அதன் லாப வரம்பு அதிகரிகப்புக்கு மிக பெரிய பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிறுவனம் தகவல் மையம் பாதுகாப்பு மற்றும் வலையமைப்பு, கைபேசி வலையமைப்பு மற்றும் சேவைப்பயனர் கணிப்புகளுக்கு மென்பொருள்களும் செமி-கண்டக்டர்கள் வடிவமைப்பதிலும் ஈடுபட்டிருக்கிறது.

 

 

சத்யா நாடெல்லா, தலைவர் (செர்வர் மற்றும் டூல்ஸ் வணிகம்), மைக்ரோசாப்ட்

சத்யா நாடெல்லா, தலைவர் (செர்வர் மற்றும் டூல்ஸ் வணிகம்), மைக்ரோசாப்ட்

ஹைதராபாத்தை சேர்ந்த சத்யா நாடெல்லா என்பவர் மில்வாக்கீயில் உள்ள விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் கணினி அறிவியலில் முது நிலை பட்டத்தையும், சிகாகோ பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ. பட்டத்தை பெற்றுள்ளார். 1992 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் கார்பரேஷனில் சேர்ந்து தற்போது 19 பில்லியன் டாலர் மதிப்புள்ள துறைக்கு தலைவராக பதவி வகிக்கிறார். இந்த ஒரு துறையின் மதிப்பு பல பன்னாட்டு நிறுவனத்தின் மொத்த மதிப்பை விடவும் பெரிதானது.

சிரந்தன் தேசாய், எக்சிக்யூடிவ் துணைத் தலைவர், சிமேன்டேக் (symantec)

சிரந்தன் தேசாய், எக்சிக்யூடிவ் துணைத் தலைவர், சிமேன்டேக் (symantec)

சிரந்தன் தேசாய் என்பவர் சிமேன்டேக் காப்ரேஷனில் தகவல் நிர்வாக துறைக்கு எக்சிக்யூடிவ் துணைத் தலைவராக பதவி வகிக்கிறார். இவர் கணினி அறிவியலில் முதுநிலை பட்டமும் வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டமும் அர்பானா-சம்பைன்னில் உள்ள இல்லினோயிஸ் பல்கலைகழகத்தில் பெற்றுள்ளார்.

தாமஸ் குரியன், எக்சிக்யூடிவ் துணைத் தலைவர், ஆரகில் (Oracle)

தாமஸ் குரியன், எக்சிக்யூடிவ் துணைத் தலைவர், ஆரகில் (Oracle)

1996-ல் ஆரகில்லில் சேர்ந்த குரியன், முதலில் பல ப்ராடக்ட் நிர்வாகத்திலும் டெவெலப்மண்ட் பதவிகளையும் வகித்தார். இவர் தலைமை நிர்வாக அலுவலர் லேரி எல்லிசனிடம் நேரடியாக தொடர்பில் உள்ளதால் இவரின் முக்கியத்துவம் என்ன என்பதை அனைவரும் அறிவார்கள். தாமஸ் குரியன் கேரளாவை சேர்ந்தவராவார். இவரும் இவரின் இரட்டை சகோதரருமான ஜார்ஜ் என்பவரும் அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன்னில் படிக்க 1986-ஆம் வந்தனர். குரியன் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் மின் பொறியியல் பட்டத்தை பெற்றவர். அங்கேயே தான் சும்மா கம் லாட் என்ற அதி உயரிய பட்டங்களையும் பெற்றார். பின் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் கிராச்சுவேட் ஸ்கூல் ஆப் பிசினசில் எம்.பி.ஏ. பட்டத்தையும் பெற்றார்.

 

 

கெல்லி அஹுஜா, சீனியர் துணைத் தலைவர் மற்றும் ஜெனரல் மேனேஜர், சிஸ்கோ (cisco)

கெல்லி அஹுஜா, சீனியர் துணைத் தலைவர் மற்றும் ஜெனரல் மேனேஜர், சிஸ்கோ (cisco)

கெல்லி அஹுஜா என்ற திறமையான பொறியாளர், தகவல் மற்றும் மென்பொருள் நிறுவனங்களில் வணிக தலைவராக பல சாதனைகளை புரிந்துள்ளார். சிஸ்கோவில் உள்ள மொபிலிட்டி பிசினஸ் குரூப்பிற்கு சீனியர் துணைத் தலைவர் மற்றும் ஜெனரல் மேனேஜராக பதவி வகிக்கிறார்.

பத்மஸ்ரீ வாரியர் மற்றும் CTO பங்கஜ் படேலுக்கு பிறகு மூன்றாவது இந்தியராக இந்தப் பதவியில் பொறுப்பேற்றுள்ளார் கெல்லி.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Indians Who Hold Top Positions in Giant MNCs

2013 is a year when India is coming under the limelight and on the way of owning the tag of being the fastest growing market for international companies. In such scenario many Indians are also making their presence into the boardrooms of few of the big hot shot multi national companies.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X