அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட ஒரு அரிய வாய்ப்பு- ப.சிதம்பரம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட ஒரு அரிய வாய்ப்பு- ப.சிதம்பரம்
ஒரு வளமான சமூகத்தை உருவாக்க, அமெரிக்காவும் இந்தியாவும் வணிகத் துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்காவுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் விடுத்திருக்கிறார்.

அமெரிக்காவில் நேற்று யுஎஸ் இந்தியா பிசினஸ் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) நடத்திய 38வது ஆண்டிறுதி தலைமைத்துவ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, இந்த வேண்டுகோளை அவர் விடுத்திருக்கிறார். மேலும் பெரும்பான்மையான ஏழை மக்களை கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை, வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல இந்திய அரசு பல சவால்களை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 

மேலும் அவர் கூறும் போது, இந்திய பொருளாதாரத்தில் இந்திய அரசு கொண்டு வந்த பல சீர்திருத்தங்களின் பயனாக பல இந்திய நிறுவனங்கள் தங்களது அமைப்பு அளவிலும், வர்த்தகத்தக அளவிலும் சிறந்த வளர்ச்சி அடைந்து அமெரிக்க நிறுவனங்களோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. அதன் விளைவாக அமெரிக்காவிற்கும் மற்றும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக போட்டி ஏற்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

இந்த வர்த்தக போட்டி, சுதந்திரமான சந்தைக்கும் மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்திற்கும் ஒரு அடித்தளமாக இருக்கும். ஆனால், இந்த வர்த்தக போட்டியை, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகளுக்குள் கொண்டு வந்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே இந்த இரண்டு நாடுகளும் இணைந்து செய்படுவதற்கு இதுவே சிறந்த தருணம் என்று தனது உரையின் முடிவில் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

"இந்திய பொருளாதாரத்தை மெதுவாக படிப்படியாக நாங்கள் கட்டி வருகிறோம். எங்களுடைய இந்த பணியில் உங்களுடைய உதவி தேவை" என்று கூட்டத்திற்கு வந்திருந்த இந்திய மற்றும் அமெரிக்க சட்ட வல்லுனர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோரிடம் சிதம்பரம் தெரிவித்தார்.

"எங்களிடம் மிகப் பெரிய அளவிலான இளைஞர் பட்டாளம் உள்ளது. அந்த பட்டாளம் உயர்ந்த லட்சியத்தை அடைவதற்கான பசியுடன் காத்திருக்கிறது. அந்த பட்டாளம் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே இரண்டு நாடுகளும் இணைந்து வேலை செய்ய வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவ்வாறு இரு நாடுகளும் இணைந்து வேலை செய்தால், மிகப் பெரிய பலன் கிடைக்கும். மேலும் இன்று மற்றும் நாளை நடக்கும் கூட்டங்கள், எதிர் காலத்தில் ஒரு வளமான சமூகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும்" என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அரசு பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் இந்திய நிதயமைச்சர் ப சிதம்பரம் கடந்த 3 நாள்களாக அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறார். கடந்த 3 நாள்களாக அவர் அமெரிக்க பிரதிநிதகளையும், அமெரிக்க சட்ட வல்லுனர்களையும் மற்றும் அமெரிக்க அரசு அதிகாரிகளையும் சந்தித்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Great opportunity for India, US to work together: Chidambaram

Making a passionate plea to the US and Indian businesses to work together for a prosperous society, Finance Minister P Chidambaram asked businesses of both the countries not to bring their business on the political table.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X