விசா: அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் இன்ஃபோசிஸ்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க செனட் தனது நாட்டுக்கு வேலை செய்ய வரும் வெளிநாட்டு மக்களுக்கு விசா வழங்குவதில் புதிய பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது. அதனால் அமெரிக்காவிற்கு வேலைக்காகச் செல்ல விசா வேண்டி விண்ணப்பம் செய்யும் வெளிநாட்டு மக்கள் குறிப்பாக இந்திய மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்திருக்கின்றனர்.

இதை மனதில் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனம், வெளிநாட்டு மக்களுக்கு விசா வழங்குவதில் அமெரிக்க செனட் பரிந்துரைத்திருக்கும் விதிமுறைகள் சட்ட வடிவம் பெறுவதற்குள், அந்த சட்டத்தினால் அமெரிக்க நிறுவனங்களுக்கும் தனக்கும் உள்ள வர்த்தக உறவு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக தனது அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

விசா: அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் இன்ஃபோசிஸ்!!

இந்திய கனிணி மென்பொருள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பெரும்பகுதியான வருமானம், அமெரிக்கா மற்றும் வடஅமெரிக்க நாடுகளுக்கு மென்பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலமே கிடைக்கிறது.

அமெரிக்க செனட் பிரதிநிதிகள் முன்பாக, அமெரிக்க செனட் பரிந்துரை செய்திருக்கும் புதிய விதிமுறைகள் பல மாற்றங்களை முன் வைத்திருக்கின்றன. குறிப்பாக எச்1பி விசா வைத்திருப்பவர்களின் சம்பள உயர்வு மற்றும் விசா பெறுவதற்கான அதிக கட்டணம் ஆகியவற்றில் புதிய மாற்றங்களை செனட் பரிந்துரை செய்திருக்கிறது.

இந்த பரிந்துரைகளுக்கு அவை பிரதிநிதிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டால், அவை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் கையெழுத்திற்காக அனுப்பி வைக்கப்படும். அவர் கையெழுத்து இட்டவுடன் அந்த விதிமுறைகள் சட்டமாக அமுல்படுத்தப்படும்.

செனட் பரிந்துரை செய்திருக்கும் விதிமுறைகள் சட்டங்களாக அமுல்படுத்தப்பட்டால், இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்களுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இழப்பு ஏற்படும். குறிப்பாக இந்தியாவில் இருக்கும் மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ்பிஎஸ்இக்கு 2.58 சதவீத அதிக செலவு ஏற்படும். அதுபோல் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கும் நிர்வாகச் செலவு அதிகரிக்கும்.

இது சம்பந்தமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்டி சிபுலால் கூறும் போது, "வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவது சம்பந்தமாக, அமெரிக்க செனட் பரிந்துரை செய்திருக்கும் புதிய விதிமுறைகள் கண்டிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களைப் பாதிக்கும். எனினும் இது இறுதி முடிவல்ல. நாங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

செனட் பரிந்துரை செய்திருக்கும் புதிய விதிமுறைகள், "எச்1பி விசா வேண்டி வந்திருக்கும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 5000 அமெரிக்க டாலர்களை கட்டணமாக வசூலிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியிருக்கிறது.

பெரும்பாலான இந்திய ஐடி நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை அமெரிக்காவில் இருக்கும் தங்களின் வாடிக்கையாளர்களான நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்பி பணியாற்ற வைக்கின்றன. இந்த சூழலில், விசா கட்டணம் அதிகரித்தால், அது இந்திய ஐடி நிறுவனங்களின் நிர்வாகச் செலவை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

இது சம்பந்தமாக, எங்களுடைய அமெரிக்க வாடிக்கையாளர்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இது நிறுவனம் சார்ந்த பிரச்சனை என்பதை எங்களின் வாடிக்கையாளர்கள் நன்கு புரிந்துள்ளனர். ஒருவேளை செனட் வழங்கியிருக்கும் பரிந்துரைகள் சட்டங்களாக இயற்றப்பட்டால், அதற்குப் பிறகு தேவையான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அவர்களோடு பேசி வருகிறோம் என்று சிபுலால் தெரிவித்திருக்கிறார்.

செனட் அளித்திருக்கும் பரிந்துரைகள், இந்திய பணியாளர்களை அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுப்புவதில் கண்டிப்பாக சிக்கல்களை ஏற்படுத்தும். ஆனால் அந்த பரிந்துரைகளின் இறுதி வடிவம் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் சிஎஃப்ஒ ராஜீவ் பன்சால் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த பரிந்துரைகள், அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் வேலைகளில் (ஆஃப்ஷோர்) உள்ள வாடிக்கையாளர்களின் செலவை மட்டும் குறைக்காது மாறாக லாபத்தையும் அவை குறைத்துவிடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவிற்கு சென்று பணியாளர்களை அனுப்பி (ஆன்சைட்) வேலை செய்ய வைக்கும் போது, அது லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக இந்தியாவில், அந்த வேலைகளை செய்தால், நல்ல லாபத்தைத் தரும். இதைத்தான் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று மேலும் அவர் தெரிவித்திருக்கிறார்.

விசா சம்பந்தமான புதிய விதிமுறைகள் இன்னும் அமுல்படுத்தப்படவி்ல்லை என்றாலும், அமெரிக்காவில் உள்ள வேலைகளை இந்தியாவில் செய்வதுதான் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் நல்ல லாபகரமாக இருக்கும் என்று பன்சால் தெரிவித்திருக்கிறார்.

எனவே ஆஃப்ஷோர் வேலைகளை அதாவது, அமெரிக்க வாடிக்கையாளர்கள் வழங்கும் வேலைகளை இந்தியாவில் வைத்து செய்வதையே தமது தொலை நோக்காக கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys in talks with clients on US Immigration bill

Infosys today said it is in discussion with clients for a contingency plan to ensure business continuity in the event of the US immigration reforms bill becoming a law.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X