முகேஷ் அம்பானியின் அடுத்த டார்கெட் எபிக் டிவி!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானியின் அடுத்த டார்கெட் எபிக் டிவி!!!
முகேஷ் அம்பானி ஒரு துணிகரமான முதலீட்டாளராக மாறி, அடுத்த மாதத்திலிருந்து தன் ஒளிபரப்பைத் தொடங்கவுள்ள தொலைக்காட்சி சேனலாகிய எபிக் டிவிக்கு, ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். நாட்டின் வரலாறு, நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணங்களைப் பற்றிய நிகழ்ச்சிகளை தற்போதைய ரசனைக்கு ஏற்றவாறு வழங்கும் உயர்ந்த வரையறையைக் கொண்டுள்ள எபிக் டிவி, தனக்கென ஒரு தனியிடத்தைப் பெறக் கூடிய ஒரு சேனலாக நம்பிக்கையளிக்கிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் நிர்மாணிக்கப்பட்ட எபிக் தொலைக்காட்சி நெட்வொர்க், வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனராக விளங்கி, தன் நான்கு வருட பணிக்காலம் முடிவடைந்ததும் அப்பெரும் நிறுவனத்திலிருந்து வெளியேறிய திரு மஹேஷ் சமத் அவர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

அதிகத் தகவல்கள் எதையும் அளிக்க மறுத்த ரிலையன்ஸ் பிரதிநிதி ஒருவர் இதனை ஆமோதித்துள்ளதோடு, இந்த முதலீடு அம்பானியின் "தனிப்பட்ட கொள்ள அளவைக்" கொண்டு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சில தகவலறிக்கைகளின் படி, அம்பானி மற்றும் மஹிந்திரா குழும சேர்மனாகிய திரு ஆனந்த் மஹிந்திரா, இருவரும் இனைந்து இந்நிறுவனத்தின் சுமார் 25 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை கைப்பற்றி உள்ளனர்.

இந்த முதலீடு, அம்பானியின் தனிப்பட்ட நிறுவனங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் போர்ட்ஸ் & டெர்மினல்ஸ் மூலம் செய்யப்பட்டுள்ளது. எபிக் டிவிக்கு சில முக்கிய முதலீட்டாளர்கள் அடங்கிய ஒரு குழு நிதியதவி செய்வதாக முன்பு குறிப்பிட்ட சமத், அவர்களின் பெயர்கள் மற்றும் நிதியாகப் பெறப்பட்ட தொகை போன்றவற்றைக் கூற மறுத்து விட்டார்.

ஏற்கெனவே நெட்வொர்க்18 குழுமத்தில் கணிசமான அளவிலான பங்குகளை சொந்தமாக்கிக் கொண்டிருப்பதனால், எபிக் டிவி அம்பானியின் இரண்டாவது ஒளிபரப்பு முயற்சியாகும்.

ஜனவரி 2012 இல், முகேஷ் அம்பானியால் தொடங்கப்பட்ட ஷெல் நிறுவனம் ஒன்று, ராகவ் பால் அவர்களால் பிரமோட் செய்யப்பட்ட, கடனில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த மீடியா நிறுவனங்களான நெட்வொர்க்18 மற்றும் டிவி18 பிராட்காஸ்டில் சுமார் 2,000 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. இம்மீடியா நிறுவனங்களே சிஎன்பிசி டிவி18, சிஎன்என்-ஐபிஎன் மற்றும் கலர்ஸ் போன்ற சேனல்களை நடத்தி வருகின்றன.

இந்த நெட்வொர்க்18 ஒப்பந்தம், ரிலையன்ஸ் அதன் பெரும்பாலான முதலீட்டை இடிவி சேனல்களிலிருந்து வெளியேற்ற முடிவு செய்து, அதனை டிவி18 பிராட்கேஸ்ட் சுமார் 2,100 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்த பின்னரே, நடைமுறைக்கு வந்துள்ளது. 2008 ஆம் வருடம் ரிலையன்ஸ், இடிவி சேனல்களின் ஹோல்டிங் நிறுவனமான உஷோதயா எண்டர்பிரைசஸில் சுமார் 2,600 கோடி ரூபாயை ஜேஎம் ஃபைனான்ஷியல்ஸ் மூலமாக முதலீடு செய்துள்ளது.

இப்புதிய சேனல் தற்போதைய டிஜிட்டைஸ்ட் கேபிள் டிவி ஈக்கோசிஸ்டம் மற்றும் டிடிஹெச் ஆகியவற்றில் உட்புகுந்து, பெருகிக் கொண்டிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது ஒவ்வொரு நாளும் சுமார் 4-5 மணி நேரம் புத்தம் புதியதான நிகழ்ச்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகள், சுமார் 2-3 மணி நேரம் வரை நீளக்கூடிய நிகழ்ச்சி ஒன்றையும், 1-2 மணி நேரம் வரை ஒளிபரப்பாகக்கூடிய புனைவுகளற்ற விரிவுரை வடிவிலான நிகழ்ச்சி ஒன்றையும் உள்ளடக்கியுள்ளன.

1997 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டு, கச்சா எண்ணையின் சேமிப்பு, கையாளும் முறை மற்றும் வெளியேற்றம் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் போர்ட்ஸ் & டெர்மினல்ஸ் நிறுவனம், 2008 ஆம் ஆண்டில் சுமார் ஒன்பது குழும நிறுவனங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் லாஜிஸ்டிக்ஸ், பொறியியல் மற்றும் கட்டுமானம் தொடர்பான சேவைகளை அளிக்கும் வியாபாரங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்துள்ளது.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களுள், நான்கு நிறுவனங்கள் லாஜிஸ்டிக்ஸ், பைப்லைன் மற்றும் பொறியியல் தொடர்பான சேவைகளை தாய் நிறுவனமான ரிலையன்ஸுக்கு வழங்கி வருகின்றன. எஞ்சியுள்ள நிறுவனங்கள் இன்வெஸ்ட்மென்ட்-ஹோல்டிங் நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. ஜாம்நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் இக்குழுமத்தைச் சேர்ந்த ஜாம்நகர் ரிஃபைனரியில் பெட்ரோலியப் பொருட்களின் வெளியேற்றத்தையும் கவனித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani picks up stake in Epic TV

Billionaire industrialist Mukesh Ambani has turned a venture capitalist and is backing a new television channel Epic TV due to go on air next month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X