கரன்ஸி டெரிவேட்டிவ் நெறிமுறைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது செபி!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கரன்ஸி டெரிவேட்டிவ் நெறிமுறைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது செபி!
ரூபாயின் மதிப்பை தூக்கி நிறுத்த பிரம்மப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும் அரசின் முயற்சிக்கு கை கொடுக்கும் விதமாக, கரன்ஸி டெரிவேட்டிவ்களுக்கான தடைநீக்க நெறிமுறைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது செபி. இதன் மூலம் சந்தையில் கணிசமான அளவிலான யூகங்கள் எவ்வாறாயிருக்கின்றன என்று வெள்ளோட்டம் பார்க்கவும் அது திட்டமிட்டுள்ளது.

கரன்ஸி டெரிவேட்டிவ்கள் உட்பட கேபிடல் சந்தைகளின் மொத்த வட்டத்தையும் நெறிப்படுத்தும் செபி, திங்கட்கிழமை பின்னிரவில் வங்கிகளின் ரெகுலேட்டரான ஆர்பிஐயுடன் ஆலோசனை செய்து, அதன் பின்னரே இம்முடிவை எடுத்துள்ளது.

 

கரன்ஸி டெரிவேட்டிவ் வர்த்தகம், வணிகர்களையும், முதலீட்டாளர்களையும் ரூபாய்-டாலர் உள்ளிட்ட வெவ்வேறு கரன்ஸி ஜோடிகளைப் பற்றிய தங்களின் கண்ணோட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்கின்றது. அவற்றின் எதிர்கால நடவடிக்கைகளைப் பற்றிய பெரும்பாலான யூகங்கள், கடந்த திங்களன்று வரலாறு காணாத அளவுக்கு, யு.எஸ். டாலருக்கு எதிராக சுமார் 61 புள்ளிகள் வரை வீழ்ந்து, கீழ் நோக்கி உந்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பை மேலும் கீழே தள்ளக்கூடும் என்று கருதப்படுகிறது.

 

செபி கரன்ஸி டெரிவேட்டிவ்களின் மீது புரோக்கர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இருக்கக்கூடிய எக்ஸ்போஷரை குறைக்கப்போவதாகவும், டாலர்-ரூபாய் ஒப்பந்தங்களில் தங்களின் மார்ஜின்களை இரட்டிப்பாக்கப் போவதாகவும் ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு புரோக்கருக்கு உண்டான அனைத்து கரன்ஸிகளுக்குமான எக்ஸ்போஷர், அதன் மொத்த எக்ஸ்போஷரிலிருந்து 15 சதவீதமோ அல்லது 50 மில்லியன் யு.எஸ். டாலரோ, இவற்றுள் எது குறைவாக உள்ளதோ அதுவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு, இந்த வரையறை 6 சதவீதம் அல்லது 10 மில்லியன் யு.எஸ். டாலர், இவற்றுள் எது குறைவாக உள்ளதோ அதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நெறிமுறைகள் ஜூலை 11 -லிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் மாற்றங்கள் அனைத்தும், "சமீபத்தில் கடும் நிலையாமை நிலவும் யு.எஸ்.டி - ஐஎன்ஆர் எக்ஸ்சேஞ்ச் ரேட்டைக் கொண்டிருக்கும் மிக மோசமானதொரு காலகட்டத்தை கருத்தில் கொண்டு, ஆர்பிஐயுடன் ஆலோசித்த பின்னரே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செபி கூறியுள்ளது.

புரோக்கர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான தற்போதைய எக்ஸ்போஷர் வரையறைகள் தலா 15 சதவீத மொத்த எக்ஸ்போஷர் அல்லது 50 மில்லியன் யு.எஸ். டாலர் மற்றும் 6 சதவீத மொத்த எக்ஸ்போஷர் அல்லது 10 மில்லியன் யு.எஸ். டாலர், எது உயர்வாக உள்ளதோ அதுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு பிரிவுகளுக்கு வெவ்வேறு மார்ஜின்கள் காணப்படுகின்றன. இம்மார்ஜின்கள் ரூபாய்-டாலர் டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களுக்கான தற்போதைய விலைகளிலிருந்து சுமார் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sebi tightens currency derivative norms to curb rupee fall

With an aim to help government efforts to stem fall in rupee value, Sebi has tightened the exposure norms for currency derivatives to check large scale speculations in the market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X